Showing posts with label போட்டோ.வேலன்.போட்டோ வியூவர்.velan.photo.editor.viewer.free software.. Show all posts
Showing posts with label போட்டோ.வேலன்.போட்டோ வியூவர்.velan.photo.editor.viewer.free software.. Show all posts

வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வியூவர்.

புகைப்படங்களை நாம் சுலபமாக பார்வையிட - திருத்தம் செய்ய - பிரிண்ட் எடுக்க என்று இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நமது கம்யூட்டரில் உள்ள புகைப்பட போல்டரை தேர்வு செய்யுங்கள். தம்ப்நெயில் வியுவில் அனைத்தும் தெரியவரும்.இதில் ஒவ்வொரு படத்திற்கு அருகில் நாம் கர்சரை கொண்டுசெல்ல படம் பெரிய அளவில் நமக்கு தெரியும்.
தேவையான புகைப்படத்தை தேர்வு செய்ததும் உங்களுக்கு இடதுபுறம் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நிறைய டூல்கள் இருக்கும்.நமக்கு தேவையான டூலை தேர்வு செய்து மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதிலிருந்து நேரடியாக பிரிண்ட் செய்யும் வசதிஉள்ளதால்தேவையான புகைப்படத்தை தேவையான அளவில் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதுதவிர நாம் புகைப்படங்களை மொத்தமாக ரீ-சைஸ் செய்துகொள்ளலாம்.தேவையான அளவிற்கு அதனை செட் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


சின்ன சாப்ட்வேரில் அதிக வசதிகள் இருப்பது ஆச்சரியமே..பதிவிறக்கி பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...