ஸ்கிரீன் ரெக்கார்டர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் கீ ஸ்டொக் ரெக்கார்டர் பற்றி கேள்விபட்டு இருக்கின்றீர்களா? நமது கீ போர்டில் எந்த எந்த கீ யை நாம் தட்டச்சு செய்கின்றோமோ அந்த கீ களின் ஸ்டொக்கினை இந்த சாப்ட்வேர் தனியே சேமித்துவைத்துவிடும். தேவைபடும் சமயம் நாம் அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம். 1 எம.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் இந்த பைலை எங்கு சேமிக்க விரும்புகின்றமோ அந்த இடத்தை குறிப்பிட வேண்டும். அதைப்போல இந்த பைலுக்கு நாம் விருப்ப பட்ட பெயரை வைத்துவிடலாம்.இப்போது நாம் இதில் உள்ள Begin Recording கிளிக் செய்துவிட்டால் இந்த சாப்ட்வேர் வேலை செய்ய துவங்கிவிடும். தேவையை முடிந்ததும் இதில் உள்ள Stop Recording கிளிக் செய்தால் போதுமானது. இப்போது நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நாம் தட்டச்சு செய்த கீ ஸ்டோக்குகள் அங்கு இருக்கும்.இந்த சாப்ட்வேரினால் என்ன நல்ல பயன் என்றால் பிறர் என்ன தட்டச்சு செய்தார்கள் என்பதனை நாம் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.அதைப்போல் இதனால் என்ன கெடுதல் என்றால் நாம் தட்டச்சு செய்ததையும் பிறர் எளிதில் அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

