Showing posts with label வேலன்.சிலிண்டர். எரிவாயு.கேஸ்.இன்டேன்.எச்பி.பாரத்கேஸ்.velan.hpgas.cylinder.indane.bharat gas.. Show all posts
Showing posts with label வேலன்.சிலிண்டர். எரிவாயு.கேஸ்.இன்டேன்.எச்பி.பாரத்கேஸ்.velan.hpgas.cylinder.indane.bharat gas.. Show all posts

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட

இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் முறை இப்போது வந்துள்ளது. அதன் மூலம் நாம் எளிமையாக பதிவு செய்வதுடன் ஆன்லைனிலும் பணத்தினை செலுத்திவிடலாம். ஆன்லைனில் செலுத்துவதால் சிலிண்டர் டெலிவரி செய்பவருக்கு அதிக பணம் கொடுக்கவேண்டியதில்லை. மேலும் நாம் ஆன்லைனில் பணம் செலுத்துவதால் வரும் கட்டணத்தில் நமக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.இனி ஆன்லைனில் எரிவாயு பதிவு செய்வதனையும் -ஆன்லைனில் பணம் கட்டுவதனையும் இப்போது காணலாம். முதலில் நீங்கள் எந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர் வாங்குகின்றீர்களோ அந்த நிறுவன இணையதளத்தினை திறந்துகொள்ளவும். நான் HP GAS இணையதளத்தின் இணையதளத்தின் பக்கத்தினை திறந்துள்ளேன்.உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும்.
இதில் நியூ யூஸர் என்பதனை கிளிக்செய்யவும். உங்களுடைய கேஸ் புக் எண்ணினை தட்டச்சு செய்திடவும். பின்னர் உங்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும்-நீங்கள் வாங்கும்  கேஸ் எஸென்சியின் பெயரை சர்ச் பாக்ஸில் தேடவும். உங்கள் எஸென்சியின் பெயர் வந்ததும் ;;ஒ.கே.தரவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்கள் கேஸ் பதிவு எண்ணை தட்டச்சு செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


உங்கள் இமெயில முகவரி கொடுத்து பின்னர் உங்கள் விருப்பமான பாஸ்வேர்ட் தரவும். இறுதியாக ஒ.கே. தரவும்.


இப்போது உங்களுக்கு உங்கள் விவரம்அடங்கிய விண்டோ கிடைக்கும்.இதில் உங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் அதில் நிறைய விவரங்கள் கொடுத்திருப்பார்கள். நீங்கள் சிலிண்டர் பதிவு செய்யவிரும்பினால் அதற்கான விண்டொவினை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எரிவாயு உருளையை ஆன்லைனில் பணம் செலுத்தி வாங்கப்போகின்;றீர்களா -அல்லது எரிவாயு உருளை சப்ளை செய்யும்போது பணம் செலுத்தி வாங்கப்போகின்றீர்களா என முடிவு செய்து தேவையான ஆப்ஷனை கிளிக் செய்திடவும். 


இப்போது வரும் விண்டோ வில் ஆப்ஷனை ஓ.கே. செய்து கிளிக் செய்யவும்.


இப்போது வங்கிகள் விவரம் அடங்கிய பக்கம் ஓப்பன் ஆகும். நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியினை தேர்வு செய்யவும்.

 உங்கள் வங்கியின் ஏடிஎம் கார்ட் அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தும் விவரம் தேர்வு செய்து ஒகே தரவும்.பணம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து வரவு வைக்கப்பட்டதும் உங்களுக்கு பணம் செலுத்தியதற்கான விவரம் கிடைக்கும்.
சிலிண்டர் பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு விடும். வினியோகத்தில் ஏதாவது குறை இருப்பின் நீங்கள் தொலைபேசி மூலமாகவோ - மெயில் மூலமோ தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...