பெரிய பெரிய அப்ளிகேஷன்கள்-சாப்ட்வேர்கள் செய்யும் வேலையை ஒரு சின்ன சாப்ட்வேர் அனாசயமாக செய்துவிடும். அந்த வகையில் போட்டோஷாப்புக்கு மாற்றாக இந்த சின்ன சாப்ட்வேர் உபயோகப்படுகின்றது. போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான டூல்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.360 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான படத்தினை தேர்வு செய்யவும். மேல்புறம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு File;.Edit. Image,Adjustment.Layer.Filter.Select.View.Window மற்றும் Help என நிறைய டேப்புகள் உள்ளது. ஒவ்வொரு டேப்பிலும் கிளிக் செயதுவரும் பாப்அப் மெனுக்களை நாம் சுலபமாக பயன்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதன் இடது புறம் பார்ததீர்களேயானால் போட்டோஷாப்பில வரும் அனைத்து டூல்களும் இதில் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். இதில் இன்னும் ஒரு விஷேஷமான கூடுதல் தகவல் என்னவென்றால் இதனை உருவாக்கியவர் தற்போது அமெரிக்காவில் வசித்தாலும் அவர் இந்தியர் - தமிழர் - பெயர் மாதவன்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.