சென்ற பதிவில் பதிவிட்ட பழைய தமிழ் வீடியோ பாடல்களை பதிவிறக்க என்கின்ற பகுதிக்கு நண்பர்கள் திரு.ரவிச்சந்திரன் மற்றும் டாக்டர் திரு.கந்தசாமி அவர்கள் பாடல்களை எப்படி பதிவிறக்குவது என்று கேட்டிருந்தார்கள்.
வேலன்ஜி,
எனக்கு பிடித்த பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எனது கணினியில் எப்படி தரவிறக்கம் செய்வது என சொன்னால் நல்லது
எனக்கு பிடித்த பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எனது கணினியில் எப்படி தரவிறக்கம் செய்வது என சொன்னால் நல்லது
ரவிசந்திரன் கேள்வியை நானும் வழிமொழிகிறேன்.
இருவரின் விருப்பத்திற்கு இணங்க பாடல்களை பதிவிறக்கும் வழிமுறைகளை இங்கு பதிவிடுகின்றேன்.முதலில் நீங்கள் Real one Player என்கின்ற பிளேயரை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இப்போது பழைய தமிழ் வீடியோ பாடல்கள் தளம் செல்லவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நீங்கள் பதிவிறக்க விரும்பும் பாடல்மீது கர்சரை வைத்து கிளிக் செய்யவும்.நான் அன்பே வா பாடலை கிளிக் செய்துள்ளேன்.இப்போது வீடியோ ஓட ஆரம்பிக்கும். அப்போது உங்களது வீடியோ மூலையில் Download This Video என்கின்ற பாப்அப் மெனு கிடைக்கும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
அதை கிளிக் செய்ததும் உங்களுக்கு உங்களது பாடல் டவுண்லோடு ஆக ஆரம்பிக்கும்.
டவுண்லோடு முடிந்ததும் மை டாக்குமெண்ட்ஸ், மைவீடியோ வில் சென்று பார்த்தால உங்களுக்கான வீடியோ படம் அங்கு காத்திருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.