சில பதிவுகளுக்கு முன் கருத்துரையில் வாசக நண்பர் ஒருவர் ஸ்டார்ட் மெனுவில் நமது பெயரை கொண்டுவர முடியுமா என்று கேட்டிருந்தார். அவருக்கான பதிவு இது. 357 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு சின்ன ஐ-கான் டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அதில் உள்ள Show என்பதனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.இதில் உள்ள பாக்ஸில் உங்களுக்கு விருப்பமான பெயரை தடடச்சு செய்யுங்கள். நான் எனது மகளின் பெயரை தட்டச்சு செய்துள்ளேன்.
Change Text என்பதை கிளிக் செய்து பெயரை தட்டச்சு செய்யுங்கள். இப்போது உங்களுககு Start என்கின்ற பெயர் மாறி நீங்கள் தட்டச்சு செய்த பெயர் வந்துள்ளதை காண்பீர்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பயன்படுத்திப்பாரு்ஙகள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


