Showing posts with label 1000 மர்பி விதிகள். Show all posts
Showing posts with label 1000 மர்பி விதிகள். Show all posts

வேலன்:-1000 மர்பி விதிகள்

நமக்கு வாழ்க்கையில் சில அனுபவங்கள் கிடைக்கும்.
அதே போல் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் கிடைக்கும்.
ஒருவருக்கம் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு மற்றவர்
வாழ்க்கையை ரசிக்கலாம்.உணரலாம். இங்கு மர்பி விதிகளை
அதைப்போல் ஒருவர் தொகுத்துள்ளார். அதை உங்களுக்கு
இங்கு அளிக்க உள்ளேன்.


உதாரணத்திற்கு சில:-
(1000 விதிகளில் சில பிடித்த விதிகள்.
இதில் உள்ள எண்ணை முதலில் குறிப்பிட்டுள்ளேன்)

19.நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கியவுடன்
அதைவிட மலிவாக இன்னொரு இடத்தில் அந்த பொருள் கிடைக்கும்(அது
சரியாக உங்கள் மனைவின் கண்ணில் மாட்டும்)

26.முட்டாள்களுடன் விவாதம் வைத்துக்கொள்ளாதீர்கள்.பார்ப்பவர்களுக்கு
(யார் முட்டாள் என) வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.

43.உங்கள் நகத்தை வெட்டிய ஒரு மணிநேரத்தில் அதைவைத்து செய்ய
வேண்டிய வேலை உங்களுக்கு வந்து சேரும்.

64.ஒருவரிடம் 300 கோடி நட்சத்திரங்கள் உள்ளது என சொல்லுங்கள்.
அவர் நம்பிவிடுவார். ஆனால் பக்கத்தில் உள்ள டேபிளில் இப்போதுதான்
வண்ணம் பூசப்பட்டுள்ளது என சொல்லுங்கள். தொட்டுப்பார்க்காமல்
விட மாட்டார்.

127. ஒரு சாப்ட்வேரை 1000 பேர் சேர்ந்து சோதனை செய்திருந்தாலும் அதை
காசு கொடுத்து வாங்குபவரே அனைத்து பிழைகளையும் கண்டுபிடிப்பார்.

138. எந்த ஒரு கணிணி உபயோகிப்பாளர்களுக்கும் தேன்வந்து பாயும்
மழலை வாரத்தை-"அப்பா:- இந்த "C " பார்மெட் செய்யப்படுகின்றது என
கணிணி செல்லுகின்றதே அதன் அர்த்தம் என்ன?" என குழந்தை கேட்பது
தான்.


இதர விதிகள் கீழே:-

Murphys Law

பதிவுகளை பாருங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய PSD பைலுக்கான புகைப்படம்:-

டிசைன் செய்தபின் வந்துள்ள படம் கீழே:-
பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


இதுவரை 1000 விதிகள் படித்தவர்கள்:-

web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...