போட்டோக்களை வைத்துதான் எத்தனை எத்தனை சாப்ட்வேர்கள். இன்று அத்தகைய சாப்ட்வேர்களில் ஒன்றை பார்க்கலாம். ஆர்ட் ஸ்டுடியோ என்று பெயருள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள ஓப்பன் கிளிக் செய்து தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள். அடுத்து உள்ள Effects கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 12 வகையான எபெக்ட்களும் ஒவ்வொன்றிலும் 10க்கும் மேற்பட்ட டிசைன்களும் உள்ளன. கீழே கேமரா மாடலில் எடுத்த புகைப்படம் காணலாம்.சாதாரண புகைப்படம் கீழே-
கேமராவில் ப்ரிவியு பார்பது போல் டிசைன்செய்தபடம் கீழே-
நம் புகைப்படம் வைத்து தியேட்டரில் படம் ஓடுவதுபோல் வைக்கலாம். இந்தபடத்தைபாருங்கள் இரண்டுபேர்தான் பார்க்கின்றார்கள். (பின்னே -நாமெல்லாம் நடித்தால் இரண்டுபேர்தானே பார்ப்பார்கள்)
சாதாரண புகைப்படம் கீழே-
அதையே டிசைன்செய்தபின் வந்த புகைப்படம் கீழே-
மேலும் சில மாடல் புகைப்படங்கள் கீழே-
.ம்...அப்புறம். இந்த சாப்ட்வேரை 30 முறை உபயோகிக்கலாம். மொத்த படங்களையும் தேர்வு செய்துகொண்டு ஒருமுறை திறந்து அனைத்து படங்களுக்கும் டிசைன்செய்து கொள்ளுங்கள். அடுத்த முறை ஓ,எஸ் மாற்றும் வரை இதை 30 முறை பயன்படுத்தலாம். ஓ,எஸ் மாற்றியபின மீண்டும் 30 முறை பயன்படுத்தலாம்.
பதிவினை பாருங்கள் கருத்தினை கூறுங்கள்
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்










