வேலன்-கம்யூட்டரில் டீ-பிராக்மெண்ட்செய்வது எப்படி?

வேலன்:- டீ பிராக்மெண்ட் செய்வது எப்படி?

நாம் நமது கம்யூட்டரை நீண்டகாலமாக

பயன்படுத்துவோம். ஆனால் டீ-பிராக்மெண்ட்

செய்தோம் என்றால் இல்லை. மற்றவர்கள்

யாராவது நம்மை நமது கம்யூட்டரில் நீங்கள்

டீ-பிராக்மெண்ட் செய்தீர்களா ? என கேட்டால்

நாம் திருதிருவென முழிப்போம். முதலில்

டீ-பிராக்மெண்ட் என்றால் என்றவென்று

பார்க்கலாம்.

நம்மிடம் உள்ள புத்தக அலமாரியில் நிறைய

புத்தகங்கள் இருக்கும். வைரமுத்து கவிதைகள்,

இந்திரா செளந்திரராஜன் கதைகள், கண்ணதாசனின்

அர்த்த முள்ள இந்து மதம் - 10 பாகங்கள் என

அனைத்தும் இருக்கும். ஆனால் முறையாக

கவிதைகள், கதைகள், பாடல்கள் என இருக்கும்

என்றால் இருக்காது. கவிதைகளுடன் கதைப்

புத்தகங்கள் கலந்து இருக்கும். கண்ணதாசனின்

அர்த்த முள்ள இந்துமதம் புத்தகங்களின் நடுவில்

இந்திராசெளந்திரராஜன் புத்தகம் கலந்து

இருக்கும். தேடும் நமக்கு டென்ஷன்தான் மிஞ்சும்.

இதே டென்ஷன்தான் நமது கம்யூட்டருக்கும்

ஏற்படும். நமக்கு டென்ஷன் ஆனால் சரி. ஆனால்

கம்யூட்டருக்கு டென்ஷன் ஆனால்...ஒன்றும்

ஆகாது நாம் கேட்கும் பைலை தேடி தர அதிக

நேரம்எடுத்துக்கொள்ளும்.. சரி நாம் நமது

கம்யூட்டரில் டீ-பிராக்மெண்ட் செய்தால் அதனால்

நமக்கு நமது கம்யூட்டருக்கு என்ன பலன்

ஏற்படும். ஒரு பெரிய அறையில் புத்தகங்களை

மானாவாரியாக இறைத்துவைத்து இருந்தால்

எப்படி இருக்கும் என கற்பனை செய்து

கொள்ளுங்கள். ஒரு ஆசிரியரின் புத்தகம்

தேவை என தேடினால் நாம் அனைத்து

புத்தகத்தையும் மேலும் கலைத்துப்பார்க்க

வேண்டிவரலாம். அதுபோல் நமது Harddisk

-ல் உள்ள டிரைவில் நமது பைல்கள்

மானாவரியாக இறைந்து இருக்கும். ஒரு

பைலைக்கும் அடுத்தபைலுக்கும் நிறைய

இடம் இருக்கும். இதனால் இடம் வீணாவதுடன்

தேடும் நேரமும் அதிகம் செலவாகும். இதை

தவிர்க்க டீ-பிராக்மெண்ட் செய்தோமேயானல்

நமது கம்யூட்டரில் நாம் தேர்வு செய்யும்

டிரைவில் உள்ள பைல்களை ஒழுங்காக

அடுக்குவதுடன், நமக்கு தேவையான இடத்தையும்

அதிகபடுத்திதரும். ஒரு முறை டீ-பிராக்மெண்ட்

செய்து உங்கள் கணிணியின் வேகம் அதிகரிப்பதை

நாம் கண்கூடாக காணலாம். சரி எப்போழுது

டீ-பிராக்மெண்ட் செய்யலாம்.?

வாரம் ஒரு முறை நாம் வேலை ஏதும்

இல்லாத சமயம் டீ-பிராக்மெண்ட் செய்யலாம்.

இனி டீ-பிராக்மெண்ட் நமது கணிணியில்

எப்படி செய்வது என காணலாம்.

முதலில் Start கிளிக் செய்யவும். உங்களுக்கு

கீழ் கண்ட வாறு சாரளம் திறக்கும்.


அதில் Programme - ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு

கீழ்கண்டவாறு உங்கள் கணிணியில் உள்ள

சாரளம் திறக்கும். இதில் முதலில் உள்ள

Accssories கிளிக் செய்து அதில் System Tools

தேர்வு செய்யவும்.அதில் உள்ள Disc Defragment தேர்வுசெய்தால் கீழ்கண்டவாறு

உங்கள் கணிணியில் உள்ள மொத்த டிரைவ்களும்

திறக்கும் . அதில் முதலில் உள்ள C-Drive தேர்வு செய்து

பின் அதன் கீழே உள்ள Defragment என்கிற காலத்தை

செல்க்ட்செய்யவும்.

இப்போழுது உங்களுக்கு கீழ்கண்டவாறு தெரிய

ஆரம்பிக்கும். அதை அப்படியே விட்டுவிடுங்கள்.

நீங்கள் நீண்ட நாளுக்கு பிறகு டீ-பிராக்மெண்ட்

செய்வதால் கம்யூட்டர் அதிகநேரம் எடுத்துக்

கொள்ளும்.(சமயங்களில் இரண்டு மணிநேரம்

கூட எடுத்துக்கொள்ளும்)

இறுதியாக உங்களுக்கு கீழ்கண்டவாறு உங்களுக்கு

தகவல் வரும் .

அதை close செய்துவிட் டு (அட எங்கே


போகிறீர்கள் ? இருங்கள் ) அதுபோல் அடுத்தடுத்த

Drive களையும் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து

ஒவ்வொன்றாக டீ-பிராக்மெண்ட் செய்து விடவும்.

அனைத்து டிரைவ்களும் டீ-பிராக்மெண்ட் செய்து

முடித்தபின் கம்யூட்டரை ஒரு முறை ரீ-ஸ்டார்ட்

செய்திடவும்.

இது புதியவர்களுக்காக போட்டதால் பதிவு

அதிக நீளமாக வந்துவிட்டது.

ஒருமுறை செய்து பாருங்கள். வித்தியாசத்தை

உணருங்கள்.கருத்துக்களை பதிவிடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


வலைப் பூவில் உதிரிப் பூ
நீங்கள் யாருக்காவது COURIER அனுப்பினால் அதனுடைய ரசீதை பத்திரமாகவைக்கவும். நாம் அனுப்பிய COURIER அனுப்பியவருக்கு சென்று சேரவில்லை யென்றால் நாம் மீண்டும் சென்று விசாரிக்க அந்த ரசீது தேவைபடலாம்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

Tech Shankar said...

Thanks

வேலன். said...

நண்பர் தமிழ்நெஞசம் கூறியது:-
Thanks//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

Thank you for the info

malar said...

சேது பார்க்கிறேன் .இதனால் என்ன பயன்

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர் கூறியது:-

Thank you for the info//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

சேது பார்க்கிறேன் .இதனால் என்ன பயன்//

சேது பார்க்கிறேன்:- செய்து பார்க்கின்றேன்.

நண்பரே ...நீங்கள் செய்து பார்த்து சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்:,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...