கம்யூட்டரில் சுலபமாக தட்டச்சு செய்வது எப்படி?EASY WAY TO TYPE IN COMPUTER



கம்யூட்டரில் சுலபமாக தட்டச்சு செய்வது எப்படி? 
CHARACTER MAP



புதியவர்களுக்காக

கம்யூட்டரில் சுலபமாக தட்டச்சு செய்வது எப்படி? 
CHARACTER MAP

கணிணியில் தட்டச்சு செய்ய நமக்கு டைப்ரைட்டிங்

தெரியவேண்டிய அவசியமில்லை. நாம் நமது

கணிணியில் உள்ள Character Map மூலம் சுலபமாக

தட்டச்சு செய்யலாம். இதன் மூலம் நாம்

வேர்ட்,எக்செல்,நேட் பேட், வேர்ட் பேட் மற்றும்

போட் டோஷாப்பிலும் இதை சுலபமாக பயன்

படுத்தலாம். இனி Character Map மூலம் நாம்

சுலபமாகஎவ்வாறு தட்டச்சுசெய்வது என

 பார்க்கலாம்.முதலில் Start-Programs-Accesseries-

System Tool-Character Map என வரிசையாக

 கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட வாறு

விண்டோ ஒன்று ஓப்பன் ஆகும்.


அதில் உள்ள Character Map -ஐ மவுஸால் கிளிக் 

செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ளவாறு 

விண்டோ ஓப்பன் ஆகும்.



அதில் உள்ள Font  எதிரில் உள்ள கீழ்நோக்கிய

அம்பு குறியை நீங்கள் கிளிக் செய்தால் உங்கள்

கணிணியில் உள்ள எழுத்துருக்கள்  (Font)

அனைத்தும் உங்களுக்கு தெரியவரும். 


நான் இங்கு Arial Font (ஆங்கில எழுத்துரு)

தேர்வுசெய்துள்ளேன். நீங்கள் தட்டச்சு செய்ய

வேண்டிய வார்த்தைகளை இங்குள்ள 

கட்டங்களில் இருந்து தேர்ந்தேடுங்கள். 

உங்கள் மவுஸின் கர்சரானது அந்த எழுத்துக்களின்

மீது கொண்டு செலலும்போது அந்த எழுத்தானது

பெரியதாக நமக்கு தெரியவரும்.



உங்களுக்கு தேவைப்படும் எழுத்தின் மீது 

கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்யுங்கள். இப்போது

கீழே உள்ள விண் டோவை கவனியுங்கள்.


நீங்கள்தேர்வு செய்த எழுத்தானது  Characters to Copy

எதிரில் உங்களுக்கு தெரியவரும். 

மற்றொரு முறையிலும் நாம் நமது வார்த்தைகளை

தேர்வு செய்யலாம். உங்கள் மவுஸ் கர்சரை

தேவைப்படும் எழுத்தின் மீது வைத்து Select -ஐ

கிளிக் செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொரு 

எழுத்தாக கிளிக் செய்து  Select

அழுத்துங்கள்.உங்கள் வார்த்தைகள் 

அனைத்தும்  Select செய்து முடித்ததும்

அதன் பக்கத்தில் உள்ள Copy -ஐ கிளிக்

செய்யுங்கள். இப்போது உங்களுக்கு 

நீங்கள் தட்டச்சு செய்த பகுதி ரெடி. அதை

உங்களுக்கு வேண்டிய இடத்தில் வேர்ட்,

எக்செல்,நேட் பேட், வேர்ட் பேட் மற்றும்

போட்டோஷாப்பில் சுலபமாக அதை பேஸ்ட்

செய்யலாம்.  இதை உபயோகித்துப்பாருங்கள்.

மறக்காமல் ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


வலைப்பூவில் உதிரிப்பூக்கள்.

நாம் வீட்டில் குப்பை சேர்ந்தால் என்ன செய்வோம்.

அதை பெருக்கி குப்பை தொட்டியில் போடுவோம். 

அதில் அதிகமான குப்பை சேர்ந்தவுடன் அதை 

குப்பை வண்டியில் எடுத்துசென்று கொட்டுவோம்.

ஆனால் அதே குப்பையை நமது குப்பை தொட்டியில்

போடாமல் பெருக்கி எடுத்தவுடன் குப்பைவண்டியில்

போடலாம். அதில் ஒரு சின்ன சங்கடம் உள்ளது. 

தவறுதலாக குப்பையில் நாம் தவறவிட்ட சாவி,

கணக்குவிவர பட்டியல் , நகைகளை குப்பைத்

தொட்டியில் இருந்து நாம் மீண்டும் எடுத்து

விடலாம். ஆனால் குப்பை வண்டியில்

 போட்டால்போனதுபோனது தான் .

(என்னடா இவன் உதிரிப்பூவில்

கதை சொல்கின்றானே என எண்ண 

வேண்டாம் . ஒருசின்ன உதாரணத்திற்காக

 சொன்னேன். ) நமது கம்யூட்டரில் உள்ள 

பைல்களை டெலிட் செய்தால்

அது நேரே ரீ-சைக்கிள் பின் போய் சேரும். அதே 

பைல்களை டெலிட் செய்யும் போது Shift+Delete

அழுத்தினால் அது மாயமாய் மறைந்து விடும்.

மேலே சொன்ன குப்பை வண்டி கதைதான். ஒரு

பைலை நீங்கள் நீக்கும் போது பின்னர் அது

 உங்களுக்குதேவைபடும் என்றால் அதை

 Delete மட்டும் செய்யுங்கள்.

அந்த பைல் ரீ-சைக்கிள் பின்னுக்கு

சென்றுவிடும். அது நிரந்தரமாக

 தேவையில்லையென்றால் அதை 

Shift+Delete செய்து அழித்து விடுங்கள்.


இந்தப் பதிவின் நன்றிக்குரியவர்கள்


web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

தியாகராஜன் said...

எளிமையான விளக்கம்.
நன்றி.

அன்புடன் அருணா said...

Fantastic post Velan!!!
Well done!!!
anbudan aruNaa

Tech Shankar said...

கேரக்டர் மேப் வழியாக தட்டச்சு செய்தால் productivity இருக்குமா சார்?

சில சிறப்புக் குறியீடுகள், symbolsஐ அங்கே இருந்து காப்பி-பேஸ்ட்டிருக்கேன்.

அந்த symbols ஐ, character மேப்பில் இருந்து எடுப்பதே சாலச்சிறந்தது.

நன்றியுடன்
நானே.

சவுக்கடி said...

அது சரி,
தனி எழுத்தை நீங்கள் சொல்வதுபோல் அடிக்கலாம்.
ஆனால், கூட்டெழுத்துக்களை-
எடுத்துக்காட்டாக-
'மெ' என்ற எழுத்தை எப்படி அடிப்பது?

அப்புறம்...
நீங்கள் சொல்லும் முறையில் தட்டச்சு செய்தால் -

நேரமும் உழைப்பும் மிகுதியாகத தேவைப்படுமே?

அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு விடுமே!

Tech Shankar said...

நீங்கள் இப்படி 6 வரிகளில் சொன்னதை நான் ஒரே வார்த்தையில் Productivity என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

இருவரும் ஒரே அலைவரிசையில் இருக்கிறோம்.

அவர் நாளை என்ன பதில் சொல்லக் காத்திருக்கிறாரோ? பயமாக உள்ளது.

அடி போட்டால் வாங்கிக்க வேண்டியதுதான். @#^^#$^^#$^#&$%&^$%$@#$!@#$!@


//அப்புறம்...
நீங்கள் சொல்லும் முறையில் தட்டச்சு செய்தால் -

நேரமும் உழைப்பும் மிகுதியாகத தேவைப்படுமே?

அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு விடுமே!

ஸனு செல்லம் said...

மிக்க நன்றி////

Senthil said...

very much helpful


thanks

Muthu Kumar N said...

Velan,

I think you should choose the Heading Like

"How to Find Symbols and Logos Inside your computers(Webdings)".

It will be better for this posting.

I feel the same like our friend “Tamil Nenjam”.

And character map is not for typing, its very useful to find inside the fonts what are other special characters like symbols and logos.

You forgot to put the Webdings how appear inside the character map.

Otherwise its good for beginners.

Loose flowers also good for biginners.

Best wishes,

Muthu Kumar.N

வேலன். said...

தியாகராஜன் கூறியது...
எளிமையான விளக்கம்.
நன்றி.

//

Thanks Thiyagarajan sir..

velan

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
Fantastic post Velan!!!
Well done!!!
anbudan aruNaa//

எனது பதிவில் முதல்முதலாக வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
கேரக்டர் மேப் வழியாக தட்டச்சு செய்தால் productivity இருக்குமா சார்?

சில சிறப்புக் குறியீடுகள், symbolsஐ அங்கே இருந்து காப்பி-பேஸ்ட்டிருக்கேன்.

அந்த symbols ஐ, character மேப்பில் இருந்து எடுப்பதே சாலச்சிறந்தது.

நன்றியுடன்
நானே.//

தாங்கள் பதிலுக்கு பதில் அப்பீலே கிடையாது.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

savuccu கூறியது...
அது சரி,
தனி எழுத்தை நீங்கள் சொல்வதுபோல் அடிக்கலாம்.
ஆனால், கூட்டெழுத்துக்களை-
எடுத்துக்காட்டாக-
'மெ' என்ற எழுத்தை எப்படி அடிப்பது?

அப்புறம்...
நீங்கள் சொல்லும் முறையில் தட்டச்சு செய்தால் -

நேரமும் உழைப்பும் மிகுதியாகத தேவைப்படுமே?

அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு விடுமே//

மே மாதம் அடித்துப்பார்த்தேன் சரியாகவே வந்தது. புதியவர்களுக்காகவே பதிவிட்டுள்ளேன். தட்டச்சு தெரிந்துகொள்ளவது தான் சுலபமான வழி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
நீங்கள் இப்படி 6 வரிகளில் சொன்னதை நான் ஒரே வார்த்தையில் Productivity என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

இருவரும் ஒரே அலைவரிசையில் இருக்கிறோம்.

அவர் நாளை என்ன பதில் சொல்லக் காத்திருக்கிறாரோ? பயமாக உள்ளது.

அடி போட்டால் வாங்கிக்க வேண்டியதுதான். @#^^#$^^#$^#&$%&^$%$@#$!@#$!@


//அப்புறம்...
நீங்கள் சொல்லும் முறையில் தட்டச்சு செய்தால் -

நேரமும் உழைப்பும் மிகுதியாகத தேவைப்படுமே?

அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு விடுமே!//

நான் ஆசிரியர் அல்ல.உங்களை அடிக்க.நான் உங்களில் ஒருவன் - உங்களுக்கான ஒருவன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வா

வேலன். said...

கேப்டன் ஜெகன் கூறியது...
மிக்க நன்றி////

நன்றி கேப்டன் ஜெகன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Senthil கூறியது...
very much helpful


thanks//

நன்றி செந்தில் அவர்களே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Velan,

I think you should choose the Heading Like

"How to Find Symbols and Logos Inside your computers(Webdings)".

It will be better for this posting.

I feel the same like our friend “Tamil Nenjam”.

And character map is not for typing, its very useful to find inside the fonts what are other special characters like symbols and logos.

You forgot to put the Webdings how appear inside the character map.

Otherwise its good for beginners.

Loose flowers also good for biginners.

Best wishes,

Muthu Kumar.N//

நீண்ட விளக்கத்திற்கு நன்றி நண்பரே...
நான் புதியவர்களுக்காகவே இந்த வசதியும் கணிணியில் இருக்கின்றது என அவர்கள் அறிவதற்காக பதிவிட்டுள்ளேன்.
பதில் கருத்துரையிட தாமதமானதற்கு அனைவரிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...