வேலன்:-பிரதமமந்திரியின்வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.


பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
வேலையில்லா அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்
வரப்பிரசாதமான திட்டமாகும்.
நீங்கள் படித்திருக்கலாம்(அட...பெரிய படிப்பெல்லாம்
இல்லைங்க எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்)
ஆனால் சொந்தமாக தொழில் துவங்கி நீங்கள்
நாலுபேருக்கு வேலை கொடுக்கலாம். உங்கள் வருவாயை
பெருக்கிக் கொள்ளலாம். நீங்கள் வேலைக்கு சென்று
உங்கள் மனைவி வீட்டில் சும்மா இருக்கலாம். இன்றைய
கால கட்டத்தில் ஒருவரது சம்பளம் நிச்சயம் பற்றாக்குறை
தான். அவர்களுக்கு தெரிந்த தொழிலை செய்து அவர்கள்
நாலு பேருக்கு வேலை கொடுக்கலாம். உங்கள் மைத்துனர்
வேலைவெட்டிஇல்லாமல் சும்மா சுற்றிவரலாம்.உங்கள்
மேற்பார்வையில் அவருக்கு தொழில்தொடங்கி கொடுக்கலாம்.
இதில் வயது வரம்பு இல்லாதது நமக்கு கிடைத்த கூடுதல்
வசதி.சரி இதில் எவ்வளவு ரூபாய் அதிகபட்சமாக கடன்
வாங்கலாம்? நீங்கள் பொருள் உற்பத்தி செய்தால்
ரூபாய் 25,00,000 லட்சமும் சேவை பிரிவாக இருந்தால்
ரூபாய் 10,00,000 லட்சமும் பெறலாம். நீங்கள் உற்பத்தி
பிரிவில் 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும்,
சேவைபிரிவில் 5 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்
களுக்கும்தான்நீங்கள் எட்டாம் வகுப்பு தேறியிருக்க
வேண்டும்.

கடன் கொடுக்க வங்கி ரெடி. என்ன தொழில் செய்யலாம்.
உங்களுக்கு எந்த தொழிலில் திறமை உள்ளதோ அதற்கு
வாங்கலாம்.

சரி எந்த தொழில்களுக்கு கொடுக்கமாட்டார்கள்?
மது, சிகரெட், இறைச்சி, ஆடு மாடு வளர்ப்பு.கோழிவளர்ப்பு,
மீன்வளர்ப்பு. ப்ன்றி வளர்ப்பு, விற்பனை தள்ளுபடி பெறும்
காதி பொருட்கள் என சுமார் 20 பொருட்களை தவிர
மற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் தொடங்கலாம்.
இந்த தொழில் பற்றிய விவரங்களை கீழே கொடுத்துள்ள
விண்ணப்பம் வாங்கும் முகவரியில் சென்று விசாரித்துக்
கொள்ளலாம்.

விண்ணப்பம வாங்கிவிட்டீர்கள். தொழிலையும் முடிவு
செய்துவிட்டீர்கள். அடுத்து என்ன செய்வது....

விண்ணப்பங்களை இரண்டு வகையில் நீங்கள்
விண்ணப்பிக்கலாம். ஒன்று நீங்கள் விண்ணப்பம்
வாங்கிய மாவட்ட தொழில்
மையம்,/ கே.வி.ஐ.சி/ கே.வி.ஐ.பி/, டி.ஐ.சி /
சேர்க்கலாம்.
விண்ணப்பம் வங்கியில் வாங்கியிருந்தால்
வங்கியிலேயே சமர்பிக்கலாம்.
உங்களைப்பற்றி -உங்கள் வங்கி மேலாளருக்கு
தான் நன்கு தெரியும். அதனால் நீங்கள் உங்கள்
வங்கி மேலாளரை தொடர்புகொண்டு
நீங்கள் செய்யபோகும் தொழில் - அதில் வரும்
வருமானம்-லாபம்- அனைத்தையும் அவரிடம்
தெளிவாக விளக்குங்கள். அவரிடம் நீங்கள்
தொழிலைபற்றி விளக்குவதிலேயே உங்கள்
வெற்றி உள்ளது. உங்களுக்கு தேவைபடும்
ரூபாயை தயங்காமல் கேளுங்கள். சில நல்ல
மேலாளர்கள் உங்கள் தொழில் திட்டம் சரியாக
இருந்தால் நீங்கள கேட்கும் மொத்ததொகையையும்
அனுமதித்துவிடுவார்.(சில மேலாளர்கள் நாம்
கேட்கும் தொகையைவிட கூடுதலாக கூட வாங்கி
கொள்ளும்படி சொல்லுவார்கள்- அதே சமயம்
நாம் குறிப்பிடும் தொகையை குறைத்துவிடும்
மேலாளர்களும் உண்டு) எல்லாம் நமது அதிர்ஷ்டத்தை
பொருத்தது.நீங்கள் விண்ணப்பப்படிவத்தில் மேலாளரின்
ஒப்புதலை பெற்றுவிட்டால் உங்களுக்கு லோன்
கிடைத்தமாதிரிதான். நேர்முக தேர்வில்
பேங்க் ஸ்பான்ஸர் என்றால் சுலபமாக
நமது விண்ணப்பத்தை அங்கீகரித்து விடுவார்கள்.

நீங்கள் விண்ணப்பிக்கும் சமயம் தேவைப்படும்
ஆவணங்கள்:-

1. விண்ணப்ப மனு

2. திட்ட அறிக்கை

3. இயந்திரங்கள்- தளவாடங்களின் விலைப்பட்டியல்

4. கட்டிடம் கட்டுவதாக இருந்தால் அதன் பிளான்

5. இடத்திற்கான நகல்- வாடகையிருந்தால்
வாடகை ஒப்பந்தம்

6. ஆண் விண்ண்ப்ப தாரராக இருந்தால் சாதி சான்றிதழ்

7. முகவரி சான்றிதழ்(ரேஷன் கார்ட் அல்லது
வாக்காளர் அ.அட்டை)

8. தொகை அதிகமாக இருந்தால் எட்டாம்வகுப்பு
தேர்ச்சிக்கானசான்றிதழ்

9. உங்கள் புகைப்படம் (சுமார் 6 பாஸ்போர்ட் புகைப்படங்கள்)


நீங்கள் விண்ணப்பித்த உடன் சில நாட்கள் கழித்து
உங்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான கடிதம் வ்ரும்.
நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுங்கள். நீங்கள்
செய்ய போகும் தொழில்பற்றி கேட்பார்கள். நீங்கள்
வங்கி ஸ்பான்சராக இருந்தால் ஒப்புதல் உடனே
செய்துவிடுவார்கள். அடுத்து உங்களுக்கு பயிற்சிக்கான
கடிதம் வரும். வேலைநாட்களில் 15 நாள் பயிற்சி
அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும். அதில்
தினமும் ஒரு அதிகாரி வந்து நமது ஐயங்களை
தீர்த்துவைப்பார். அரசின் விதிமுறைகள். அவர்கள்
வழங்கும் சலுகைகள், பேங்க் வழங்கும் சலுகைகள்,
லைசன்ஸ் நடைமுறைகள் என அனைத்தை
பற்றியும் தெளிவாக விரிவாக விளக்குவார்கள்.
நமது ஐயங்கள் ஏதும் இருந்தால் தயங்காமல்
கேட்கலாம். அந்த வகுப்புகளில் புதுபுது வியாபார
உத்திகள் நமக்கு கிடைக்கும். இறுதி நாளில்
நாம் பயிற்சி எடுத்ததற்கான சான்றிதழ் வழங்குவார்கள்.
அந்த சான்றிதழ் காண்பித்து இனி நீங்கள் வங்கியில்
கடன் வாங்கி தொழில் தொடங்கலாம்.
சரி கடனை எப்பொது திருப்பி செலுத்தவேண்டும்.

நீங்கள் தொழில் தொடங்கி ஆறு மாதங்கள் வரை
கடனை செலுத்தவேண்டாம். அதன்பிறகே செலுத்த
வேண்டும்.

சரி லோன் வாங்குகின்றோம். நாம் எவ்வளவு ரூபாய்
முன் பணம் ஆகபோடவேண்டும்?
நீங்கள் வாங்கும் லோன் தொகையில் 5 முதல் 10 %
வரை கட்டினால் போதும்.

சரி லோன் வாங்குகின்றோம்.கட்டுகின்றோம். அரசின்
தள்ளுபடி - மானியம் எதாவது உண்டா என கேட்கின்றீர்
களா?

அது இல்லாமலா.. மான்யம் உண்டு நீங்கள் நகர்புறமாக
இருந்தால் 25% கிராமபுறமாக இருந்தால் 35% வரையிலும்
மகளிருக்கு 35% வரையிலும் மான்யம் உண்டு.


சரி இதற்கான விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?

கீழ்கண்ட மூன்று இடங்களிலும் கிடைக்கும்.

தொழில் ஆணையர் மற்றும் தொழில்,
வணிக இயக்குநர் அலுவலகம்,
தொழில்வணிகத்துறை,
எழிலகம்,சேப்பாக்கம்,
சென்னை -600 005.
தொலைபேசி :- 044-28525312 பேக்ஸ்:- 044-28548513


முதன்மை செயல் அலுவலர்,
கதர் கிராமத் தொழில்கள் வாரியம்,
குறளகம், சென்னை -600 108.
தொலைபேசி:- 044-25340761 பேக்ஸ்:-044- 25340481

இயக்குநர்,
கதர் கிராமத்தொழில்கள் ஆணையம்,
326, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை-86.
தொலைபேசி:- 044-28351019 பேக்ஸ்:-044-28351697


இதை தவிர உங்கள் அருகில் உள்ள மாவட்ட தொழில்
மையங்களிலும்,/ கே.வி.ஐ.சி/ கே.வி.ஐ.பி/, டி.ஐ.சி /
வங்கி அலுவலகங்களிலும் அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு:-
www.kvic.org.in
www.pmegp.inஉங்களுக்கு தொழில்தொடங்கி நாலுபேருக்கு வேலை
கொடுக்கவேண்டும்- நாமும் முன்னேறவேண்டும் என
ஆசையிருந்தால் தொடங்கப்போகும் தொழிலை நன்கு
திட்டமிட்டு ஆரம்பியுங்கள்.
வங்கி மேலாளரை பாருங்கள். அவர் சொல்லும்
நேரத்தில் சென்று அவரை பாருங்கள்.தொழிலுக்கு
பொறுமை -நிதானம் அவசியம். அந்த பொருமையும்
நிதானமும் நமக்கு இருக்கின்றதா என வங்கி மேலாளர்
அறிந்துகொள்ளவிரும்பலாம். அதனால் அவர் சொல்லும்
நேரத்தில் சென்று அவரை பாருங்கள். எத்தனை முறை
சொன்னாலும் அத்தனைமுறையும்சென்று பாருங்கள்.
இந்த திட்டத்தில் ஒரு வாரத்தில் வங்கி அனுமதி
பெற்று லோன் வாங்கியவர்களும் இருக்கின்றார்கள்.
நான்கு மாதத்தில் அனுமதி பெற்று லோன் வாங்கியவர்
களும் இருக்கின்றார்கள். எனவே பொருமை அவசியம்.
எந்த காலத்திலும் எந்த இடத்திலும் கோபம் வேண்டாம்.
இப்பொழுதே தொழில் தொடங்க திட்டமிடுங்கள்.
வங்கி மேலாளரை சென்று சந்தியுங்கள்.
தொழில் அதிபர் ஆகுங்கள். வெற்றி பெறுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பின்குறிப்பு:- எந்த ஒரு சாப்ட்வேராகஇருந்தாலும்
அதை சோதனைசெய்து பார்த்தபின்னரே பதிவில்
பதிவிடுகின்றேன். அதைப்போல் இந்த திட்டத்தில்
நான் லோன் வாங்கியபின்னரே பதிவிடுகின்றேன்.
கடந்த பிப்ரவரி 2009 வங்கி மேலாளரை சந்தித்தேன்.
நல்ல மனிதர் உடனே ஒப்புதல் அளித்தார்.
விண்ணப்பத்தை தொழில்துறைக்கு அனுப்பினார்.
அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தது:
திட்டத்தை நிறுத்தி வைத்தார்கள். ஆட்சி அமைந்ததும்
திட்டத்தை தொடர்ந்தார்கள். செப்டம்பரில்
நேர்முகத்தேர்வு நடந்தது.அதற்குள் இங்கு எனது
மேலாளர் வேறு கிளைக்கு மாற்றப்பட்டார். புதிய
மேலாளருக்கு என்னை பற்றி தெரியவில்லை.
காத்திருந்தேன். அவர் சொன்ன நேரங்களில் சென்று
சந்தித்தேன். அக்டோபரில் லோன் அனுமதி கடிதம்
அனு்ப்பினார். நவம்பரில் பயிற்சி முடித்தேன்.
நவம்பர் கடைசிவாரத்தில் லோன் வாங்கினேன்.
பொறுமையின் அவசியத்தை உணர்த்தவே இதை
பதிவிடுகின்றேன்.JUST FOR JOLLY PHOTOS:-


டேய் பார்த்து வாங்கடா....நான் போனபாதையில்
வந்தால் வழுக்காது....இன்றைய PSD டிசைன் -36 க்கான புகைப்படம் கீ்ழே:-டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம் அறிந்துகொண்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

17 comments:

mdniyaz said...

அன்பு நண்பர் திரு வேலன் அவர்களுக்கு, , இளம் தலைமுறையினருக்கு உதாரணமாக தொழிலை துவக்கி வெற்றி பெறுங்கள். இனி மேலாவது அன்னிய நாட்டு மோகம் குறையட்டும்.உங்களின் புதிய தொழில் வெற்றி பெற எனது நல் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

சூர்யா ௧ண்ணன் said...

நல்ல திட்டம் அனைவருக்கும் சென்றடைய நீங்கள் பதிவிட்டிருப்பது, உங்கள் சேவை மனப்பான்மையை காட்டுகிறது.. நன்றி!

//அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தது//

சேம் ப்ளட்!..
எனக்கும் அதேதான் ஆனால் அதையும் தாண்டி, நேர்முகத்தேர்விற்கு முதல் நாள் என்னை போன்ற பலருக்கு அதுவரை யாரென்றே தெரியாத ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். நேர் முகத்தேர்வு இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கப் பட்டது. (இதுதான் கேயாஸ் தியரமோ?... )

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

நல்ல தகவல், உங்கள் பொறுமைக்கு கிடைத்த பரிசை போலவே எல்லோருக்கும் அந்த பரிசு போய்ச்சேரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த பதிவை இட்டதிற்கு நன்றி. வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

mdniyaz கூறியது...
அன்பு நண்பர் திரு வேலன் அவர்களுக்கு, , இளம் தலைமுறையினருக்கு உதாரணமாக தொழிலை துவக்கி வெற்றி பெறுங்கள். இனி மேலாவது அன்னிய நாட்டு மோகம் குறையட்டும்.உங்களின் புதிய தொழில் வெற்றி பெற எனது நல் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

நன்றி நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களே..தங்கள் கருத்துக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சூர்யா ௧ண்ணன் கூறியது...
நல்ல திட்டம் அனைவருக்கும் சென்றடைய நீங்கள் பதிவிட்டிருப்பது, உங்கள் சேவை மனப்பான்மையை காட்டுகிறது.. நன்றி!

//அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தது//

சேம் ப்ளட்!..
எனக்கும் அதேதான் ஆனால் அதையும் தாண்டி, நேர்முகத்தேர்விற்கு முதல் நாள் என்னை போன்ற பலருக்கு அதுவரை யாரென்றே தெரியாத ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். நேர் முகத்தேர்வு இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கப் பட்டது. (இதுதான் கேயாஸ் தியரமோ?...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் சூர்யா கண்ணன் அவர்களே..உங்களுக்கு நேர்முகத்தேர்வு முடிந்ததா - இல்லையா?
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

நல்ல தகவல், உங்கள் பொறுமைக்கு கிடைத்த பரிசை போலவே எல்லோருக்கும் அந்த பரிசு போய்ச்சேரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த பதிவை இட்டதிற்கு நன்றி. வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

நன்றி சார்....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
என்றும்அன்புடன்,
வேலன்

யூர்கன் க்ருகியர் said...

பதிவுன்னா இப்படி இருக்கணும் .. தொழில் முனைவோர்கான நல்ல பதிவு.. Thx

ganapathy said...

வணக்கம் திரு வேலன் அவர்களே .
நான் கடந்த நவம்பரில் பயிற்சி முடித்துவிட்டேன் .நீங்கள் மானியத்துக்கு
விண்ணப்பித்து விட்டீர்களா .
மானியம் கிடைத்து விட்டதா
எனக்கு சில சந்தேகங்கள் உண்டு
எனது ஈமெயில் ariyalganapathy@gmail.com

Tech Shankar @ டெக்‌ஷங்கர் said...

வணக்கம். வாழிய நலம்.
பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிவு அருமை.
தொடர்க.

உங்கள் ப்ளாக் ஆர்கைவ் அதை மாதா மாதம் மட்டும் காட்டும்படி வைத்தால் தேடுவதற்கு எளிமையாக இருக்கும். இது வாரா வாரம் காட்டுவதால் பழைய பதிவுகளைத் தேடுவது சற்றுக் கடினமாக உள்ளது.

நன்றியுடன்
டெக்‌ஷங்கர் @ TechShankar

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
பதிவுன்னா இப்படி இருக்கணும் .. தொழில் முனைவோர்கான நல்ல பதிவு.. Thxஃஃ

நன்றி நண்பரே...உங்கள் நண்பருக்கும் இந்த பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ganapathy கூறியது...
வணக்கம் திரு வேலன் அவர்களே .
நான் கடந்த நவம்பரில் பயிற்சி முடித்துவிட்டேன் .நீங்கள் மானியத்துக்கு
விண்ணப்பித்து விட்டீர்களா .
மானியம் கிடைத்து விட்டதா
எனக்கு சில சந்தேகங்கள் உண்டு
எனது ஈமெயில் ariyalganapathy@gmail.com

தங்கள் சந்தேகங்களுக்கு தங்களுக்கு இ-மெயில் அனுப்பிஉள்ளேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Tech Shankar @ டெக்‌ஷங்கர் கூறியது...
வணக்கம். வாழிய நலம்.
பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிவு அருமை.
தொடர்க.

உங்கள் ப்ளாக் ஆர்கைவ் அதை மாதா மாதம் மட்டும் காட்டும்படி வைத்தால் தேடுவதற்கு எளிமையாக இருக்கும். இது வாரா வாரம் காட்டுவதால் பழைய பதிவுகளைத் தேடுவது சற்றுக் கடினமாக உள்ளது.

நன்றியுடன்
டெக்‌ஷங்கர் @ TechShankaச

சில காரணங்களால் அவ்வாறு செட் செய்துள்ளேன் நண்பரே...விரைவில் தங்கள் விருப்பத்தை நிவர்த்தி செய்கின்றேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

sarusriraj said...

உங்கள் சேவை மன்ப்பான்மைக்கு நன்றி

வேலன். said...

sarusriraj கூறியது...
உங்கள் சேவை மன்ப்பான்மைக்கு நன்றி//

தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி சாரூராஜ் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

ஒரு சாதாரண வாசகனான எனது விருப்பத்தை உடனே நிறைவு செய்த திரு. வேலன் அவர்களுக்குக் கோடி நன்றிகள். இப்போது உங்கள் பழைய பதிவுகளைப் படிப்பது மிகவும் எளிதாகிவிட்டது.

மேலும் ஒரு விண்ணப்பம் - வலைப்பூவில் இருந்தபடியே உள்ளே தேடும் வசதியும் வேண்டும்.

Google search widget இருக்கும் அதையும் சேர்த்துவிடுங்கள். புண்ணியமாய் போகும்.

என்னடா இது இப்படி வேலை சொல்கிறானே என எண்ணாதீர்கள். எல்லாம் நன்மைக்கே என எண்ணுங்கள்.

அனைவருக்கும் பயனுள்ளதாக எழுதும் உங்களைப் போன்றோரால்தான் நாட்டில் மழை பெய்கிறது. இன்னும் கொஞ்சம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வேண்டுமெனில் நாங்கள் எதிர்பார்க்கும் கூடுதல் மழையாகிய, உள்ளிணைந்த search ஐ உங்கள் வலைப்பூவில் எதிர்பார்க்கிறோம். நன்றி வணக்கம்
டெக்‌ஷங்கர் @ Techshankar

//சில காரணங்களால் அவ்வாறு செட் செய்துள்ளேன் நண்பரே...விரைவில் தங்கள் விருப்பத்தை நிவர்த்தி செய்கின்றேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

thedal said...

நான் வங்கியில் கடன் வாங்குவது பற்றி தெரியாமல் இருந்தேன் தற்பொழுது உங்கள் பதிவினை பார்த்தேன் தெளிவு பெற்றேன் மிகவும் நன்றி .

Anonymous said...

மிக்க நன்றி வேலன் அவர்களே. இந்த லோன் பெறுவதற்கான அனைத்து டாக்குமெண்டுகளும் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் ரேஷன் கார்ட் மட்டும் தற்பொழுது நான் வசிக்கும் சென்னை முகவரியில் இல்லை.எலக்ஷ்ன் ஐடி தான் உள்ளது. நான் இதை வைத்து அப்ளைச் செய்யலாமா? அல்லது ரேஷன் கார்டை தற்பொழுது வசிக்கும் முகவரிக்கு மாற்றி அப்ளைச் செய்ய வேண்டுமா? இந்த மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது இத்தனை ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் உண்டா? தயது செய்து உடன் இந்த கமெண்டிலேயே தெரியப்படுத்தவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...