பொதுவாக நாம் புகைப்படங்கள் - டெக்ஸ்ட் கள் தேர்வு
செய்ய மவுஸை ஆரம்பத்தில் கிளிக் செய்து அதை
அழுத்தியவாறே தேவைப்படும் இடம் வரை இழுத்து
வந்து பின்னர் கிளிக் செய்து தேர்வு செய்வோம். இது
குறைந்த தூரம் என்றால் பரவாயில்லை. இதுவே
நாலைந்து பக்கங்கள் என்றால்....? இதற்கு தான்
மவுஸில் லாக் செய்யும் வசதி உள்ளது. நமக்கு
தேவைப்படும் இடத்தில் ஒரு கிளிக் - முடியும்
இடத்தில் ஒரு கிளிக். அவ்வளவுதான்.இந்த
செட்டிங்கை தேவைப்பட்டால் வைத்துக்கொள்ளலாம்.
வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம். இனி
இந்த செட்டிங்கை எப்படி செய்வது என பார்க்கலாம்.
முதலில் Start - Settings - Control Panel -செல்லுங்கள்.
உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
அதில் மவுஸை கிளிக் செய்யுங்கள் கீழே உள்ள படத்தைபாருங்கள்.
இதை கிளிக் செய்ய உங்களுக்க கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Turn on Click Lock செய்யுங்கள்.
அதில் உள்ள Settings கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஒப்பன் ஆகும். தேவையான செட்டிங்ஸ் செய்து
கொள்ளுங்கள்.
ஓ.கே. கொடுத்து வெளியில் வந்து Apply கிளிக் செய்து
மீண்டும் Ok கிளிக் செய்து வெளியேறுங்கள்.
அவ்வளவுதான். நமது மவுஸை கிளிக் லாக் செய்தாகிவிட்டது:.
இனி தேவைப்படும் இடத்தில் மவுஸை வைத்து சற்று அழுத்தி
லாக் செய்யுங்கள். தேவைப்படும் இடம் வரை மவுஸை
நகர்த்தி வாருங்கள். டெக்ஸ்ட் ஆனது நீல நிறத்தில் தேர்வாகி
உடன் வருவதை காணலாம். இந்த வசதி தேவையில்லை
யென்றால் முன் சொன்ன வழி முறையில் சென்று லாக்கை
எடுத்துவிடுங்கள்.
பயன் படுத்திப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட சீக்கிரம் தீனியை கொண்டாங்கப்பா...
எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிரு்ப்பது:
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
பதிவிறக்கம் செய்ய இங்குகிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
9 comments:
அட!இப்படில்லாம் செய்யலாமா?நன்றி வேலன்.
சூப்பர்... மிக்க நன்றி தலைவரே....மிக உபயோகமான ஒன்று...
ஆமா,அருமையாக இருக்கிறது பதிவுக்கு நன்றிங்க.
அன்புடன் மஜீத்.
அன்புடன் அருணா கூறியது...
அட!இப்படில்லாம் செய்யலாமா?நன்றி வேலன்.ஃஃ
கணிணியில் தெரிந்தது சில...தெரியாதது இன்னும் பல...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
தமிழ்ப்பறவை கூறியது...
சூப்பர்... மிக்க நன்றி தலைவரே....மிக உபயோகமான ஒன்று.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பெயரில்லா கூறியது...
ஆமா,அருமையாக இருக்கிறது பதிவுக்கு நன்றிங்க.
அன்புடன் மஜீத்ஃஃ
நன்றி மஜீத் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
சூப்பர்...மிக உபயோகமான ஒன்று...அப்படியே தமிழில் பின்னூட்டமிட வசதியளித்தால் நன்றாக இருக்கும், google transliteration சென்று வர வேண்டியுள்ளது...பதிவுக்கு மிக்க நன்றிங்க.
ரகு கூறியது...
சூப்பர்...மிக உபயோகமான ஒன்று...அப்படியே தமிழில் பின்னூட்டமிட வசதியளித்தால் நன்றாக இருக்கும், google transliteration சென்று வர வேண்டியுள்ளது...பதிவுக்கு மிக்க நன்றிங்கஃஃ
சரிங்க அப்படியே செய்திடலாம்.
்வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி தலைவா
Post a Comment