வேலன்:-கூகுளின் டெக்ஸ்டாப்.


கூகுளில் புதிதாக டெக்ஸ்டாப்பினை அளித்துள்ளார்கள்.
இதுவரை உபயோகிக்காதவர்கள் தற்சமயம் ஒரு முறை
உபயோகித்துப்பார்க்கலாம்.
முதலில் உங்கள் மெயிலை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
அதில் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு
Orkut,Gmail.Calender.Document.Web.More என வரிசையாக உள்ள
தில் More கிளிக் செய்யவும்.அதில் கீழாக உள்ள Even More
கிளிக்செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.

அதில் உள்ள டெக்ஸ்டாப்பினை கிளிக்செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
இதை பதிவிறக்கி சேமித்துக்கொள்ளவும்.(இதன்கொள்ளளவு
2 எம்.பிக்குள்தான் வரும்). உங்கள் கணிணியில் இன்ஸ்டால்
செய்துகொள்ளவும்.இதில் கெடிகாரம்,தட்பவெப்பநிலை.
நமது புகைப்படங்களின் ஸ்லைட் ஷோ,பிளாக்கர் தகவல்கள்.
ஜி-மெயில் மற்றும் குகூள் அட்ரஸ்பார் விண்டோ உட்பட 
அனைத்தும் விண்டோவினில் வந்துவிடும். 

 மேலே உள்ள படத்தை பாருங்கள். இந்த விண்டோவினை
நாம் விருப்பத்திற்கு ஏற்ப சைடிலோ, டாக்ஸ்பாரிலோ,
மேல்புறமோ வைத்துக்கொள்ளலாம்.இதில் உள்ள
Add Gadgets மூலம் 200 க்கும் மேற்பட்ட வசதிகளை
நாம் கொண்டுவரலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதைப்போல் நமது கணிணியில் உள்ள புகைப்படங்களையும்
ஸ்லைட் ஷோவாக கொண்டுவரலாம்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
 
அதைப்போல் நமக்கு விருப்பமான இணையதள முகவரிகளை
இதில் உள்ள வெப் கிளிப்ஸ்ஸில் சேர்த்துக்கொள்ளலாம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதைப்போலவே Gmail-ஐ இதிலிருந்தே நாம் பார்த்துக்
கொள்ளலாம். மெயில் அனு்பபலாம்.கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
 
இதைப்போலவே நாம் கூகுளில் உள்ள அட்ரஸ்பார் மூலம்
தேவையான முகவரிகளை பெறலாம்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
 
பயன்படுத்தி பாருங்கள். பிடித்திருந்தால் வைத்துக்
கொள்ளுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் 
முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன். 
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
டேய்...டாடியை அப்படியெல்லாம் எட்டி உதைக்ககூடாது...
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
 
 டிசைன் செய்தபின் வந்தபுகைப்படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

29 comments:

அண்ணாமலையான் said...

நன்றி... தலைவா

Kandumany Veluppillai Rudra said...

பிரயோசனமான பதிவு !

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பரான பதிவு,மெதுவா தான் ஒவ்வொன்றாக முயற்சி செய்யனும்.

Chitra said...

:-) Thank you.

ஜெய்லானி said...

ரீபூட் பன்னும்போது எதுவும் லேட் ஆகுதா??,டெஸ்க்டாப் உடனே வருதா? கொஞ்சம் சொன்னால் தேவலாம்..நன்றி...

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
நன்றி... தலைவா//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாமலை சார்....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

உருத்திரா கூறியது...
பிரயோசனமான பதிவு !//


நன்றி உருத்திரா சார்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jaleela கூறியது...
ரொம்ப சூப்பரான பதிவு,மெதுவா தான் ஒவ்வொன்றாக முயற்சி செய்யனும்//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
:-) Thank you.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
ரீபூட் பன்னும்போது எதுவும் லேட் ஆகுதா??,டெஸ்க்டாப் உடனே வருதா? கொஞ்சம் சொன்னால் தேவலாம்..நன்றி..//


எனக்கு ப்ரச்சனை இல்லை..நீங்கள் உபயோகித்து சொல்லுங்கள்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Unknown said...

பயனுள்ள பதிவு.. முயற்சி செய்து பார்கிறேன்..

cheena (சீனா) said...

வேலன் - நல்வாழ்த்துகள் ய்தகவல் பரிமாற்றத்திற்கு

பொன் மாலை பொழுது said...

ஐயோ மாப்ஸ், கூகிள் டெஸ்க் டாப் வெளி வந்து ஒன்றரை வருடங்களாகி விட்டதே! நான் அவைகளை வைத்திருப்பதை ஸ்க்ரீன் ஷாட்டில் நீங்கள் கண்டதில்லையா என்ன?
போங்கல்லஅய்யா நீர் too late . அது சரீஈ................................. உங்க family படமெல்லாம் போட்டு தூள் கிளப்புறீங்க ?

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான தகவல் வேலன் சார் .

வேலன். said...

சிநேகிதி கூறியது...
பயனுள்ள பதிவு.. முயற்சி செய்து பார்கிறேன்..//

தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி. வாழ்க வளமுடன். வேலன்.

வேலன். said...

cheena (சீனா) கூறியது...
வேலன் - நல்வாழ்த்துகள் ய்தகவல் பரிமாற்றத்திற்கு//


தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சீனா சார் அவர்களே ... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
ஐயோ மாப்ஸ், கூகிள் டெஸ்க் டாப் வெளி வந்து ஒன்றரை வருடங்களாகி விட்டதே! நான் அவைகளை வைத்திருப்பதை ஸ்க்ரீன் ஷாட்டில் நீங்கள் கண்டதில்லையா என்ன?//

உங்களுக்கு தெரிந்தது - எனக்கும் தெரிந்தது - மற்றவர்களுக்கு தெரியாது இல்லையா.? தெரிந்தாலும் அதன் உபயோகம்தெரியாதில்லையா...மற்றவர்களும் தெரிந்துகொள்ளட்டும் என்பதற்காகவே பதிவிட்டுள்ளேன்.//

// உங்க family படமெல்லாம் போட்டு தூள் கிளப்புறீங்க ?//

கண்ணாடி எடுத்து பொட்டுக்குனு நல்லா பாருங்க...உங்களை நான் எடுத்த போட்டோதான் அது..?

வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
அருமையான தகவல் வேலன் சார் //


நன்றி ஸ்டார்ஜன் சார் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

சசிகுமார் said...

பயனுள்ள பகிர்வு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

டவுசர் பாண்டி said...

நல்ல விசியம் தாம்பா !! சொல்லிக்
கீரே !! சோக்கா கீது !!

Muthu Kumar N said...

வேலன் சார்,

புதியவர்களுக்கு நல்ல உபயோகமான தகவல். வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

மோகனகிருஷ்ணன் said...

அருமையான தகவல் வேலன் சார்.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

"AJ" said...

Simple & Nice Boss

வேலன். said...

சசிகுமார் கூறியது...
பயனுள்ள பகிர்வு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகுமார் அவர்களே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
நல்ல விசியம் தாம்பா !! சொல்லிக்
கீரே !! சோக்கா கீது !!ஃஃ

ரொம்ப டாக்ங்ஸ் டவுசரே..
.வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

புதியவர்களுக்கு நல்ல உபயோகமான தகவல். வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்ஃஃ

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

மோகனகிருஷ்ணன் கூறியது...
அருமையான தகவல் வேலன் சார்.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்//

வாங்க சார்...இந்த பக்கம் வந்து நீங்கள் ரொம்ப நாளாகின்றது..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Mr. "J" கூறியது...
Simple & Nice Boss//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜே.அவர்களே...
வாழ்க வளமுடன்.
வேலன்..

yasaru said...

1.google desktopil enaku email configure pannamudiyala...gmail user double click panna solluthu..but response illa when i double click...
2.web clipsil ungaloda blog add panninen. but ethuvume tamila theriyamaatenguthu..ore box than varuthu..read pannavum mudiyala..enna panrathu..please tell me..

Related Posts Plugin for WordPress, Blogger...