வேலன்:-ஆளுக்கொரு டெக்ஸ்டாப் விண்டோ வைத்துக்கொள்ள


நமது வீட்டில் உள்ள கம்யூட்டரை அனைவரும் பயன்படுத்துவோம். அவரவர்களுக்கு ஒவ்வோரு கம்யூட்டர் வாங்கி தருவது கஷ்டமே.ஆனால் ஒரே கம்யூட்டரையே அவரவர் விருப்பபடி ஆளுக்குஒரு டெக்ஸ்டாப் விண்டோ வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.நாம் டெக்ஸ்டாப்பில் விருப்பமான ஷார்ட்கட்கள் வைத்திருப்போம். விருப்பமான படங்கள் வைத்திருப்போம்.(அட சாமி படங்கள்தாங்க..)குழந்தைகளுக்கு விருப்பமான படங்கள் வைக்க விரும்பும்.இந்த சாப்ட்வேரில் ஒரே கம்யூட்டரையே ஆறு பேர் விதவிதமான டெக்ஸ்டாப் கொண்டு உபயோகிக்கலாம். இந்த சாப்ட் வேர் மொத்தம் 7 எம்.பி.குள் தான் உள்ளது.இதை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும்.இதை பதிவிறக்கி உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் கீழ்கண்ட படம் வரும்.
இதில் உள்ள கியூப் படத்தை (ஆறாம எண்ணுக்கு பக்கத்தில்) கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஆறு விண்டோவினை ஆளுக்கு ஒன்றாக பிரித்துக்கொடுத்துவிடுங்கள்.அவர்கள் விரும்பிய படத்தை  வைத்துக்கொள்ளட்டும். Ctrl + உடன் அவர்களுக்கு ஒதுக்கிய எண்ணை தட்டச்சு செய்ய அவரவர் விண்டோக்கள் ஓப்பன் ஆகும்.
அவரவர் விண்டோக்களில் அவர்களுக்கு தேவையான சாப்ட்வேர்கள் - ஷார்ட்கட்கள் வைத்துக்கொள்ளலாம். அதற்கு முன்பு சொன்னபடி கியூப் கிளிக் செய்து வரும் விண்டோவில் அதில் உள்ள Utilities கிளிக் செய்ய உங்களுக்கு  Manage icons வரும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதில் விண்டொவில் உள்ள அனைத்தும் காண்பிக்கும். நீங்கள் எந்த டெக்ஸ்டாப் எண்ணுக்கு எந்த அப்ளிகேஷன் வேண்டுமோ அந்த கட்டத்தில் டிக் செய்து இறுதியாக அப்ளை செய்துவிடுங்கள். நீங்கள் தேர்வு செய்த விண்டோவில் தேர்வு செய்த அப்ளிகேஷன்கள் மட்டும் இருப்பதை காணலாம். 
வேண்டிய வடிவங்களிலும் தேர்வினை செய்துகொள்ளலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கருத்தினை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அம்மணி...எங்கே எஸ்கேப் ஆகறிங்க....வந்து ஓட்டுப்போட்டு கருத்தை சொல்லிட்டுப்போங்க.....
இன்றைய PSD  படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இந்த டிசைன் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

சசிகுமார் said...

அப்பாட இதன் மூலம் எனக்கும் என் தம்பிக்கும் வரும் சண்டையை நிவர்த்தி செஞ்சிடீங்க
நல்ல பதிவு வேலன், உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வேலன். said...

சசிகுமார் கூறியது...
அப்பாட இதன் மூலம் எனக்கும் என் தம்பிக்கும் வரும் சண்டையை நிவர்த்தி செஞ்சிடீங்க
நல்ல பதிவு வேலன், உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

நன்றி சசிகுமார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

சாருஸ்ரீராஜ் said...

இப்படி எல்லாம் கூட இருக்கு என்று விசயமே உங்கள் பிளாக பார்த்து தான் தெரிந்து கொண்டேன்,உபயோகமாக இருக்கும் பகிர்ந்து கொண்டமைக்கு ரொம்ப நன்றி

பொன் மாலை பொழுது said...

ஐயோ மாப்ஸ், இத போல தான் விண்டோஸ் XP ல கூட வச்சிகிலாமே ராசா? எங்க வீட்ட்ல இருக்கிற என் பசங்களும் தனி தனி யாதா வச்சிகினுகீதுங்க! அப்புறமா ஒரு GUEST கூட (வந்து போறவுங்களுக்கு ) தனியா வெச்சிகிலாமே!

மாப்ஸ். இன்னா இனமும் தூங்கி கினு கீறீங்கோ !! இதெல்லாம் பல்சா போயி ரொம்ப நாள் ஆயி பூடிச்சி மாப்பு.

ஆனாலும் நம்ம மாப்ஸ் பதிவு போட்டுகினா அல்லாரும் இன்னமா பாராடிகினு கீறீங்கோ !
அத்தான் நம்ம மாப்பு மாஸ்டரு. அக்காங்!!
இந்த டவுசர் எங்க பூடுச்சி ஆளையே கண்ணுல காணும் ?? .

Muthu Kumar N said...

வேலன் சார்,

நல்ல தகவல், வளர்க உங்கள் சீ்ரிய பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

யூர்கன் க்ருகியர் said...

ரைட்டு !!

யூர்கன் க்ருகியர் said...

//இந்த டவுசர் எங்க பூடுச்சி ஆளையே கண்ணுல காணும் ?? /

We want Tavusar !!
We want Tavusar !!

மைதீன் said...

உபயோகித்துப் பார்த்தேன் நன்றாக உள்ளது .பதிவுக்கு நன்றி.

Chitra said...

கருத்து சொல்லி வோட்டு போட்டுட்டேன். நான் அந்த அம்மணி இல்லை.

ஹாய் அரும்பாவூர் said...

சில ப்ளாக் பகுதிகளுக்கு பின்னுட்டம் இடும் போது
warnning:contains unauthanticated content என்று வருகிறது
அது ஏன் அப்படி வரமால் இருக்கு என்ன செய்ய வேண்டும் உங்கள் விளக்கும் தேவை

நண்பன் said...

vaNkkam இதன் கிளிக் முகவரி தறவிலையே தம்பி

வேலன். said...

sarusriraj கூறியது...
இப்படி எல்லாம் கூட இருக்கு என்று விசயமே உங்கள் பிளாக பார்த்து தான் தெரிந்து கொண்டேன்,உபயோகமாக இருக்கும் பகிர்ந்து கொண்டமைக்கு ரொம்ப நன்றி//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
ஐயோ மாப்ஸ், இத போல தான் விண்டோஸ் XP ல கூட வச்சிகிலாமே ராசா? எங்க வீட்ட்ல இருக்கிற என் பசங்களும் தனி தனி யாதா வச்சிகினுகீதுங்க! அப்புறமா ஒரு GUEST கூட (வந்து போறவுங்களுக்கு ) தனியா வெச்சிகிலாமே!

மாப்ஸ். இன்னா இனமும் தூங்கி கினு கீறீங்கோ !! இதெல்லாம் பல்சா போயி ரொம்ப நாள் ஆயி பூடிச்சி மாப்பு.

ஆனாலும் நம்ம மாப்ஸ் பதிவு போட்டுகினா அல்லாரும் இன்னமா பாராடிகினு கீறீங்கோ !
அத்தான் நம்ம மாப்பு மாஸ்டரு. அக்காங்!!
இந்த டவுசர் எங்க பூடுச்சி ஆளையே கண்ணுல காணும் ?? .//

நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் அதற்கும் இதற்கும் ஆறுவித்தியாசங்கள் உள்ளது. நீங்கள் சொல்வதில் வெளியில் இருந்து மீண்டும் உள் செல்லவேண்டும். மேலும் ஓரே விண்டோவில் ஒருவர்தான் வரமுடியும். இதில் ஒருமுறை நீங்கள் வந்துவிட்டால் ஆறுபேர்வரை பயன்படுத்த முடியும். சரியா...டவுசர்பேட்டரி டவுண்ஆகிவிட்டது்.சார்ஜ் செய்ய போய்இருக்கார்....வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

நல்ல தகவல், வளர்க உங்கள் சீ்ரிய பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும நன்றி சார்...வாழ்க வளமுடன்.என்றும் அன்புடன்.வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
ரைட்டு !ஃஃ//

ரொம்ப டாக்ங்ஸ்்்்வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
//இந்த டவுசர் எங்க பூடுச்சி ஆளையே கண்ணுல காணும் ?? /

We want Tavusar !!
We want Tavusar !!//

டவுசருக்கு மெயில் அனுப்புங்கள். வாழ்கவளமுடன்.வேலன்.

வேலன். said...

மைதீன் கூறியது...
உபயோகித்துப் பார்த்தேன் நன்றாக உள்ளது .பதிவுக்கு நன்றி.//

நன்றி மைதீன் அவர்களே...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
கருத்து சொல்லி வோட்டு போட்டுட்டேன். நான் அந்த அம்மணி இல்லை.//

சகோதரி மிக்க ந்ன்றி...ஆமாம் படத்தில் உள்ளது நீங்க இல்லைங்கோ...வருகைக்கும் ஒட்டுக்கும் நன்றி்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
சில ப்ளாக் பகுதிகளுக்கு பின்னுட்டம் இடும் போது
warnning:contains unauthanticated content என்று வருகிறது
அது ஏன் அப்படி வரமால் இருக்கு என்ன செய்ய வேண்டும் உங்கள் விளக்கும் தேவை//
தாங்கள் மொசில்லா பயர்பாக்ஸ் உபயோகிக்கின்றீர்களர்...இந்த தளம் சென்று முயற்சி செய்து பார்க்கவும்.http://www.google.co.in/search?hl=en&source=hp&q=warnning:contains+unauthanticated+content+&btnG=Google+Search&meta=&aq=&oq=//நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

buruhaniibrahim கூறியது...
vaNkkam இதன் கிளிக் முகவரி தறவிலையே தம்பி//

கிளிக் சென்று கிளிக் செய்யுங்கள். அந்த தளம் கொண்டு செல்லப்படுவீர்கள்.உங்களுக்காக கிளிக்கை போல்ட் செய்துள்ளேன்.இப்போது கிளிக் செய்து பாருங்கள்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...