வேலன்:-2012-ல் அதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்

ஒவ்வொரு வருடம் முடிவில் திரைப்படங்கள் எத்தனை வெளியாகியது..இதில் நன்கு ஓடிய திரைப்படங்கள் எவ்வளவு என்று விவரங்கள் வெளியிடுவார்கள். பிளாக்கில் அதுபோல் ஒவ்வொரு வருட முடிவில் நான் எனது பதிவுகளில் அதிகநபர்கள் படித்த பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.எனது முந்தைய பதிவுகளை தவறவிட்டவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளளலாம்.இந்த வருடத்திய மொத்த பதிவுகள் 102. கடந்த வருடம் 2011-ல் பதிவிட்ட மொத்த பதிவுகள் 218. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 50% மேல் பதிவுகள் குறைந்துவிட்டது. அதற்கு முழுகாரணம் மின்தடையே...சாதாரண பிளாக்குக்கே இவ்வளவு பாதிப்பு என்றால் மற்ற தொழில்கள் எந்த அளவு  பாதிப்பை அடைந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்.இனி வரும் வருடத்திலாவது தடையில்லா  மின்சாரம் கிடைக்கும் என நம்புவோம். இனி இந்த வருடத்தில் நான் பதிவிட்டதில் அதிக நபர்களால் வாசிக்கப்பட்ட பதிவுகளை இங்கே பட்டியலிடுகின்றேன்.

1.வேலன்:-கணிணி ஜாதக குறிப்பு அறிந்துகொள்ள- வருகை தந்தவர்கள் 3488
நமது பிற்நதநாள் குறிப்பினை கொடுத்தால் நமது முழுஜாதகத்தினையும் கணித்துகொடுத:துவிடுவார்கள். அதுபோல இந்த சின்ன சாப்ட்வேரினை நமது கணிணியில் இன்ஸ்டால் செய்து அதனை கிளிக் செய்தால் நமது கணிணியின் மொத்த விவரமும் நமக்கு வந்துவிடும்; இந்த  பதிவினை காண  இங்கு கிளிக் செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------
2.வேலன்:-சென்னையின் பஸ்ரூட் எளிதில் அறிந்துகொள்ள-வருகை தந்தவர்கள் -2913.

சென்னையின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தாம்பரத்தில் ஆரம்பித்து கும்மிடிப்பூண்டி வரை பரந்து விரிந்து இருக்கின்றது. புது புது ஊர்களும் -புதுபுது கட்டிடங்களும் நம்மை மிரள வைக்கின்றது.சென்னைக்கு பழக்கமானவர்களே பஸ் ரூட் தெரியாமல் முழிக்கும் போது நாமெல்லாம் எந்த மூளைக்கு..? சென்னையின் பஸ் ரூட் எளிதில் அறிந்து கொள்ள இந்த இணைய தளம் நமக்கு அருமையாக வழிகாட்டுகின்றது.இந்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.
-----------------------------------------------------------------------------------------------------------
3.வேலன்:-மின்கட்டண  அட்டவணை. வருகை தந்தவர்கள்:-2791.
மின்சாரத்தை தொட்டால்தான் நமக்கு ஷாக் அடிக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக மின்கட்டணத்தை பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஷாக் அடிக்கின்றது. தொடாமலே ஷாக் அடிக்கும் அளவிற்கு என்ன உள்ளது என்கின்றீர்களா? உயர்ந்துள்ள மின்கட்டணங்கள் தான்.கரண்ட் எங்கே ஒழுங்காக வருகின்றது.. இதில் மின்கட்டணம் எவ்வளவு வந்துவிடபோகின்றது என கேட்கின்றீர்களா? 10 மணிநேரம் மின்தடை செய்து 14  மணிநேரம் மின்சாரம் மின்சார பயன்பாட்டிற்கு எவ்வளவு வந்துவிடப்போகின்றது என்கின்றீர்களா ? கீழே உள்ள கட்டண விகிதத்தை பாருங்கள். நெருக்கிய உறவினர் - நண்பர் திடீரென்று மறைந்துவிட்டால் நம்மால் அவரின் இழப்பை தாங்க முடியாது. ஆனால் அவர்களே உடல் நிலை சரியில்லை - தேறுவது கடினம் என தெரியவரும்போது நமது மனது தன்னால் அந்த துயரத்தை தாங்கிகொள்கின்றது. அதுபோல் உங்களுக்கான மின்கட்டணம் திடீரென்று அதிகமாக வந்துஉள்ளது என நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிட கூடாது என்கின்ற அக்கறையில் இந்த அட்டவணையை பதிவிடுகின்றேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் இது எம்மாத்திரம் என்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள்....இதுவும் கடந்துபோகும்..
இந்த பதிவினை காண இங்கு கிளிக்செய்யவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
4.வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஒரே ஒரு சாப்ட்வேர் -வருகை தந்தவர்கள்-2769.
கம்யூட்டர் வாங்குவது பெரியதல்ல அதனை முறையாக பாராமரித்தால்தான் நாம் சொல்வதை கேட்கும்..பார்க்காத பயிறும் கேட்காத கடனும் பாழ் என்று கிராமக்களில்  சொல்வார்கள். அது போல சின்ன சின்ன வேலைகளை நாம் கம்யூட்டரில் செய்துவிட்டோமானால் அது நமது சொல்படி கேட்பதுமட்டுமல்லாமல் பிரச்சனைஇல்லாமல் செயல்பட்டுகொண்டுஇருக்கும்.பிரச்சனையில்லாமல் கம்யூட்டரை செயல்படுத்துவது எவ்வாறு? இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரில நமது கம்யூட்டருக்கு மிகமிக தேவையான 23 வகை பணிகளுக்குண்டான சாப்ட்வேர்கள் உள்ளது. இந்த தளம் செல்ல இங்கு கிளிக செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
5.வேலன்:-எளிதில் அறிந்துகொள்ள ஆங்கில இலக்கணம். வருகை தந்தவர்கள்:- 2692.
பள்ளிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இனி குழந்தைகள் விளையாட்டுக்களை மறந்து பாடங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். இன்றைய பதிவில் ஆங்கிலம் பற்றி அறியலாம். ஆங்கிலத்தில் புலமை பெற இலக்கணம்அவசியம். அந்த இலக்கணம் பற்றி நமக்கு - குழந்தைகளுக்கு எளிமையாக அறிந்துகொள்ள இந்த புத்தகம் சொல்லிக்கொடுக்கின்றது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த தளம் செல்ல  இங்கு கிளிக் செய்யவும்
----------------------------------------------------------------------------------------------------------
6. வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய-வருகை தந்தவர்கள்:-2421
நீரோ தவிர பைல்களை சிடியில் காப்பி செய்ய ஏதாவது சாப்ட்வேர் இருக்கா என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்காக தேடுடகையில் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. எளிதில் புரியும் வகையில் அளவில் சிறிய தாகவும் உள்ளது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த தளத்திற்கு செல்ல  இங்கு கிளிக் செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
7.வேலன்:-பழைய -புதிய தமிழ் திரைப்பட பாடல்கள் தொகுப்பு -வருகை தந்தவர்கள்-2383.
திரைப்பட பாடல் ஒன்றை தேடும் சமயம் இந்த இணையதள முகவரி கிடைத்தது. திரைப்பாடல் என பெயரிட்டுள்ள இந்த இணையதளம் காண
இங்கு கிளிக்செய்யவும்
------------------------------------------------------------------------------------------------------------
8.வேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள -வருகை தந்தவர்கள்-2329.
ஆங்கில இலக்கணத்தை நாம் தமிழ் மூலம் எளிதில் அறிந்து கொள்ள இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.
----------------------------------------------------------------------------------------------------------
9.வேலன்:-2012 உலகம் அழியபோகின்றதா..?-வருகை தந்தவர்கள்-2012.
கடைசி மூன்று நாட்களா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள் இருக்கும்.. அது நிறைவேறியும் நிறைவேறாமலும் இருக்கும். நம்பவும் முடியவில்லை..நம்பாலும் இருக்க முடியவில்லை..எதை என்கின்றீர்களா, உலகம் அழியபோறதாக சொல்கின்றார்களே அதைதான்.வரும் 21.12.2012 வெள்ளிக்கிழமை அன்று உலகம் அழியபோவதாக மாயன் சொல்லி சென்றதை சொல்கின்றார்கள்.எதையோ இணைய்த்தில் தேடும் சமயம் இந்த காலண்டர் கிடைத்தது. சரி மாயன் காலண்டர் வித்தியசாமாக இருக்கும் என எண்ணி டவுண்லோடு செய்துபார்த்தால் கீழ்கண்ட காலண்டர் கிடைத்தது.அதில் உள்ள செகண்ட்கள் ஒவ்வொன்றாக குறைந்துகொண்டே இருந்தது.பிறகுதான் தெரிந்தது ...அவர்கள் வெள்ளிக்கிழமை வரை நேரம் குறைந்துகொண்டே வருமாறு கடிகாரத்தை செட் செய்துள்ளார்கள். என்று...மேலும ;விவரங்கள் அறிந்து கொள்ள இங்கு கிளிக் இங்கு கிளிக்செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
10.வேலன்:-மேஜிக் காலண்டர்.-வருகை தந்தவர்கள்:-2001.
கடலில் முத்து எடுப்பவர்களுக்கு சில சமயம் விலை மதிப்பில்லா அரிய முத்து கிடைக்கும். அதுபோல் சாப்ட்வேர்களில் குறைந்த அளவில் நிறைய வசதிகளை கொண்ட இந்த சாப்ட்வேரினை சொல்லலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
சில பதிவுகளுக்கு வருகை தந்தவர்கள் பார்க்கும் சமயம் ஆச்சரியமாக உள்ளது. சில பதிவுகள் ஹிட்டாகும் என நினைத்து பதிவிடுவேன் ஆனால் போணி ஆகாது. சில பதிவுகள் எங்கிருந்து ஹிட்டாகப்போகின்றது என நினைப்பேன் ஆனால் பிரம்மாண்டமான ஹிட்டாகிவிடும்.. மேலே பதிவிட்டுள்ள பதிவுகளில் எளிதில் அறிந்து கொள்ள ஆங்கில இலக்கணம் புத்தகத்தினை இதுவரை 5854 பேர் பதிவிறக்கி உள்ளார்கள். ஆனால் வருகை தந்தவர்களோ 2692 பேர்தான். அதுபோல உலகம் அழியபோகின்றதா  என்கின்ற பதிவினை 2012 பேர் பார்ததுள்ளனர்.(வியப்பு என்ன என்றால் வந்தவர்கள் எண்ணிக்கையும் 2012 தான்) வரும் ஆண்டில் தடையில்லா மின்சாரம் கிடைத்து அதிகம் விரும்பும் பதிவுகளை பதிவிட ஆண்டவனை பிராத்திக்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

தகவல்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

P.P.S.Pandian said...

மேஜிக் காலண்டரை பதிவிறக்கம் செய்துகொண்டேன் . மிக்க நன்றி . ..P.Sermuga Pandian

Related Posts Plugin for WordPress, Blogger...