வேலன்:-புகைப்படங்களை விருமபியவாறு மாற்றிக்கொள்ள-Softorbits Batch Picture Resizer

புகைப்படங்களின் அளவுகளை சிறியதாக மாற்ற.பெரியதாக மாற்ற.வேறு பார்மெட்டுக்கு மாற்ற.விரும்பிய கோணத்திற்கு மாற்ற.நிறம் மாற்ற.வாடடர் மார்க்காக எழுதது மற்றும் லோகோ கொ ண்டு வர இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும் விண்டோவில் உங்களுக்கான புகைப்படம் அல்லது போல்டரை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
 இதில முதலில் உள்ள டேப்பில் ரீசைஸ் கொடுததுள்ளார்கள். புகைப்படத்தின் அகலம் மற்றும் உயரத்தினை வேண்டிய அளவிற்கு மாற்றிக்கொள்ளலாம். சில புகைப்படங்களை ஸ்டேன்டர்ட் அளவிலும் கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இப்போது உள்ள பார்மெட்டிலிருந்து வேண்டிய பார்மேட்டுக்கு புகைப்படங்களை மாற்ற இதில் கன்வர்ட் ஆப்ஷன்கள் ;கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 புகைப்படங்களை வேண்டிய கோணத்திற்கு மாற்ற இதில வசதி கொடுத:துள்ளார்கள். வேண்டிய கோணத்தினை தேர்வு செய்து புகைப்படங்களை நாம் மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டொவில் பாருங்கள்.
 புகைபபடங்கள் வேண்டிய நிறம் கொண்டுவர எபெக்ட் வசதியை கொடுத்துள்ளார்கள். அதுபோல புகைப்படங்களில் வாட்டர் மார்க்கொண்டுவரவும் புகைப்படங்களின் பெயரினை மாற்றவும் இதில் வசதியை கொடுத்துள்ளார்கள்.
 வாட்டர் மார்க்காக எழுத்துக்கள் மட்டும் இல்லாமல் நாம் விரும்பிய நமது புகைப்படம் மற்றும் லோகோவை இதில் கொண்டு வரலாம்.லோகோ பளிச்சிடும் அளவினையும் நாம் கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
 ஒரே சாப்ட்வேரில ஆறுக்கும் மேற்பட்ட புகைப்பட சம்பநதமான பணிகளை நாம் சுலபமாக செய்யலாம். பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...