வேலன்:-அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் மூடிவிட-Close All Windows

கணிணியில் நாம் பயன்படுததும் சமயம் அதிக அளவில் அப்ளிகேஷன்கள் திறந்து பயன்படுத்துவோம். அவசர வேலை காரணமாக செல்கையில் ஒவ்வொன்றையும் திறந்து அதை நாம் முறையாக மூட வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஓரே கிளிக் கில் நாம் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன்களையும் நாம் மூடிவிடலாம். இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்கள் திறந்துஉள்ளீர்களோ அந்த அப்ளிகேஷன்கள் உங்களுக்கு தெரியவரும்.
இதில் எதாவது அப்ளிகேஷன் உங்களுக்கு தேவையென்றால் அதன் எதிரில் உள்ள ரேடியோபட்டனின் டிக் மார்க்கினை எடுத்துவிடலாம். உங்களுக்கு எல்லா அப்ளிகேஷன்களும் மூடிவிடவேண்டுமானால் எப்5 கிளிக் செய்தால் உங்களுக்கு அனைத்து அப்ளிகேஷன்களும் கிடைக்கும் பிறகு கீழே உள்ள ஓ.கே. பட்டனை கிளிக் செய்திடவும் நொடியில் உங்கள் அப்ளிகேஷன்கள் அனைத்தும் மூடப்பட்டுவிடும். பயன்படுத்திப்;பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...