வேலன்:-வீடியோ பைல்களை அனிமேஷன் பைல்களாக மாற்ற-Video to GIF Converter

வீடியோ பைல்களை அனிமேட்டட் பைல்களாக மாற்ற இந்த சாப்ட்:வேர பயன்படுகின்றது.  25 M.P.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள கிளிப் என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி வீடியோவில் எந்த பாகம் உங்களுக்கு அனிமேட்டடாக வரவேண்டுமோ அந்த வீடியொவினை தேர்வு செய்யவும். மேலும் உங்கள் கணிணியில் எந்த இடத்தில் அது சேமிக்கவிரும்புகின்றீர்களோ அந்த இடத்தினையும் தேர்வு செய்திடவும்.
இதில் உள்ள எடிட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வீடியோவினை தேவையான அளவு கிராப் செய்துகொள்ளலாம். மேலும் வீடியோவில் கான்டாராஸ்ட்.பிரைட்நஸ் போன்றவற்றை கூடுதலாக்கவோ குறைக்கவோ செய்யலாம். இதுமட்டும் அல்லாமல் உங்களுக்கான வீடியோவில் வாட்டர்மார்க்காக டெக்ஸ்ட் அல்லது புகைப்படங்களை கொண்டுவரலாம். புகைப்படங்களும் டெக்ஸ்ட்டும் வீடியோவில் வரக்கூடிய இடத்தினையும் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். 
அனைத்து பணிகளும் முடிந்ததும் உங்களுக்கான வீடியோவானது அனிமேட்டடாக மாறுவதை காணலாம். இந்த வீடியோவில் TAMIL COMPUTER என்பதனை வாட்டர்மார்க்கா கொண்டுவந்ததை பாருங்கள்.
உங்களுக்கான வீடியோவானது முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் பணி நிறைவு என்கின்ற தகவல் வரும்.


நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோவானது அனிமேட்டட் வீடியோவாக மாறி இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...