வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock

சில பிடிஎப் பைல்களை நாம் பார்வையிடலாம். சேமிக்கலாம் ஆனால்அதிலிருந்து நாம்பிரிண்ட் எடுத்து பயன்படுத்த முடியாது. நீங்கள் பிரிண்ட்ஆப்ஷன் கொடுத்தால் பிரிண்ட் ஐகான் ஹிட்டன் செய்தவாறு உங்களுக்கு தெரியவரும்.உங்களால் பிரிண்ட எடுக்க இயலாது.
அவ்வாறு உள்ள பிடிஎப் பைல்களை நீங்கள் உங்கள் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.பின்னர் பிடிஎப் பைலின் நடுவில்வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் டாக்குமெண்ட் ப்ராபர்டீஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் இரண்டாவதாக உள்ள டேபினை கிளிக் செய்திடவும்.


பிரிண்ட் நாட் அலவுட் என உங்களுக்கு தகவல் தெரியவரும். இப்போது நீங்கள் உங்கள் ப்ரவுசரில் கூகுள் டிரைவினை ஒப்பன் செயதிடுங்கள். வரும் விண்டோவில் நியூ என்பதனை தேர்வு செயதிடுங்கள்.அதில பைல் அப்லோடு என்பதனை கிளிக்செய்து வரும் விண்டோவில் உங்கள் பிடிஎப் பைலினை தேர்வு செய்திடுங்கள். சில நிமிடங்கள் காத்துஇருக்கவும்.




நீங்கள் இப்போது வரும் பிடிஎப் பைலினை உங்கள் கணினியில் மீண்டும் சேமித்து இப்போது பிரிண்ட் ஆப்ஷன் சென்று பாருங்கள்.


ஹிட்டன் ஆன பிரிண்ட் ஆப்ஷனானது இப்போது உங்கள் பார்வைக்கு தெரியவரும். இப்போது நீங்கள் அதனை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்.
வாழ்கவளமுடன்
வேலன்.





பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...