வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.

இணையத்தில் பயன்படுத்தப்படும் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும் வீடியொக்களை தேடி பதிவிறக்கம் செய்திடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செயதிட இங்கு கிளிக்     செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் உங்கள் யூடியூப் யூஆர்எல் முகவரியை இதில உள்ள டேபில் தட்டச்சு செய்தோ காப்பிபேஸ்ட் செய்தோ கீழே உள்ள டவுண்லோடு லிங்க்கினை கிளிக் செய்திடவும்.
நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய வீடியோவின் அளவினை தேர்வு செய்திடவும். 

சில நிமிடங்களுக்கு பின்னர் உங்கள் வீடியோவானது டவுண்லோடு ஆகிவிட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
அதுபோல இணையத்தில் நீங்கள் வீடியோக்களை தேடி பின்னர் பதிவிறக்கம் செய்யும் வசதியும் இதில இணைந்துள்ளது. நீங்கள் தேடும் வீடியோவின் பெயரினை இதில தட்டச்சு செய்து பின்னர் சர்ச கிளிக் செய்திடவும். நீங்கள் தேட சொன்ன வார்த்தைக்கு ஏற்ப நிறைய வீடியொக்கள் உங்களுக்கு டிஸ்பிளே ஆகும். 




தேவையானதை கிளிக்செய்தால் டவுண்லோடு ஆக ஆரம்பிக்கும்.


 அதுபோல இதில் உள்ள செட்டிங்ஸ கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வேண்டிய பார்மெட்டினையும் சேமிக்க விரும்பும் இடத்தினையும் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

Colton Adams said...

Thanks for poosting this

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...