வேலன்:-Pot Player-பாட் ப்ளேயர்.

விதவிதமான ஆடியோ - வீடியோ-ப்ளேயர்கள் இருந்தாலும் புதியதாக இன்னும் ஒரு ப்ளேயரை இன்று காணலாம். 12 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவினை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள கன்ட்ரோல் பேனல் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஆடியோ கிளிக் செய்ய ஆடியோவின் இக்வேல்லைசர் உங்களுக்கு கிடைக்கும். அதில் வேண்டிய அட்சஜ்ட்மேண்ட் செய்து ஆடியோவினை கேட்டு மகிழலாம். அதனைப்போல அதில் அடுத்துள்ள Colors டேபினை கிளிக் செய்ய உங்களுக்கு கிடைக்கும் விண்டோவில் ;படத்தில் வேண்டிய நிறத்தினை கொண்டுவரலாம்.அதனைப்போலவே படத்திற்கு சப்டைட்டிலும் நாம் கொண்டுவரலாம். படத்தினை வேண்டிய அளவிற்கு வேகமாக -மெதுவாக நகர்த்தும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடியோ - ஆடியோ பதிவுகளை தொடர்ந்தோ -குலுக்கல் முறையிலோ ஒலிக்க செய்யலாம்.நிறைந்த வசதிகளை கொண்டு கம்யூட்டரில் குறைந்த இடம்பிடிப்பதால் தாராளமாக நாம் பயன்படுத்தலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துதுக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

பொன் மாலை பொழுது said...

மாப்ள.....டான்க்சு ....இன்னா ....பவரு கட்டு பூடிச்சா........கீதா?

மஞ்ச ஆட்டோ ரொம்பத்தா பிஷியா கீது. பேசகூட டயம் இல்லியாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...