வேலன்:-கம்யூட்டர் இன்ஜினியர்.

வீட்டினை பார்த்துக்கொள்ள ஒரு மகாலட்சுமி வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதுபோல நமது கம்யூட்டரை நன்கு பார்த்துக்கொள்ள ஒரு சாப்ட்வேர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கம்யூட்டர் மெயின்டனஸ்க்காக நாம் செய்யும் அனைத்துப்பணிகளையும் இந்த சின்ன சாப்ட்வேர் நமது ஒரு கிளிக் மூலம் செய்து முடிக்கின்றது.Wise PC Engineer என பெயருடன் 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் Registry Utility,Disk Utility,Other Utility  என மூன்றுவிதமான Utility கள் கிடைக்கும். Registry Utility யில் Registry Backup.Registry Clean.Registy Defrog மற்றும் Startup Programme Manager என யுடிலிட்டிகள் உள்ளன. தேவையானதை நாம் தேர்வு செய்துபயன்படுத்தலாம். மேலும் Disk Utility யில Disk Cleaner.Disk Defregment.File recovery File Scrap என பல உபயோகமான யுடிலிட்டிகள் உள்ளது.
இதில் உள்ள Disk Defragment கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது. இதில் வண்ணவண்ண சதுரமான சின்ன கட்டங்கள் நமது பார்வைக்கு தெரிந்து ஒழுங்கான வடிவில் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.'
கடைசியாக Other Utility  memory optimizer.Auto shotdown.,File Hidern.File Encrypter  என பல யுடிலிட்டிகள் இருக்கும்.Memory Optimizer கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.
மற்ற சாப்ட்வேர்களில் இல்லாத சிறப்பு அம்சமாக பைல் ரெகவரி இதில் உள்ளது.இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான டிரைவினை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நல்ல நிலையில் உள்ள பைல்களை நாம் தேர்வு செய்து நமது டிரைவில் சேமித்து பின்னர் பயன்படுத்தலாம்.இந்த் சாப்ட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

Anonymous said...

Nice, thanks...

Jayadev Das said...

\\The file link that you requested is not valid. \\ ஐயா...... போலீஸ்கார ஐயா.............. கிணத்தைக் காணோமையா......... எபாடியாச்சும் கண்டுபிச்சுக் குடுங்கையா........

கல்விக்கோயில் said...

\\The file link that you requested is not valid. \\ அதே அதேதான் எனக்கும்.

Anonymous said...

புது மென்பொருள்------நன்றி வேலன் சார்

Balaji Jayaraman said...

Good Post on PC utilities.. much helpful during maintenance of laptop and formatting the hard disk.. thank you velan..

Jayadev Das said...

@ wesmob
@ Balaji Jayaraman

ஏம்பா தெய்வங்களே, உங்களுக்கு மட்டும் அந்த ஃபைலை டவுன் லோடு பண்ண முடிஞ்சதா? எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்களேன்பா............?

வேலன். said...

சில தொழில்நுட்ப காரணங்களால் இணைப்பு சரியாக வேலைசெய்யவில்லை. நேரடி இணைப்பினை கொடுத்துள்ளேன்..பயன்படுத்திப்பாருங்கள்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வாழ்க வளமுடன்
வேலன்

Jayadev Das said...

நன்றி நண்பரே. இது டிரையல் வெர்ஷன் போல, இதை permanent-டாக பயன்படுத்த முடியுமா?

Dass crazy said...

hello velan sir.,i am dass your big fan sir.sir pls post nokia c6 software and HQ games

Related Posts Plugin for WordPress, Blogger...