கணக்கு பாடத்தில் முக்கியமான பாடமான பரப்பளவு,சுற்றளவு.கொள்ளளவு கண்டுபிடிக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 2D Shapes என்பதில் Square.Rectangle.Circle.Triangle.Parallelogram.Tripezoid.Ellipse போன்றவற்றின் அளவுகளை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
வரும் டேபில் உங்களுக்கு தேவையான வடிவத்தினை தேர்வு செய்யவும். நான் முக்கோணம் தேர்வு செய்துள்ளேன்.இதில் மூன்று பக்கங்களின் அளவினையும் உயரத்தினையும் குறிப்பிடவும். பின்னர் இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்யவும். உங்களுக்கு சில வினாடிகளில் அதன் சுற்றளவு மற்றும் ஏரியா உங்களுக்கு கிடைக்கும்.அதுபோல முப்பரிமான வடிவங்களில் 11 வடிவங்கள் கொடுத்துள்ளார்கள்.இதிலிலும் நமக்கு தேவையான அளவினை கொடுத்தால் நமக்கான விடை உடனே கிடைக்கும். மாணவர்களுக்கு இது மிகவும் பயன்படும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment