வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.

சில வீடியோக்களில் நாம் தனிப்பட்ட படங்கள் ;வைத்திருப்போம். அவ்வாறான வீடியோக்களை நாம் கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்து வைக்கலாம். நாம் தேவைப்படும் சமயம் இந்த மென்பொருள் மூலம் வீடியோவினை கடவுச்சொல் நீக்கி பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இஙகு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த மென்பொருளை முதன் முதலில் நீங்கள் பயன்படுத்துகையில்  நீங்கள் கடவுச்சொல்லினை உள்ளீட வேண்டும்.  

 ஒ,கே.சொல்லி வெளியேறுங்கள். அடுத்து மீண்டும் நீங்கள் இந்த மென்பொருளை திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். பின்னர் கடவுச்சொல்  உள்ளிட சொல்லி அதற்கான விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் கொடுத்து கடவுச்சொல்லினை கொடுக்கவும்.
இப்பொது மீண்டும் உங்களுக்கு விண்டோ திறக்கும். அதில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய வீடியோ பைலினை திறக்கவும்.
 இதன் வலதுபுறம் லாக்கார்.அன்;லாக்கர்.டெலிட்டர்.செட்டிங்ஸ் பிளேயர் என ஐகான்கள் கொடுத்துள்ளார்கள்


பூட்டு ஐகானினை கிளிக் செய்து தேவையான வீடியோவினை தேர்வு செய்திடுங்கள். இப்:போது அந்த வீடீயோ உள்ள இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோவானது கீழ்கண்டவாறு தெரியவரும்.
உங்களின் உண்மையான வீடியோவானது மறைந்து இந்த வீடியோ தெரியவரும். இதில் நீங்கள் ப்ளே செய்யும் சமயம் வீடியோ தெரியாது.இப்போது மீண்டும்  உங்கள் மென்பொருளை திறங்கள்.உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்திடுங்கள். பின்னர் அன்லாக் பட்டனை கிளிக் செய்திடுங்கள். உங்கள் வீடியொவானது இப்போது ப்ளே ஆகும். வீடியோவினை பார்த்து மகிழலாம். இவ்வாறாக உங்கள் வசம் வீடியோ பைல்களை மற்றவர்கள்  பார்வையிலிருந்து மறைத்து நீங்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...