ஜிமெயிலில் நாம் தகவல்களை அனுப்புவோம்.பெறுவோம்.சேமித்து வைப்போம் என நிறைய ஆப்ஷன்கள் இருக்கும். அதனை நாம் நமது கணினியில்சேமித்துவைக்க இந்த இணையதளம் உதவுகின்றது. இதனை காண இங்கு கிளிக்செய்யவும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள அனைத்து ஆப்ஷன்களும் இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் ஆப்ஷனை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
நான் ஜிமெயில் மட்டும் தேர்வு செய்துள்ளேன். அதில் உள்ள செலக்ட் ஐட்டம்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன்ஆகும்.
உங்கள் மெயிலில் உள்ள லேபிளில் தேவையானதை தேர்வு செய்திடுங்கள்.
பின்னர் நீங்கள் கீழே உள்ள ஓ.கே மட்டும் கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள டெலிவரி மெத்தட் கிளிக்செய்திடவும்.
உங்களுக்கான ஜிமெயில் கணக்கினை எந்த வகையில் சேமிக்க விரும்புகின்றீரகளோ அதனை தேர்வு செய்திடுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக மேனேஜ் அர்சிவ் கிளிக் செய்திடுங்கள்.
நீங்கள் தேர்வு செய்ததிற்கு ஏற்ப உங்களுக்கான ஜிமெயிலில் உள்ள விவரங்கள் சேமிப்பாவதை நீங்கள் காணலாம். இதன் மூலம் உங்கள் விவரங்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
2 comments:
அருமை
Blogger BHARATHI MOHAN said...
அருமை
நன்றி சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.
Post a Comment