வங்கியில் நாம் வரவு செலவு செய்கையில் நமது பணபரிமாற்றம் பாயிண்ட்டுகளாக சேரும்.அவ்வாறு சேரும் பாயிண்டுக்கள் பின்னர் சிபில் ஸ்கோராக கணக்கிடப்படும். நமது சிபில் ஸ்கோர் சுமார் 700 மேல்இருந்தால் நீங்கள் எந்த வங்கியில் இருந்தும் சுலபமாக கடனை பெறலாம். சிபில் ஸ்கோர் இருந்து வங்கியில் கடன் மறுக்கப்படுமானால் நீங்கள் வங்கியின் மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்லலாம். அந்த சிபில் ஸ்கோரினை கணக்கிட இந்த இணையதளம் உதவுகின்றது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பான்கார்ட்டில் உள்ளவாறு உங்கள் விவரங்களை உள்ளீடுங்கள். உங்கள் ;இமெயில் முகவரி மற்றும் உங்கள் செல்பேசி எண்ணை குறிப்பிடுங்கள். உங்கள் மாத வருமானம் மற்றும் ஆண்டுவருமானம் பற்றி குறிப்பிடுங்கள்.இறுதியாக ஓ.கே.தாருங்கள்.உங்களுக்கு கீழ்க்ண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள ;போனுக்கு வந்த ஓடிபி எண்ணை இதில் குறிப்பிடுவும்.
இப்போது விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் இமெயில்முகவரிக்கு வந்த எண்ணை இதில் உள்ளீடுங்கள்.பின்னர் சப்மிட் கிளிக் செய்திடுங்கள்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் சிபில் ஸ்கோரானது கிடைக்கும்.
வங்கியில் உங்கள் பண பரிவர்த்தனை பொறுத்து உங்கள் சிபில் ஸ்கோரானது நிர்ணயிக்கப்படும். உங்கள் சிபில் ஸ்கோரினை காப்பி செய்து பின்னர் வங்கியில் கொடுத்து நீங்கள் கடன்தொகை பெறலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment