வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் அளவினை குறைக்க -BlackBird Cleaning

கேமரா மற்றும் செல்பேசி மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் அளவு அதிகமாக இருக்கும். அதனை இணையத்திலோ மற்றவர்களுக்கோ அனுப்புவது சிரமம். அவ்வாறு உள்ள புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைத்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்றுஇதனை பதிவிறக்கம செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.



 உங்களிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்திடுங்கள்.அதன் தரம் குறையாமல் அளவ குறைவதனை பாருங்கள்.

இதன் கீழே உள்ள விண்டோவில் தரம்.பிரைட்னஸ்,புளுர்.கலர்,கான்ட்ரஸ்ட் என ரேடியோ பட்டன்கள் கொடுத்துள்ளார்கள் நமக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
தனிதனி புகைப்படங்களையும் ஒரு போல்டரில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் மாற்றிட இந்த மென்பொருள் வகைசெய்கின்றது. 

இதில் உள்ள பேட்ச் ஆப்டிமைஷனை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள போல்டரினை தேர்வு செய்துகொள்ளலாம். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் அளவு குறைந்து நீங்கள் சேமித்த இடத்தில ;இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

சுதீர் said...

அய்யா நான் இதற்க்கு முன்னர் உங்களிடம் போடோஷாப் பில் இரண்டு டாக்குமெண்டுகளை எவ்வாறு இணைப்பது என்பது பற்றி கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் எனக்கு அதற்க்கு ஒரு பதிலும் தரவில்லை. அய்யா என்னுடன் சிறிய ஸ்கானர் தான் உள்ளது. நமது வாகன பதிவு பத்திரம் அந்த ஸ்கானரில் அப்படி ஸ்கான் பண்ணி இடிக்க முடியாது.அதை இரண்டாக மடக்கி தான் ஸ்கான் பண்ண வேண்டும்.அப்படி பண்ணும்போது அது இரண்டு பாகங்களாக தான் இருக்கும்.அந்த இரண்டையும் இணைப்பதை பற்றி தான் நான் கேட்டிருந்தேன்.அய்யா எனக்கு அதை ஒன்று விளக்கி தருமாறு உங்களுடன் கேட்கிறேன்.நன்றி அய்யா .

Related Posts Plugin for WordPress, Blogger...