Showing posts with label வேலன்.போட்டோஷாப்.photoshop.photoshop tircks.. Show all posts
Showing posts with label வேலன்.போட்டோஷாப்.photoshop.photoshop tircks.. Show all posts

வேலன்-போட்டோஷாப் -பல்ப்பினுள் புகைப்படம் கொண்டுவர

சுற்று சூழல் மாசு அடைவதை முன்னிட்டு குண்டு பல்ப்க்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டார்கள்.வீடுகளில் பயன்படுத்திவரும் குண்டு பல்ப்க்களை எடுத்துவிட்டு அதற்கு பதில் குழல்விளக்குகளை பயன்படுத்துமாறு அறிவுரைத்துள்ளார்கள். சரி .இருக்கின்ற குண்டு பல்ப்க்களை என்னசெய்வது? கவலையை விடுங்கள் .விருப்பமான புகைப்படங்களை பல்ப்பினுள் கொண்டுவந்துவிடலாம்.அந்த ஆக்ஷன் கொண்டுவர இங்கு கிளிக் செய்யவும்.வழக்கப்படி போட்டோஷாப்பினை திறந்துகொண்டு ஆக்ஷன் டூலை இணைத்துவிடுங்கள்.தேவையான படம் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 புகைப்படத்தை பல்ப்பினுள் சரியான நகர்த்தி வைத்து கொண்டு கர்சர் மூலம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்.இறுதியாக என்டர் தட்டுங்கள்.சில நிமிடங்களில் பல்ப்பினுள் படம் தயார். கீழே உள்ள படங்களை பாரு்ஙகள்.
சாதாரண படம் -
டிசைன் செய்தபின் வந்துள்ள படம் கீழே-
பல்ப்பினுள் ஒட்டகம் மேய்க்கலாம் வாங்க-
 கப்பலையும் ஒட்டலாம்
உங்கள் கற்பனையில் எந்த படங்களை பொருத்தவேண்டுமோ அதனை பொருத்தி அழகுப்பாருங்கள். மற்றவர்களுக்கும் பரிசளியுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள் கருததுக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


சற்று முன் வந்த தகவல்- TNPSC யின் தேர்வு முடிவுகள் வந்துள்ளது. தேவைபடுபவர்கள் பதிவிறக்கி பார்த்துக்கொள்ளவும்.பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
நன்றி - Sudheep sankar 


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...