Showing posts with label ms word. Show all posts
Showing posts with label ms word. Show all posts

வேலன்:-Character Map- உபயோகிப்பது எப்படி?

கம்யூட்டருக்கு புதியவர்களாக இருந்தாலும் சரி - தட்டச்சு தெரியாதவர்களானாலும் சரி...அவர்களுக்கு கீ - போர்டில் உள்ள கீ கள் எதற்கு பயன்படும் என தெரியாது. முக்கியமாக தமிழ் தட்டச்சு செய்யும் சமயம் தடுமாறலாம்.ஏன் என்றால் தமிழ் பாண்டில் ஒவ்வொரு கீ கும் ஒவ்வொரு எழுத்துக்களை ஒவ்வொருமுறையில் செட் செய்து வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு பாமினிபாண்ட்டில் A என்கின்ற எழுத்தை அழுத்தினால் ய என்கின்ற எழுத்துவரும். ஆனால் வேறு ஒரு தமிழ்பாண்டில் வேறு எழுத்து வரும். இந்த சமயங்களில வரும் குழப்பத்தை தவிர்க்க நாம் ஆன்-கீ போர்ட் உபயோகிக்கலாம்.(இது பற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்) இப்போது அதைப்போல் பயன்படும் ஆனால் அதைவிட வித்தியாசமான Character Map என்பதனை எப்படி பயன்படுத்துவது என பார்ககலாம். நீங்கள் வழக்கப்படி Start-Programe-Accessories-System Tool -Character Map என்பதனை தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.



இதை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Font என்பதில் தேர்வு செய்ய உங்கள் கம்யூட்டரில் உள்ள பான்ட்கள் தெரியவரும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். உங்களுக்கு தேவையான பான்ட் தேர்வு செய்யுங்கள். நான் பாமினி தேர்வு செய்துள்ளேன்.
இப்போது உங்களுக்கு தமிழ எழுத்துக்கள். கட்டங்களில் வரும் .நீங்கள் எந்த எழுத்து வேண்டுமோ அந்த எழுத்தை அழுத்த அது பெரியதாக தெரியும் பின்னர் கீழே உள்ள Select என்பதை கிளிக் செய்யுங்கள்.இவ்வாறு அந்த வாக்கியத்தின் அனைத்து சொற்களையும் தேர்வு செய்யுங்கள். சொற்களை தேர்வு செய்ததும் காபி கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நான் வாழ்க வளமுடன் என்கின்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளேன்.
அவ்வளவுதாங்க. இப்போது இந்த வார்த்தையை வேர்ட், எக்ஸெல்,நோட்பேட்,வேரட் பேட் என எங்கு வேண்டுமோ அங்கு சென்று பேஸ்ட் செய்தால் போதுமானது.என்னடா இவன் இதுகூடவா தெரியாது என நீங்கள் நினைப்பது சரி...ஆனால் புதியவர்களுக்கு..? மேலும் அடுதது வரும் பதிவு தமிழ்பாண்ட் பற்றியது. அதற்கு இந்த பதிவு நிச்சயம் உதவும்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். 
வாழ்க வளமுடன்
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
சீக்கிரம் குதிங்கப்பா...அப்புறம் குளிக்கறத்துக்கு தண்ணியில்லாம போகப்போகுது...
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இந்த டிசைனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-MS WORD -ல் காப்பி/பேஸ்ட்டின் போது லிங்க் ஏற்படுத்த.



வேர்டில் சில சமயம் ஒரே டாக்குமெண்டை இரண்டு இடங்களில் சேமித்து வைக்கும் தேவை ஏற்படும். அவ்வாறான சமயங்களில் நாம் முதல் டாக்குமெண்டில் மாறுதல் செய்தபின்னர் நாம் சேமித்து வைத்துள்ள இடத்திலும் சென்று மாறுதல் செய்ய வேண்டும். ஆனால் வேரட் டாக்குமெண்டை நாம் சேமிக்கும் போதே கூடுதல் வசதியில் சேமித்துவிட்டால் முதல் டாக்குமென்டில் சேமிக்கும் போதே இரண்டாவது டாக்குமென்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடும். ரமணா படத்தில் யுகிசேது என்பவர் ஒரு டயலாக் சொல்லுவார். "இங்க அடித்தால் அங்க வலிக்கும்" அதுபோல இங்க நாம் மாற்றம் செய்தால் அங்கே தானே மாற்றம் வரும். இனி அதை எப்படி நடைமுறைபடுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்.
முதலில் சேமிக்க விரும்பும் டாக்குமென்டை திறந்துகொள்ளுங்கள். பின்னர் அதை ஹைலைட் செய்துகொள்ளுங்கள்.மவுஸ் பாயின்டரை அதன் நடுவில் கொண்டு செல்லுங்கள்.பின் ரைட் கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.. 
இதனை நீங்கள் ஒட்டவேண்டிய இடத்திற்கு இழுத்து செல்லவும்.(ஓரே டெக்ஸ்டாப்பில இரண்டு விண்டோக்கள் ஓப்பன செய்து கொள்வது உங்களுக்கு வசதியாக இருக்கும்.இதுபற்றி நான்ஓரே சமயத்தில பல்வேறு விண்டோக்களில் பணிபுரிய என்கின்ற தலைப்பில் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.புதியவர்கள் -மறந்துவிட்டவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.)இப்போது மவுஸை நீங்கள் விட்டுவிட்டாலும் டெக்ஸ்ட் காப்பி ஆகாது. அதற்கு பதில உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.          

இதில் காப்பிக்கும் - மூவ் க்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியும் என நினைக்கின்றேன்.இப்போது மூன்றாவதாக உள்ள லிங்க் ஹியர்-Link Here என்பதை கவனியுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதனை கிளிக் செய்ய உங்களுக்கு அந்த விண்டோவில் டெக்ஸ்டானது காப்பி செய்யபட்டுவிடும்.இதன் பயன் என்னவென்றால் ஒரிஜினல் டெக்ஸ்ட்டுடன் இது லிங்க் செய்யப்படுவதால் ஒரிஜினலில் நீங்கள் மாற்றம் செய்யும் சமயம் இந்த டாக்குமென்டிலும் மாறுதல்கள் தானே ஏற்பட்டுவிடும்.அதற்கு கீழேயே Create Hyperlink Here என இருப்பதை காணலாம். இது எந்த இடத்திலிருந்து நீங்கள் டெக்ஸ்டை எடுத்தீர்கள் என காண்பிக்கும். ஆனால் ஒரிஜினலில மாற்றங்கள் செய்தால இதில மாற்றங்கள் ஏற்படாது.தேவைபடுபவர்கள் தேவைபடும் வசதியை பயன்படுத்திக்கொள்ளவும்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
 வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
வெயில் ஒன்னும் சாமாளிக்க முடியலை...என்ன பண்றது ?அதான் உடம்பை கூல் செய்து கொள்கின்றேன்.
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வார்த்தைகளை தேடு (Word Search)



ஆங்கிலத்தில் தான் அறிவை விருத்திசெய்துகொள்ள எவ்வளவு வழிகள்.இந்த சாப்ட்வேர் 400 கே.பி. அளவுடையது. இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரில் சிறு சிறு வார்த்தைகளை கொடுத்துள்ளார்கள்.மொத்தம் 4 லெவல்கள். அதில் ஒவ்வோன்றிலும் 5 குரூப்புகள். அந்த 5 குரூப்புகளிலும் 10 தலைப்புகள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 ஒவ்வோரு தலைப்பிலும் 20 க்கும் மேற்பட்ட வார்த்தைகள்.நாம் நமக்கு தேவையான குரூப் தேர்வு செய்து அதில் தேவையான தலைப்பை தேர்வு செய்ததும் நமக்கு வார்த்தைகள் கலந்து கட்டம் வரும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.(இதில் சக பதிவர்கள் பெயர்கள் உள்ளன.மொத்தமாக 50 பேரை Submit செய்ததில் குலுக்கல் முறையில் அதுவே தேர்வு செய்த பெயர்கள் கீழே.)

அதில் வலப்புறம்  உள்ள வார்த்தை களை இடப்புறம் உள்ள கட்டத்தில் தேட வேண்டும். வார்த்தையை நீங்கள் கண்டுபிடித்ததும் கர்சரை கொண்டு கோடுபோடவேண்டும். அந்த வார்த்தையானது சிவப்பு கட்டம் கட்டப்படும்.
அதே சமயம் வலப்புறம் உள்ள வார்ததைக்கு டிக் அடையாளம் கிடைக்கும்.
இதுமட்டும் அல்லாமல் நாம் விருப்பமான வார்த்தைகளை இதில் கொடுத்து நாமே கட்டங்களை உருவாக்கலாம்.அதற்கு Tools - Create my own puzzle - என உருவாக்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 

நான் நமது பதிவர்கள் சிலரது பெயரை கொடுத்து வார்த்தைகளை உருவாக்கினேன். கட்டத்திற்கு ஏற்ப அது சில பெயர்களை எடுத்துக்கொண்டு சில் பெயர்களை விட்டுவிட்டது. கீழே உள்ள கட்டத்தை பாருங்கள்.
பதிவர்களின் பெயரினை பாருங்கள்.
அனைத்துவார்த்தைகளையும் நீங்கள் கண்டுபிடித்ததும் உங்களுக்கு வாழ்த்துகிடைக்கும். சில வார்த்தைகள் தெரியவில்லையென்றால் அதற்கு உதவி கேட்கும் வசதி உள்ளது.அதற்கு Tools- Show me கிளிக் செய்தால் தேவையான வார்த்தையை நமக்கு தேடி கொடுக்கும்.

இது தவிர வேறு என்ன செய்யலாம். நாம் நமது குழந்தைகளின் ஏதாவது ஒரு சப்ஜெட் எடுத்து அதில் உள்ள பாடத்தில் உள்ள வார்த்தைகளை கொண்டு இதுபோல் ஒரு கட்டம் உருவாக்கலாம். அவர்களை வார்த்தைகளை தேட சொல்லலாம். அறிவு வளர்வதோடு அவர்களுக்கு அந்த வார்த்தையையும் ஒரு முறை படித்ததுபோல் ஆகும்.  பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். 
வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
 தலைமுடியை நீளமாக வளர்த்தால் எப்படியெல்லாம் உபயோகமாகின்றது பாருங்கள்.  

இன்றைய PSD டிசைன்புகைப்படம் கீழே:-
டிசைன்செய்தபின் வந்தபுகைப்படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வேர்ட்டை திறக்காமலேயே ஆங்கிலசொல்லுக்கு அர்த்தம் அறிய




வேர்ட்டில் நாம் ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான அர்த்தமும்
மாற்றுச்சொல்லும் கண்டு கொள்ளலாம். ஆனால் வேர்ட்டை
திறக்காமலேயே வெளியில் இருந்து ஆங்கில வார்த்தை
களுக்கு சரியான  அர்த்தம் இந்த சாப்ட்வேர்
 மூலம்நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். 7.5 எம்.பி.
 கொள்ளளவு கொண்டஇந்த சாப்ட்வேரை டவுண்லோடு
செய்ய இங்கு கிளிக் செய்யவும். நாம் டவுண்லோடு
 செய்து பின்னர் கணிணியில்இன்ஸ்டால் செய்துகொள்ள
வேண்டும். அதை இன்ஸ்டால் செய்யும்சமயம் நமக்கு 
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு தேவையான தேசத்தின் மொழியை தேர்வு செய்து 
கொள்ளலாம். நான் ஆசியா தேசத்தை தேர்வு செய்துள்ளேன். 
பின்னர்இன்ஸ்டால் செய்யவும். இதை செய்து முடித்ததும்
 உங்களுக்கு இந்தசாப்ட்வேரானது டாக்ஸ்க்பாரில் வந்து
 அமர்நது கொள்ளும்.
இதில் உள்ள வேர்ட் வேப் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு
 கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நமக்கு அர்த்தம் தேவைபடும் வார்த்தையை
 Lookup in என்கின்றகட்டத்தில் தட்டச்சு செய்து Search
கொடுக்கவும். நான் Verify என்கின்றவார்த்தையை தட்டச்சு
 செய்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இந்த வார்த்தைக்கு Nearest வார்த்தைகள்  நமக்கு கிடைக்கும்.
 அதேசமயம் நமக்கு அதன் சரியான அர்த்தமும் கிடைக்கும்.
 மேலும் கீழே உள்ளSynonyms  கிடைக்கும்.
 இதில் உள்ள இதர Tab-களையும் பாருங்கள்.
The related word tabs show the following types of related 
words when available:
Synonyms
Words which mean the same in some context
e.g. close is a synonym of shut.
Antonyms
Words meaning the opposite in some context
e.g. big is an antonym of little
 See Also
Mostly related word forms and compounds
e.g. cut gives see also cut off, cutter, etc.
 Type of
Shows less specific words.
e.g. a comedy is a type of play
 Types
Shows more specific words.
e.g. flower has daisy as one of its types
 Parts
Shows words for part of an object
e.g. tree is one of the parts of a forest
 Part of
Shows words for a collection or the whole
e.g. bumper is a part of a car
 Similar
Words with meanings that are close
e.g. big is similar to huge


இதில் உள்ள பாண்ட் அளவுகளையும் நாம் மாற்றிக் 
கொள்ளலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள்
இதில் உள்ள வார்த்தைக்கு சரியான உச்சரிப்பை கேட்க
இதில் உள்ள ஸ்பீக்கர் பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். ஓ.கே. கொடுத்தால்
உங்களுக்கு அதன் சரியான உச்சரிப்பு கேட்கும்.
  
இதன் Hot Key கொண்டுவர  Options சென்று Hot Key யை
கிளிக் செய்யவும்.
பயன் படுத்திப் பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
 வாழ்க வளமுடன்:,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஷாப்பிங்க்கு செல்ல எவ்வளவு பெரிய கூடை 
கொடுத்துள்ளா பாருங்க...!
இன்றைய PSD-டிசைன் போட்டோ படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதன் கொள்ளளவு
வெறும் 500 கே.பி. தான்.
இதுவரை வேர்ட் வெப்பை பயன்படுத்தியவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...