கம்யூட்டரில் ஆடியோ பதிவு செய்ய

கம்யூட்டரில் ஆடியோ பதிவு செய்ய



நாம் பேசும் பேச்சு, பாடல்,கவிதை என அனைத்தையும்

கம்யூட்டரில் பதிவு செய்து அதை மீண்டும் கேட்கலாம்.

விருப்ப பாடலை பாடி அதை சி.டி.யாக மாற்றி

போட்டு கேட்கலாம். முதலில் நமது கம்யூட்டரில்

ஆடியோ பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் ஒரு நல்ல நிறுவனத்தின் Head Phone with Mic

வாங்கிக்கொள்ளுங்கள். ரூபாய் 150 லிருந்து தரமான

Head Phone with Mic கிடைக்கின்றன.






அந்த மைக்கில் பார்த்திர்களே ஆனால் இரண்டு பின்கள்

(பெரும்பாலும் கருப்பு மற்றும் சிகப்பு நிறத்தில் )

இருக்கும்.


அதை உங்கள் கம்யூட்டரின் பின்புறம்

முன்புறம் இணைப்பு கொடுத்திருந்தால் முன்புறம்

ஸ்பீகர் உள்ள இடத்தில் சொருகவும். இங்கு

ஒரு முக்கியமான விசயத்தை பார்க்கவேண்டும்.

எங்கு பட்டன் உள்ளதோ அங்கு பின்னை சொருகிவிட

கூடாது. இதனால் உங்கள் ஆடியோ டிரைவர் பாதிக்கப்

படலாம். இப்போது நீங்கள் கருப்பு பின்னை நன்றாக

பார்த்தீர்களே ஆனால் அதில் ஸ்பீக்கர் படம் போட்டு

இருக்கும் . அதை கம்யூட்டரில் உங்கள் ஸ்பீக்கர் அவுட்

புட் வரும் இடத்தில் சொருகவும்.உங்கள் கம்யூட்டரில்

புதிய வன்பொருள் உணரப்பட்டு அதன் அடையாளமாக

இப்போது உங்களுக்குஇதுபோல் படம் ஒன்று ஓபன் ஆகும்.

இதில்Head Phone எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு

செய்து ஓகே கொடுக்கவும்.



இப்போது அடுத்து உள்ள சிகப்பு நிற பின்னை பார்த்தீர்களே

ஆனால் அதில் மைக் படம் போட்டிருக்கும். அதை அதற்கான

பின்னில் சொருகவும். இப்போது உங்கள் கம்யூட்டரில்

கீழ்கண்டவாறு படம் தோன்றும்.



இதையும் முன்பு சொன்னது போல் மைக் முன்உள்ள

ரேடியோ பட்டனை தேர்வு செய்து ஒகே கொடுக்கவும்.

சரி. இப்போது நாம் ஸ்பிக்கர் மற்றும் மைக் இணைப்பை

கொடுத்துவிட்டோம். அடுத்து நமது ஸ்பீக்கர் நன்றாக

வேலைசெய்கிறதா என பார்ப்போம்.

முதலில் Head Phone with Mic -ஐ தலையில் மாற்றிக்கொள்

ளவும். மைக்கானது உங்கள் வாயின் அருகில் வருமாறு

பார்த்துக்கொள்ளவும். சரி .....





இப்போது மேற்கண்ட படத்தில் உள்ள பிளே பட்டனை அழுத்தினால்

உங்கள் இடப்புறம் உள்ள ஸ்பீக்கரும் அடுத்து வலப்புறம் உள்ள

ஸ்பீக்கரிலும் உங்களுக்கு சத்தம் கேட்கும்.


அடுத்து இப்போது எப்படி கம்யூட்டரில்

ஆடியோ பதிவு செய்வதைப் பார்ப் போம்.

முதலில் டாக்ஸ்பாரில் உள்ள Start

பட்டணை மவுஸால் கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இந்த மாதிரியான காலம்

ஓப்பன் ஆகும்.


இதில் Programe-Accessories-Entertainment-Sound

Recorder என முறையே தேர்வு செய்யவும்.


உங்களுக்கு கீழ்கண்ட வாறு கிடைக்கும்.



இது தான் நாம் பதிவு செய்ய வேண்டிய Recorder.

இதில் உள்ள சிகப்பு நிற பட்டனை அழுத்தினால்

இதில் உள்ள ஸ்லைடர் நகர ஆரம்பிக்கும்.

நீங்கள் விரும்பிய பாடல், பேச்சை பதிவு செய்ய

ஆரம்பியுங்கள்.சுமார் 60 வினாடிகள் வரை பதிவு

செய்யலாம். அதற்கு மேலும் பதிவு செய்யவிரும்பி

னால் தொடர்ந்து சிகப்பு பட்டனை அழுத்துங்கள்.

உங்கள் பதிவு முடிந்ததும் அதை மீண்டும் கேட்க

பிளே பட்டனை அழுத்தவும். இப்போது உங்கள்

இனிய குரல் உங்களுக்கு கேட்க ஆரம்பிக்கும்.

இதை Save செய்ய விரும்பினால் பைல் மெனுவில்

உள்ள சேவ் பட்டனை அழுத்தி வேண்டிய இடத்தில்

பதிவு செய்யவும். இதில் நீங்கள் ஏற்கனவே

பதிவு செய்து வைத்துள் ள பாடல்களையும்

கேட்கலாம். என்ன பாட ஆரம்பித்து விட்டீர்களா?

இது புதியவர்களுக்கான பதிவு .

வாழ்க வளமுடன்:,

வேலன்.

இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
கம் யூட்டரை ஆன் செய்தவுடன் அல்லது ஆப் செய்யும் முன் உங்கள் இ-மெயிலில் கடிதம் ஏதும் வந்துள்ளதா என சரிபார்க்கவும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

வான்முகிலன் said...

வணக்கம்.
நீங்கள் அநேகமாக கணிணி அறிமுகமான காலத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

butterfly Surya said...

நன்றி. வாழ்த்துகள்.

வேலன். said...

வணக்கம்.
நீங்கள் அநேகமாக கணிணி அறிமுகமான காலத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.//

எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என நினைக்க முடியாது. தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவே - புதியவர்களுக்கு என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நன்றி. வாழ்த்துகள்//

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

RAMASUBRAMANIA SHARMA said...

தகவல்கள் அருமை வேலன்....நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்ட பதில்...ஒரு ஷொட்டு..."கற்றது கை மண் அளவு...கல்லாதது கடலளவு"...தொடர்ந்து பதிவிடுங்கள்....

ஆனந்த். said...

என்னை போன்று புதிதாக கணினியை பயன் படுத்துபவர்களுக்கு, எளிய முறையில் புரிஉம் படி உங்களின் விளக்கம் உள்ளது. நன்றி.

வேலன். said...

RAMASUBRAMANIA SHARMA கூறியது...
தகவல்கள் அருமை வேலன்....நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்ட பதில்...ஒரு ஷொட்டு..."கற்றது கை மண் அளவு...கல்லாதது கடலளவு"...தொடர்ந்து பதிவிடுங்கள்....//

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆனந்த். கூறியது...
என்னை போன்று புதிதாக கணினியை பயன் படுத்துபவர்களுக்கு, எளிய முறையில் புரிஉம் படி உங்களின் விளக்கம் உள்ளது. நன்றி.//

நன்றி ஆனந்த அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

HS கூறியது...
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்//

தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Tech Shankar said...

இதையும் முயற்சிக்கலாம்

http://audacity.sourceforge.net/

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
இதையும் முயற்சிக்கலாம்

http://audacity.sourceforge.net///

தகவலுக்கு நன்றி நண்பரே..

கணிணியிலேயே உள்ள வசதியை அறிந்து கொள்ளவே பதிவிட்டுள்ளேன்.

நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

Dhavappudhalvan said...

அருமையாய் இருக்கிறது வேலன், உங்கள் பதிவுகள். நாம் முதலிலேயே குறிப்பாக 10, 20 நிமிடங்கள் என்று அதிகப்படுத்தி வைத்துக் கொள்ள வசதியுள்ளதா?

Related Posts Plugin for WordPress, Blogger...