
வாரிசுகளுக்கு அது பற்றி சுலபமாக அறிந்து
கொள்ளவே இந்த சாப்ட்வேர்.அந்த நாட்களில்
திருமணங்களில் பதினாறும் பெற்று பல்லாண்டு
வாழ்க என வாழ்த்தினார்கள். நமது முன்னோர்
பதினாறு என்றால் குழந்தைகள் என தவறாக
அர்த்தம் கொண்டு ஏதோ அவர்களால் முடிந்தவரை
பெற்றுக்குக்கொண்டார்கள். மக்கள் தொகை
பெருக்கத்தைகண்டு முழித்துக்கொண்ட
அரசாங்கம் "அளவான குடும்பம் - வளமான வாழ்வு"
என அறிவித்தது. அப்படியும் மக்கள்தொகை
குறையாததால் "நாம் இருவர் - நமக்கு இருவர்"
என திட்டம் கொண்டு வந்தது. மக்கள் தொகை
குறைவதாக இல்லை. இறுதியாக " நாம் இருவர்-
நமக்கு ஒருவர்" என பிரச்சாரம் செய்தது.
இனி வரும் காலங்களில் "நாமே இருவர்- நமக்கு
எதற்கு இன்னொருவர்" என்று சொன்னாலும்
வியப்பதற்கில்லை.(இந்த விளம்பரங்கள்-
ஆலோசனைகள் எல்லாம் ஏமாந்த மக்களுக்குதான்
அரசியல் வாதிகளுக்கு அல்ல) சரி...ஏதொ மனதில்
பட்டதை சொன்னேன். இனி விசயத்திற்கு வருவோம்.
மரங்களில் ஆலமரம் விசேசமானது. அது
கிளைகளில் வேர் விட்டு கிளைகளே
மரங்களாகும். அதுபோல் கூட்டுக் குடும்பங்களும்.
இப்போதுள்ள காலங்களில் கூட்டுக்குடும்பங்களை
காண்பது மிகவும் அரிதாக உள்ளது.
கூட்டுக்குடும்பங்களில்
தீமைகளை விட நன்மைகளே அதிகம்.
நமது குழந்தைகளுக்கு சொந்தபந்தங்கள்
ஒரு அரவணைப்பாக இருக்கும். நமது
குழந்தைகளுக்கு யார் யார் என்ன உறவு
என இந்த சாப்ட்வேர் மூலமே அறியவைக்க
கூடிய நிலையில் உள்ளோம்.
முதலில் இந்த சாப்ட்வேரை
உங்களுக்கு கீழ்கண்ட வாறு சாரளம் ஓப்பன்
ஆகும்.

இதில் உள்ள Download கிளிக் செய்து பின் கணிணியில்
இன்ஸ்டால் செய்து கொள்ளவும். உங்களுக்கு இந்த
சாரளம் ஓப்பன் ஆகும்.

இதில் மேற்புறம் உள்ள Option கிளிக் செய்து அதில்
மொழியை தேர்வு செய்யவும். நான் ஆங்கிலம்
தேர்வு செய்துள்ளேன்.

நீங்கள் இந்த சாப்ட்வேர் உபயோகிக்கும் முன்
உங்கள் உறவினர்கள் புகைப்படம்-பிறந்ததேதி-
பிறந்த இடம்-திருமண நாள்- இறந்திருந்தால்
இறந்த தேதி- இறந்த காரணம் - என அனைத்தையும்
தனியே குறித்துக்கொள்ளுங்கள். இனி இதில்
எப்படி உறவுகளை சேர்ப்பது என பார்ப்போம்.
உங்கள் தாத்தா(தந்தையின் தகப்பனார்)
விலிருந்து ஆரம்பியுங்கள்.இதில் வலப்புறம்
உள்ள Person -என்கிற காலத்தின் கீழ் உள்ள
+ Create என்பதை கிளிக் செய்யவும்.

இதில் Male என்பதை தேர்வு செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட வாறு காலம் ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள புகைப்பட காலத்தை கிளிக் செய்து
உங்கள் கணிணியில் உள்ள் புகைப்படத்தை
(உங்கள் தாத்தாவின் புகைப்படததை)
தேர்வு செய்யவும். அடுத்து அவரின்
Surname-First name - Middle Name தேர்வு
செய்யவும். அவரின் பிறந்த தேதி
தெரிந்தால் அதில் குறிப்பிடவும்.
பின் அதில் உள்ள Event கிளிக் செய்யவும்.

இதில் உள்ள Calender கிளிக் செய்தால் உங்களுக்கு
அந்த நாளின் கிழமை தெரியும்.

பின் ஓகே கொடுத்து வெளியேறவும். பின்னர் அதில்
உள்ள Occupation-ல் அவரை பற்றிய விவரங்களும்-
Commant-ல் அவரைப்ற்றிய குறிப்புகளையும்
குறித்துக்கொள்ளுங்கள். ஓகே கொடுக்கவும்.
இப்போது மெயின் காலத்தில் நீங்கள் கொடுத்த
விவரங்களுடன் அவர் பெயர் வந்துவிடும். இனி
அவர் பெயர் மீது வைத்து மீண்டும் கிளிக் செய்யவும்.

இப்போது மேற்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.
அதில் Wife என்பதை கிளிக் செய்யவும்.
மீணடும் உங்களுக்கு இந்தமாதிரி சாரளம் ஓப்பன்
ஆகும்.

முன்பு செய்த மாதிரி இதிலும் விவரங்கள் சேர்க்கவும்.
ஓகே கொடுத்து வெளியேறவும். மீண்டும் பழையபடி
முதல் நபரை தேர்வு செய்து மகன் - மகள் - சகோதரன்-
சகோதரி விவரங்கள் சேர்க்கவும்.உதாரணத்திற்கு
இப்போது நீங்கள் உங்கள் தாத்தாவின் பெயரை
சேர்த்தீர்களே ஆனால் அடுத்து உங்கள் பாட்டியின்
பெயர் - உங்கள் தாத்தாவின் உடன் பிறந்தவர்கள்
(உங்கள் சின்ன தாத்தா) - உங்கள் தாத்தாவின்
மகன்கள் - மகள்கள் - அடுத்து மகன்களின்
மனைவி - குழந்தைகள் என அடுத்தடுத்து
விவரங்களை கொடுத்துக்கொண்டே சொல்லுங்கள்.

அனைத்து உறுப்பினர்களை யும் சேர்த்ததும் உங்களுக்கு
மேற்கண்டவாறு சாரளம் கிடைக்கும். அனைத்து
உறவினர்களை யும் சேர்த்தாகிவிட்டது்.இனி
என்ன செய்யலாம். இதில் வலப்புறம் உள்ள
Person கீழ் உள்ள காலத்தில் முதலில் உள்ள
Activation கிளிக் செய்தால் நீங்கள் குறிப்பிட் ட
நபரின் விவரங்கள் தெரியும்.

அடுத்து அதன் கீழ் உள்ள Built Tree கிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தெரியும்.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் நீங்கள்
யாரை தேர்வு செய்து Build Tree கிளிக் செய்கிறீர்களோ
அவருக்கு மற்றவர்கள் என்ன உறவு என சுலபமாக
இதில் அறிந்து கொள்ள முடியும்.
இதை பிரிண்ட் எடுக்கும் வசதியும்
உள்ளதால் அழகாக பிரிண்ட் எடுத்து வைத்துக்
கொள்ளலாம்.
இதில் உள்ள Statics கிளிக் செய்தால் கீழ்கண்ட
சாரளம் உங்களுக்கு ஓப்பன் ஆகும்.

உறவின் வலிமையை அறிந்துகொள்ளுங்கள்.
பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்:,
வேலன்.
வலைப்பூவில் உதிரிப்பூக்கள்.
இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு
முடிவுகள் வந்துள்ளது. அவர்களுக்கு இந்த
தளம் உதவலாம்.
5 comments:
உயர்திரு அண்ணார் அவர்களுக்கு வணக்கம்.
நமது அலைவரிசை கூட ஒரே திசையில் பயணிக்கிறது.
//நாமே இருவர்- நமக்கு
எதற்கு இன்னொருவர்" என்று சொன்னாலும்
வியப்பதற்கில்லை//
எப்பொழுதோ சொல்லிட்டாங்க தலைவா...
நாமே குழந்தை, நமகேன் குழந்தை? அப்படின்னு..
பக்கா! பக்கா!!
தொடர்ந்து எழுதுங்கள்..
நிறைய பதிவை எதிர்பார்கின்றேன்!
நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
ஓட்ட குத்துங்க!!
தியாகராஜன் கூறியது...
உயர்திரு அண்ணார் அவர்களுக்கு வணக்கம்.
நமது அலைவரிசை கூட ஒரே திசையில் பயணிக்கிறது.//
வருகைக்கும் - கருத்துக்கும் நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
கலையரசன் கூறியது...
//நாமே இருவர்- நமக்கு
எதற்கு இன்னொருவர்" என்று சொன்னாலும்
வியப்பதற்கில்லை//
எப்பொழுதோ சொல்லிட்டாங்க தலைவா...
நாமே குழந்தை, நமகேன் குழந்தை? அப்படின்னு..
பக்கா! பக்கா!!
தொடர்ந்து எழுதுங்கள்..
நிறைய பதிவை எதிர்பார்கின்றேன்!
நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
ஓட்ட குத்துங்க!!//
நன்றி நண்பரே...நேரமின்னைகாரணமாக
தாங்கள் பதிவிற்கு வரஇயலவில்லை.
நேரம் கிடைக்கையில் அவசியம் வருகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
உயர்திரு அண்ணார் அவர்களுக்கு வணக்கம். நமது அலைவரிசை கூட ஒரே திசையில் பயணிக்கிறது.
Post a Comment