வேலன்:-150 ஆவது பதிவு.புகைப்படங்கள் சிறுதுண்டுகளாக்கி மீண்டும் சேர்க்க

இது எனது 150 ஆவது பதிவு. எனது பதிவை பார்வையிட்ட
32300 பார்வையாளர்களுக்கும் என்னை பின் தொடரும்
அன்பு உள்ளங்கள் 188 பேருக்கும் பதிவை வெளியிடும்
திரட்டிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அனைவருக்கும் இந்த பதிவை காணிக்கை யாக்குகின்றேன்.
என்றும் அன்புடன்,
வாழ்க வளமுடன்,
வேலன்.

கடைகளில்- புகைப்படங்கள் சிறு சிறு துண்டுகளா இருக்கும் . அதை
பின்னர்நாம் ஓன்றாக சேர்த்து என்ன புகைப்படம் என் பார்ப்போம்..
அதைப்போல் இந்த சாப்ட்வேரில் புகைப்படங்களை சிறு சிறு துண்டுகளாக்கி
பின்னர் நாம் சேர்க்கலாம்.நமக்கு வேண்டிய எண்ணிக்கையில் படங்களை
துண்டுகளாக்குவதோடு அல்லாமல் வேண்டிய உருவத்திற்கும் -நமக்கு வேண்டிய
புகைப்படத்தையும் இதில் பயன்படுத்தலாம்.

முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு சிரமமாக இருந்தால் 4 Shared .com மூலம்
பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்.

சாப்ட்வேரை நீங்கள் உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும்.
இந்த சாப்டவேரை நீங்கள் ஓப்பன் செய்ததும் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் அவர்களே 10 விதமான புகைப்படங்கள் வைத்துள்ளனர்.

நான் அதில் உள்ள கீழ்கண்ட புகைப்படத்தை தேர்வு செய்தேன்.
பிறகு அதில் உள்ள ஓப்பன் கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் தேர்வு செய்த படத்திற்கு மேல்புறம் கீழ்கண்ட விண்டோ
தோன்றும். அதில் உள்ள குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
நீங்கள் தேர்வு செய்த படம் துண்டு துண்டாக இருப்பதை கீழ்கண்ட
படத்தில் காணுங்கள்.

இதில் இன்னும் ஓரு வசதி உள்ளது. அவர்கள் கொடுத்துள்ள படம்
இல்லாமல் நாமே நமது படங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
காதலி,மனைவி, மகன், மகள்,தாய்-தந்தை,நண்பர் என யார் படம்
வேண்டுமானாலும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். நமது கணிணி
யில் உள்ள படத்தை தேர்வு செய்ய அதில் Import image கிளிக் செய்ய
கீழே தெரியும் விண்டோவில் நீங்கள் கணிணியில் சேர்த்து வைத்துள்ள
படத்தை தேர்வு செய்யுங்கள்.
நான் எனது படத்தை தேர்வு செய்துள்ளேன்.

படமானது இவ்வாறு துண்டு துண்டாக தெரியும். அதில் பின்புறம்
உள்ள வாட்டர் மார்க்கு ஏற்ற வாறு படத்தை பொருத்துங்கள்.இறுதியில முகத்தை பொருத்துகின்றேன்.

நீங்கள் படங்களை ஒன்று சேர்த்து முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்கள் படம் விண்டோவில் முழுவதும் தோன்றும்.

இதைப்போலவே இந்த பூங்கொத்தையும் தேர்வு செய்துள்ளேன்.

முழுவதும் சேர்த்த படம் கீழே.:-

இதில் உள்ள Tools கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்டவாறு
விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Piece Size கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் ஆறு டிசைன்கள் உள்ளது. அதன் அளவையும் துண்டுகளை
யும் தேர்வு செய்து ஓகே கொடுங்கள்.

நீங்கள் புதிய படம் தேர்வு செய்ததும் உங்களுக்கு தேவையான அளவை
தேர்வு செய்யலாம்.

நீங்கள் தேர்வு செய்த படத்தை சேமிக்கலாம்.

மேலும் இதில் உள்ள Advance Options பெற Optionsகிளிக் செய்தோ
அல்லது F8 அழுத்தியோ கீழ்கண்ட விண்டோ வினை பெறலாம்.இதில் உள்ள FunPieces கிளிக் செய்து தேவையான உருவத்தை
நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.இதில் உள்ள Tools ஆப்சனை
பயன் படுத்தி டைம் செட் செய்து கொள்ளலாம். மேலும் நீங்கள்
புதியவர் எனில் இதில் உள்ள Cheat கிளிக் செய்து Auto Solve தேர்வு
செய்தால் படம் தானே சேர்ந்துவிடும்.

இதில் ஓரு புகைப்படத்தை தேர்வு செய்து அதை வேண்டிய அளவிற்கு
துண்டுகளாக்கி அதை பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதை
ஓரு கனமான அட்டையில் ஓட்டி அதில் உள்ள கோட்டினை கத்தரிக்
கோலால் கட் செய்யுங்கள். பின்னர் அதை சேருங்கள். குழந்தைகளுக்கு
அவர்களின் படத்தையே அவ்வாறு கட்செய்து கொடுத்து சேர்க்க
சொன்னால் குதுகலமாக விளையாடுவார்கள்.

பதிவினை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்
போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இதுவரை புகைப்படத்தை துண்டுகளாக்கியவர்கள்:-

web counterபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

28 comments:

தமிழ் பிரியன் said...

150 க்கு வாழ்த்துக்கள்!

shiyamsena said...

வாழ்த்துக்கள்! 1 request if u finish Photoshop learning plz try Maya r 3D Studio

shiyamsena
http://free-funnyworld.blogspot.com/

நித்தியானந்தம் said...

நல்ல கட்டுரை......150 ஆவது கட்டுரை சீக்கிரமாக 1500 ஐ தொடவேண்டும் என்று வேண்டுகிறேன்....

நன்றி திரு.வேலன் அவர்களே

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

வாழ்த்துகள் உங்களின் 150வது பதிவிற்கு மற்றும் வரவிருக்கின்ற பதிவுகளுக்கும் சேர்த்து. வெட்டி சேர்த்து பிரித்து சேர்த்து விளையாட அருமையான பதிவு.

குழந்தைகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது.

வளர்க உங்கள் பணி, இன்று போல் என்றும் சிறக்க வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

இதுபோன்ற Evaluation மென்பொருட்களை பற்றி பதிவிடும்போது அந்தப் பதிவின் தொடக்கத்தில் இது Evaluation காப்பி குறிப்பிட்ட நாள்வரைதான் வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டால் அதை பயன்படுத்த நினைப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பார்களல்லவா....

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

யூர்கன் க்ருகியர் said...

ஹையா..ஜாலி ..இந்த விளையாட்டுக்கு பேரு என்ன ?

Congrats for 150!

Another Good day.. i can see your interest and Hardwork beneath the victory of this milestone!

Please accept my congrats!

colvin said...

150 பதிவை எட்டியிருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தொடர்ந்து உங்களின் பதிவுகள படித்து வருகிறேன். விபரமாகவும், விளக்கமாகவும் எழுதிவருகிறீரகள்.

தொடரட்டும் உங்கள் பணி.

விரைவில் 1000 பதிவை எட்டிப்பிடிப்பீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்
கொல்வின்
இலங்கை

பொன்மலர் said...

வாழ்த்துகள் வேலன் நீங்கள் மென்மேலும் எழுதவும் எனது அன்பான வாழ்த்துகள். நன்றியுடன்.

suresh said...

150 பதிவை எட்டியிருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தொடரட்டும் உங்கள் பணி.

Mrs.Menagasathia said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

வேலன். said...

தமிழ் பிரியன் கூறியது...
150 க்கு வாழ்த்துக்கள்//

நன்றி தமிழ் பிரியன் அவர்களே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

shiyamsena கூறியது...
வாழ்த்துக்கள்! 1 request if u finish Photoshop learning plz try Maya r 3D Studio

shiyamsena
http://free-funnyworld.blogspot.com/

தங்கள் வருகைக்கு நன்றி தங்கள் பதிவில் புகைப்படங்கள் நன்றாக இருக்கின்றது. நான் ரசித்தேன்-சிரித்தேன்...
போட்டோஷாப் பாடமே 200 பதிவிற்கு வரும்...அதன்பிறது மாயா....?முயற்சிக்கின்றேன்..வருகைக்கு
வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
நல்ல கட்டுரை......150 ஆவது கட்டுரை சீக்கிரமாக 1500 ஐ தொடவேண்டும் என்று வேண்டுகிறேன்....

நன்றி திரு.வேலன் அவர்களே//

நன்றி நித்தியானந்தம் சார் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

வாழ்த்துகள் உங்களின் 150வது பதிவிற்கு மற்றும் வரவிருக்கின்ற பதிவுகளுக்கும் சேர்த்து. வெட்டி சேர்த்து பிரித்து சேர்த்து விளையாட அருமையான பதிவு.

குழந்தைகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது.

வளர்க உங்கள் பணி, இன்று போல் என்றும் சிறக்க வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

இதுபோன்ற Evaluation மென்பொருட்களை பற்றி பதிவிடும்போது அந்தப் பதிவின் தொடக்கத்தில் இது Evaluation காப்பி குறிப்பிட்ட நாள்வரைதான் வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டால் அதை பயன்படுத்த நினைப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பார்களல்லவா....

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

தங்கள் கூறியதை நினைவில் வைத்திருந்தேன். ஆனால்பதிவிட இரவு 11.30 ஆகிவிட்டதால் அவசரத்தில் மறந்துவிட்டேன்...
அடுத்தமுறை பதிவிடும்சமயம் நிச்சயம் குறிப்பிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
ஹையா..ஜாலி ..இந்த விளையாட்டுக்கு பேரு என்ன ?

Congrats for 150!

Another Good day.. i can see your interest and Hardwork beneath the victory of this milestone!

Please accept my congrats!//

தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே...
விளையாட்டுக்கான சரியான சென்னை தமிழ் வார்த்தையை நண்பர் டவுசர் வசம் கேட்டுக்கொள்ளவும்...

வாழ்த்தை ஏற்றுக்கொள்கின்றேன்...
வாழ்த்தியமைக்கு ந்ன்றி....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

colvin கூறியது...
150 பதிவை எட்டியிருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தொடர்ந்து உங்களின் பதிவுகள படித்து வருகிறேன். விபரமாகவும், விளக்கமாகவும் எழுதிவருகிறீரகள்.

தொடரட்டும் உங்கள் பணி.

விரைவில் 1000 பதிவை எட்டிப்பிடிப்பீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்
கொல்வின்
இலங்கை//

நன்றி நண்பரே...தங்கள் வலைப்பதிவர் சந்திப்புக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பொன்மலர் கூறியது...
வாழ்த்துகள் வேலன் நீங்கள் மென்மேலும் எழுதவும் எனது அன்பான வாழ்த்துகள். நன்றியுடன்.ஃ

நன்றி நண்பர் அவர்களே...
தங்கள் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

suresh கூறியது...
150 பதிவை எட்டியிருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தொடரட்டும் உங்கள் பணி

நன்றி நண்பர் சுரேஷ் அவர்களே...
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

வாழ்க வளமுடன்,
வேலன்.

டவுசர் பாண்டி said...

சோக்கு, தாம்பா !! சும்மா , போட்டோ மட்டும் எறும்பு போட்டுட்டு , சும்மா பீடா , 150 பதிவு
போட்டுட்டியே தலீவா !! தூள் டக்கரு தான் போ !! ஒரு ஒரு பதிவும்
சூப்பர் பா !!: வாழ்த்துக்கள் "

சப்ராஸ் அபூ பக்கர் said...

முதல் வருகை உங்கள் வலைக்குள். நல்ல பல தகவல்கள் இருக்கின்றது. இனி அடிக்கடி வருவதாக உத்தேசம்....

வாழ்த்துக்கள் அண்ணா.......

Malu said...

Congrats! Interesting game for children. Thank you.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
சோக்கு, தாம்பா !! சும்மா , போட்டோ மட்டும் எறும்பு போட்டுட்டு , சும்மா பீடா , 150 பதிவு
போட்டுட்டியே தலீவா !! தூள் டக்கரு தான் போ !! ஒரு ஒரு பதிவும்
சூப்பர் பா !!: வாழ்த்துக்கள் ஃஃ

நீ நம்ப தோஸ்த்தா இருந்துக்கீனு இம்மா நேரம் கழித்து வரியே நியாயமா...இரு இரு மேரி அம்மாகிட்ட சொல்லிக்கிறன்.

வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
முதல் வருகை உங்கள் வலைக்குள். நல்ல பல தகவல்கள் இருக்கின்றது. இனி அடிக்கடி வருவதாக உத்தேசம்....

வாழ்த்துக்கள் அண்ணா.....//

தங்களை வலைப்பதிவுக்கு வருக வருக என வரவேற்கின்றேன்.தாங்கள் சிறந்த அறிவிப்பாளராக வர வாழ்த்தும் ...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
Congrats! Interesting game for children. Thank you.

நன்றி நண்பர் மாலு அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்

இமெயில் முகவரி: infokajan@ymail.com

வலைபூங்கா.காம்

வேலன். said...

ஈழவன் கூறியது...
இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்

இமெயில் முகவரி: infokajan@ymail.com

வலைபூங்கா.காம்ஃ

நன்றி நண்பரே...முகவரிக்கு இ-மெயில் அனுப்பிவிட்டேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...