வேலன்:-நமது செல்போனுக்கு பதிவின் கருத்துக்களை வரவழைக்க<span title=
கோடிகணக்கில் பணத்தை செலவு செய்து திரைப்படத்தை
எடுப்பவர்கள் படம் நல்ல ரிசல்ட் வரும்வரை சரியாக
தூங்க மாட்டர்கள். அவர்கள் மனம் நிலைகொள்ளாது. அதை போல்
நமது பதிவுலக நண்பர்களும். அவரவர் பதிவுகளுக்கு எவ்வளவு
ஓட்டுக்கள் வந்துள்ளது. கருத்துக்கள் எத்தனை வந்துள்ளது.
முன்னணி பதிவில் வந்துவிட்டதா? என நல்ல ரிசல்ட் வரும்வரை
தவிக்கின்றனர்.

சரி இதற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்? நமது பதிவில்
வாசகர்கள் தமது கருத்துக்களை பதிவிடும் போதே கருத்துக்கள் நமது மெயிலுக்கும்- மெயிலிருந்து நமது செல்போனுக்கும் வருமாறு
செய்யலாம். முதலில் மெயிலிலிருந்து செல்போனுக்கு தகவல்
வருமாறு செய்துக்கொள்ளுங்கள். மெயிலிலிருந்து செல்போனுக்கு
தகவல் வருவது பற்றி அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.

இப்போது நமது செல்போனுக்கு கருத்துரைகள் வருமாறு செட்
செய்வதைப்பார்க்கலாம். முதலில் உங்கள் பிளாக்கரின் டாஷ்போர்ட்-
அமைப்புகள்-கருத்துரைகள்-கருத்துரை அறிவிப்பு மின்னஞ்சல் -
எதிரில் உள்ள கட்டத்தில் உங்கள் இ-மெயில்முகவரியை
தட்டச்சு செய்து அமைப்புகளை சேமி- அழுத்தி வெளியேறுங்கள்.
கீழ் கண்ட படத்தை பாருங்கள்.

அவ்வளவுதான். இனி உங்களுக்கு பதிவில் கருத்துக்கள் வரும்போது
உங்களுடைய செல்போனுக்கு கருத்துக்கள் வரஆரம்பிக்கும்.

"கெட்டப்பழக்கம் ஏதும் இல்லாதது எனது கெட்டப்பழக்கம் " என
என்னைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதற்கு எனது சகோதரர் என்னிடம்
இருப்பதிலேயே கெட்ட பழக்கம் பதிவில் பதிவிடுவது.
ஒட்டுக்கள் வந்ததா என பார்ப்பது. கருத்துக்கள் என்ன என்ன வந்தது
என் பார்ப்பது...இவைகளை எதிர்பார்ப்பது கெட்டபழக்கம் தானே...
நண்பர் ஓருவர் பதிவிட்டு விட்டு அவசரமாக வெளியூர் சென்று
விட்டார். மணிக்கொருமுறை போன் செய்து -எவ்வளவு ஓட்டு
வந்துள்ளது - கருத்துக்கள் வந்துள்ளதா - யார் யார் கருத்து சொல்லி
உள்ளார்கள் - என்ன கருத்தினை சொல்லியுள்ளார்கள் என என்னிடம்
இணையத்தில் பார்த்து சொல்லசொல்லி கேட்டார். அப்போதுதான்
செல்போனில் கருத்துக்கள் வந்தால் எப்படி இருக்கும் என்கிற
எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

பதிவை பற்றி நண்பர் எழுதியுள்ள. இந்த பதிவையும் பாருங்கள்

பதிவினை பாருங்கள். பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்.

வேலன்.

பின் குறிப்பு:-
இன்றைய நாள் விசேஷமானது:-12.34.56.7.8.9. இந்த எண் என்ன
என்கின்றீர்களா? இதில் முதலில் உள்ளது மதியம் 12 மணி.
34 நிமிடம் 56 வினாடி. அடுத்துள்ளது இன்றைய நாள்-மாதம்-வருடம்.
மொத்தத்தையும் பாருங்கள் ஒன்றிலிருந்து ஒன்பது வரை வரும்.
இதை நேற்றே பதிவிட்டிருக்க வேண்டும்.நேற்று பதிவிட மறந்துவிட்டேன்.

இதுவரை செல்போனில் கருத்துக்களை வரவழைத்தவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

தமிழ் பிரியன் said...

நல்ல தகவல்!

shiyamsena said...

>>>>கருத்துரைகள்-கருத்துரை அறிவிப்பு மின்னஞ்சல் -<<<<

plz tell english

shiyamsena
http://free-funnyworld.blogspot.com/

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

இந்த மாதிரி நம் செல் போனுக்கு ஒவ்வொரு வாசகர்களின் கருத்துக்கும் ஒரு மெஸேஜ் வந்து கொண்டிருந்தால் உங்கள் பிரைவசி பாதிக்கப்படாதா சில நேரத்தில் யரென்றே தெரியாதவர்களின் கருத்துரைகள் வந்து டென்ஷனாக்கி விடாதா....

அதற்கு ஏதாவது செலக்டட் நபர்களின் பின்னூட்டம் மட்டும் செல்போனிற்கு வருமாறு செய்ய ஏதாவது தொழில்நுட்பம் உள்ளதா..

நல்ல பதிவு நல்ல தகவல், ஆனால் இதெற்கென்று தனி தொலைபேசி எண் வைத்துக்கொள்ள வேண்டும் இல்லையேல் சில வேளைகளில் நிம்மதி இழக்கக்கூடும.

பதிவர்களுக்கு நல்ல தகவல்களை கூறியுள்ளீர்கள் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

தமிழ் பிரியன் கூறியது...
நல்ல தகவல்!//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

shiyamsena கூறியது...
>>>>கருத்துரைகள்-கருத்துரை அறிவிப்பு மின்னஞ்சல் -<<<<

plz tell english

shiyamsena
http://free-funnyworld.blogspot.com/ஃஃ

Dash Board-Settings-Comments-Comment Notification Email-Save settings .....

Ok ...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

இந்த மாதிரி நம் செல் போனுக்கு ஒவ்வொரு வாசகர்களின் கருத்துக்கும் ஒரு மெஸேஜ் வந்து கொண்டிருந்தால் உங்கள் பிரைவசி பாதிக்கப்படாதா சில நேரத்தில் யரென்றே தெரியாதவர்களின் கருத்துரைகள் வந்து டென்ஷனாக்கி விடாதா....

அதற்கு ஏதாவது செலக்டட் நபர்களின் பின்னூட்டம் மட்டும் செல்போனிற்கு வருமாறு செய்ய ஏதாவது தொழில்நுட்பம் உள்ளதா..

நல்ல பதிவு நல்ல தகவல், ஆனால் இதெற்கென்று தனி தொலைபேசி எண் வைத்துக்கொள்ள வேண்டும் இல்லையேல் சில வேளைகளில் நிம்மதி இழக்கக்கூடும.

பதிவர்களுக்கு நல்ல தகவல்களை கூறியுள்ளீர்கள் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...நம்மை பின் தொடரும் உறுப்பினர்கள் கருத்துரையை மட்டும் வருமாறு செட் செய்யலாம்.அல்லது நமது வேறு ஒரு செல் போன் நம்பரை தரலாம்.

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

புதுப்பாலம் said...

உங்களின் எல்லா ரெகுலராக படித்து வருகிறேன்.

இப்பவும் இதோ,வந்தேன், படித்தேன். பதிவிற்கான எனது ஆதரவு ஓட்டு.

அன்புடன்
இஸ்மாயில் கனி

புதுப்பாலம் said...

உங்களின் எல்லா பதிவுகளையும் ரெகுலராக படித்து வருகிறேன்.

இப்பவும் இதோ,வந்தேன், படித்தேன். பதிவிற்கான எனது ஆதரவு ஓட்டு.

அன்புடன்
இஸ்மாயில் கனி

Jaleela said...

வேலன் சார் நீங்க கொடுத்த லிங்கில் படித்து விட்டு பதில் போட முடியல.

நன்றி இந்த பதிவை லிங்க் கொடுத்ததற்கு,

கீழே உள்ள மெசேஜ் ராஜா பிளாக்கில் அவிங்க
..
சரியாக சொல்லி இருக்கீஙக ராஜா
பாவம் அந்த பெண் எவ்வளவு நாள் கணவரிடன் சொல்லமல் இருந்திருக்கிறார்கள்.

நீங்கள் சொல்லி உள்ளது அனைத்தும் உண்மை தான்.இதை எல்லோரும் ப‌டிக்க‌னும்,
அருமையான‌ ப‌திவு...

//..நீங்கள் பதிவுலம் பக்கம் வரவில்லையென்று யாரும் சாப்பிடாமலோ, ஸ்டிரைக் பண்ணப் போவதில்லை..அவரவருக்கு சொந்த வாழ்க்கை உள்ளது..//ஹா ஹா பாயிண்ட் பாயிண்ட் நச்சுன்னு பொளந்து கட்டிட்டீஙக

தமிழினி said...

வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

Tamil10.com

வேலன். said...

புதுப்பாலம் கூறியது...
உங்களின் எல்லா ரெகுலராக படித்து வருகிறேன்.

இப்பவும் இதோ,வந்தேன், படித்தேன். பதிவிற்கான எனது ஆதரவு ஓட்டு.

அன்புடன்
இஸ்மாயில் கனி//

நன்றி இஸ்மாயில் கனி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

புதுப்பாலம் கூறியது...
உங்களின் எல்லா பதிவுகளையும் ரெகுலராக படித்து வருகிறேன்.

இப்பவும் இதோ,வந்தேன், படித்தேன். பதிவிற்கான எனது ஆதரவு ஓட்டு.

அன்புடன்
இஸ்மாயில் கனி

நன்றி இஸ்மாயில் கனி...மீண்டும் வருகைக்கும் ஒட்டுப்போட்டமைக்கும்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Jaleela கூறியது...
வேலன் சார் நீங்க கொடுத்த லிங்கில் படித்து விட்டு பதில் போட முடியல.

நன்றி இந்த பதிவை லிங்க் கொடுத்ததற்கு,

கீழே உள்ள மெசேஜ் ராஜா பிளாக்கில் அவிங்க
..
சரியாக சொல்லி இருக்கீஙக ராஜா
பாவம் அந்த பெண் எவ்வளவு நாள் கணவரிடன் சொல்லமல் இருந்திருக்கிறார்கள்.

நீங்கள் சொல்லி உள்ளது அனைத்தும் உண்மை தான்.இதை எல்லோரும் ப‌டிக்க‌னும்,
அருமையான‌ ப‌திவு...

//..நீங்கள் பதிவுலம் பக்கம் வரவில்லையென்று யாரும் சாப்பிடாமலோ, ஸ்டிரைக் பண்ணப் போவதில்லை..அவரவருக்கு சொந்த வாழ்க்கை உள்ளது..//ஹா ஹா பாயிண்ட் பாயிண்ட் நச்சுன்னு பொளந்து கட்டிட்டீஙகஃஃ

உங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பரே்..உங்கள் கருத்துரையை நண்பருக்கும் அனுப்பிவிட்டேன்.

வாழ்க வளமுடன:,
வேலன்.

வேலன். said...

தமிழினி கூறியது...
வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

Tamil10.comஃ

தகவலுக்கு நன்றி நண்பரே...இணைத்துவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்:.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...