வேலன்:-தமிழ் -தமிழ்-ஆங்கில அகராதி

நாம் ஆங்கிலம்-தமிழ் அகராதி உபயோகித்து இருப்போம்.
இந்த அகராதி தூய தமிழில் அழகான விளக்கங்களை
நமக்கு தருகின்றது:. சில கடினமான தமிழ்சொற்களுக்கு
நாம் எளிதாக தமிழ் வார்த்தை இதில் காணலாம்.
அதேபோல் ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தை
யையும் காணலாம். இந்த சாப்ட்வேர் சுமார் 70 எம்.பி.
அளவினை உடையது. இதை பதிவிறக்கம்செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம்செய்தும உங்க
ளுடைய கணிணியில் இன்ஸ்டால் செய்ததும்
 கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் முதலில் த (தமிழில் தட்டச்சு செய்ய) அடுத்து ? (நீங்கள்
இந்த சாப்ட்வேரை பயன்படுத்தும் வழிமுறை) அடுத்து E
(நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய) என மூன்று ரேடியோ
பட்டன்கள் இருக்கும் . உங்களுக்கு தேவையானதை
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு தமிழ் விசைப்பலகை தேவை
யென்றால் இங்குஉள்ள விசைப்பலகை பொத்தானை அழுத்த
வும். உங்களு்க்கு மேற்கண்ட விசைப்பலகை தோன்றும்.
அதில் உள்ளவாறு தமிழ்எழுத்துக்களை தட்டச்சு செய்யலாம்.

நான் தமிழில் ஆட்டம் என தட்டச்சு செய்தேன். அதற்கு
உண்டான வார்த்தைகள் இதில் வந்துள்ளன.
அதேப்போல் அந்த வார்த்தைக்கு தொடர்பான
சொற்களும் வலதுபுறம் விண்டோவில் தேர்வாகி
இருப்பதை காணலாம். அந்த வார்த்தையில் நாம்
கிளிக் செய்தாலும் நீங்கள் விரிவான அர்த்தங்களை
காணலாம்.
அதேப்போல் அந்த வார்த்தைக்கு முன்-பின்
சொற்களைளும் இதில் காணலாம்.
இதில் உள்ள விருப்பம் நீங்கள் கிளிக் செய்தால் உங்க
ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.


இதில் மொழி-விசைப்பலகை மற்றும் தேடுமுறையை
நாம் தேர்வு செய்து சரி யை அழுத்தினால் நமக்கு
தேவையானது கிடைக்கும்.அடுத்து விருப்பம் என்கின்ற
ரோடியோ பட்டனுக்கு கீழ் உள்ள (-) அழுத்தினால்
டிக் ஷனரியானது மினிமைஸ் ஆகிவிடும்.அதற்கு
அடுத்துள்ள புத்தகம் போன்ற ரேடியோ பட்டனை அழுத்தி
னால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் முதல் எழுததுக்கும் அடுத்த எழுத்துக்கும்தொடர்புடைய
வார்த்தைகள்-சொற்கள் நமக்கு கிடைக்கும். மேலும் இதில்
உள்ள இசை ரேடியோ பட்டனை அழுத்தினால் இனிய இசையை
நாம் கேட்கலாம். இதில் உள்ள ? அழுத்தினால் நமக்கு
இந்த அகராதியை பயன்படுத்தும் முறை விளக்கமாக வரும்.




இது இலவச-சோதனை தொகுப்பு . முழுமையான தொகுப்பை
 வாங்கஇதில் குறிப்பிட்ட முகவரியில் தொடர்புகொண்டு 
வாங்கிக்கொள்ளவும்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.


வாழ்க வளமுடன்,


வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-


நிறைய மீன் சாப்பிடவேண்டாம் என்று சொன்னேன்.
இப்பபார் ஒருத்தன் மயங்கி கிடக்கிறான். இன்னொருத்தன்
முள் தொண்டையில் சிக்கி அவஸ்தைபடுகின்றான்.


இன்றைய PSD டிசைன் -38 க்கான புகைப்படம் கீ்ழே:-


டிசைன்செய்தபின் வந்த படம் கீழே:-

இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.




அகராதியை இதுவரை உபயோகித்தவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

cheena (சீனா) said...

அன்பின் வேலன்

அருமையான தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றி

தரவிரக்கம் செய்திடுவோம் - பயன்படுத்துவோம்

நல்வாழ்த்துகள்

Anonymous said...

நல்ல தகவல்களை அளித்து வரும் உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்!

தங்களின் பதிவின் நிறந்தர வாசகனாகிவிட்டேன். நன்றி!
ஜிஆர்ஜி
புதுவை.

Anonymous said...

அருமையான தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்.

காந்தி காங்கிரஸ் said...

நல்ல தகவல்

மிக்க நன்றி

Kandumany Veluppillai Rudra said...

தமிழ் பேசுபவர்களுக்கும்,தமிழில் ஆர்வம் உள்ளவர்களுக்கும்.பயனுள்ள பதிவு

தாராபுரத்தான் said...

நன்றி,,

வேலன். said...

cheena (சீனா) கூறியது...
அன்பின் வேலன்

அருமையான தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றி

தரவிரக்கம் செய்திடுவோம் - பயன்படுத்துவோம்

நல்வாழ்த்துகள்//

நன்றி சீனா அவர்களே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
நல்ல தகவல்களை அளித்து வரும் உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்!

தங்களின் பதிவின் நிறந்தர வாசகனாகிவிட்டேன். நன்றி!
ஜிஆர்ஜி
புதுவை.

நன்றி ஜிஆர்ஜி அவர்களே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ்வாழ்த்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

பெயரில்லா கூறியது...
அருமையான தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்

நன்றி நண்பர் மஜித் அவர்களே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

காந்தி காங்கிரஸ் கூறியது...
நல்ல தகவல்

மிக்க நன்றி

நன்றி காந்தி காங்கிரஸ் அவர்களே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

உருத்திரா கூறியது...
தமிழ் பேசுபவர்களுக்கும்,தமிழில் ஆர்வம் உள்ளவர்களுக்கும்.பயனுள்ள பதிவு

தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உருத்திரா அவர்களே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அப்பன் கூறியது...
நன்றி,,

நன்றி அப்பன்அவர்களே...
வாழ்கவளமுடன்,
வேலன்.

அறிவுமதி said...

திரு வேலன் அவர்களுக்கு,

நான் தமிழ் ஆங்கில அகராதி தரவிறக்கம் செய்தேன். மிக்க மகிழ்ச்சி .
எழுத்துகள் தமிழில் தெரியவில்லை. இந்த குறையை எப்படி சரிசெய்வது என்பதை தெரிவிக்கவும்.
நன்றி

இப்படிக்கு,
நட்புடன்

சி.அறிவழகன்

அறிவுமதி said...

திரு வேலன் அவர்களுக்கு,

நான் தமிழ் ஆங்கில அகராதி தரவிறக்கம் செய்தேன். மிக்க மகிழ்ச்சி .
எழுத்துகள் தமிழில் தெரியவில்லை. இந்த குறையை எப்படி சரிசெய்வது என்பதை தெரிவிக்கவும்.
நன்றி

இப்படிக்கு,
நட்புடன்

சி.அறிவழகன்

Unknown said...

வேலன்:-தமிழ் -தமிழ்-ஆங்கில அகராதி" page not found varuthu

Related Posts Plugin for WordPress, Blogger...