வேலன்:-ஓரே கிளிக்கில் கம்யூட்டடரை பூட்ட



கம்யூட்டரில் நாம் முக்கிய வேலையாக இருப்போம்.
அந்த சமயம் அவசரவேலையாக சிலநிமிடங்கள்
கம்யூட்டரைவிட்டு எழுந்துசெல்லவேண்டி வரும்.
அந்த சில நிமிடங்களில் யாராவது கம்யூட்டரை
ஏதாவது செய்துவிட்டால் பிறகு வருத்தப்பட்டு
பிரயோசனமில்லை.அந்த மாதிரி நேரங்களில்
இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். இதை
நாம் நிறுவியதும் நமது டாக்ஸ்பாரில் பூட்டு
சிம்பளுடன் அமர்ந்துவிடும். அதை கிளிக் செய்தால்
கம்யூட்டர் லாக் ஆகிவிடும். மீண்டும் நாம் பாஸ்
வேர்ட் கொடுத்துதான் ஓப்பன் செய்யமுடியும்.
(விண்டோஸ் கீ+L அழுத்தியும்-Screen Saver மூலமும்
லாக் செய்யலாமே என்பது நீங்கள் கேட்பது
புரிகின்றது. ஆனால் இது அதைவிட சுலபமாக
இருக்கின்றது)இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு
கிளிக் செய்யவும்.(இது சின்ன சாப்ட்வேர்தான்
இதன் கொள்ளளவு 575 கே.பி.தான்.) இதை பதிவிறக்கி
உங்கள் கணிணியில் நிறுவி அதை ஒப்பன்
செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உங்கள் பாஸ்வேர்டையும் அதையே மீண்டும்
கான்பார்ம் செய்தும் தட்டச்சு செய்து ஓ,கே. கொடுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது பார்த்தீர்களேயானால் உங்கள் டாக்ஸ்பாரில்
பூட்டு போன்ற அடையாளத்தை காணலாம். கீழ்கண்ட
விண்டோவினை பாருங்கள்.
இப்போது பூட்டினை நீ்ங்கள் கர்சரால் டபுள் கிளிக்
செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அவ்வளவுதான். உங்கள் கம்யூட்டர் லாக் ஆகிவிட்டது.இனி
யாராவது கர்சரால் கிளிக் செய்தால் அவர்களுக்கு
பாஸ்வேர்ட் கேட்டு எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.
கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது நீங்கள் ஏற்கனவே கொடுத்த பாஸ்வேர்டை சரியாக
கொடுத்தால் தான் உங்களுக்கு மீண்டும் விண்டோ ஓப்பன்
ஆகும்.பயன்படுத்திபாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ம்...இப்ப சொல்லு....
C for CAT
D for DOG
E for ELEPHANT


இன்றைய PSD-டிசைன் 45க் கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்தபடம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதுவரை கம்யூட்டரை பூட்டியவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

அண்ணாமலையான் said...

தகவலுக்கு நன்றி.

கண்ணா.. said...

பாஸ்,

இதுக்கு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதை விட விண்டோ கீ மற்றும் L கீயை ஓரு சேர அமுக்கினாலே போதும்.

நான் அலுவலகத்தில் அதைதான் செய்கிறேன்.

மற்றபடி, உங்களுக்கு தெரிந்த உபயோகமான தகவலை அனைவருடனும் பகிரும் உங்கள் எண்ணத்திற்கு ஜே...

நன்றி

குறை ஒன்றும் இல்லை !!! said...

ரொம்ப நன்றி.. நாம் லாக் செய்தாலும் கணிப்பொறி வெலை செய்யுமல்ல்வா?

ப்ரியமுடன் வசந்த் said...

தாங்க்யூ சார்...!

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
தகவலுக்கு நன்றி//

ஆசிரியருக்கு வணக்கம். முதன்முதலாக பதிவிற்கு வந்துள்ளீர்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கண்ணா.. கூறியது...
பாஸ்,

இதுக்கு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதை விட விண்டோ கீ மற்றும் L கீயை ஓரு சேர அமுக்கினாலே போதும்.

நான் அலுவலகத்தில் அதைதான் செய்கிறேன்.

மற்றபடி, உங்களுக்கு தெரிந்த உபயோகமான தகவலை அனைவருடனும் பகிரும் உங்கள் எண்ணத்திற்கு ஜே...
நன்றி...

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...தங்கள் கூறிய விளக்கத்தையையும் நான் பதிவில் விளக்கியுள்ளேன். இது மற்றும் ஒரு மாற்று வழி அவ்வளவுதான்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
ரொம்ப நன்றி.. நாம் லாக் செய்தாலும் கணிப்பொறி வெலை செய்யுமல்ல்வா?

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...தங்கள் பெயரே வித்தியாசமாக உள்ளது.(எனது இணைய நண்பர் பேசும் சமயம் அடிக்கடி சொல்லுவார்...ஒன்னும் பிரச்சனையில்லை பார்த்துக்கலாம்)

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பிரியமுடன்...வசந்த் கூறியது...
தாங்க்யூ சார்.ஃஃ

தங்கள் முதன்முதலாக வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமையான தகவல் வேலன் சார் ..

வேலன். said...

ஸ்ரீ.கிருஷ்ணா கூறியது...
அருமையான தகவல் வேலன் சார் .//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருஷ்ணா அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

ரமேஷ் said...

அருமையான தகவல் ..நீங்கள் சொன்னபிறகு இதைத்தான் உபயோக்கிறேன்
தகவலுக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் வேலன்

பகிர்வினிற்கு நன்றி - தேவையான தகவல் - நல்வாழ்த்துகள்

வேலன். said...

ரமேஷ் கூறியது...
அருமையான தகவல் ..நீங்கள் சொன்னபிறகு இதைத்தான் உபயோக்கிறேன்
தகவலுக்கு நன்றி//

தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி ரமேஷ் சார்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

cheena (சீனா) கூறியது...
அன்பின் வேலன்

பகிர்வினிற்கு நன்றி - தேவையான தகவல் - நல்வாழ்த்துகள்


தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா சார்....

வாழ்க வளமுடன்,
வேலன்.

Paleo God said...

உண்மையில் நல்ல தகவல்கள்... நன்றி... பிளாக்கர்களுக்கான சிறப்பு மென் தகவல்கள், மேம்படுத்தும் தகவல்கள் போன்றவற்றை தொடர்ந்து வெளியிட்டு உதவுமாறு வேண்டுகிறேன்.. வாழ்க வளமுடன்..::))

வேலன். said...

உண்மையில் நல்ல தகவல்கள்... நன்றி... பிளாக்கர்களுக்கான சிறப்பு மென் தகவல்கள், மேம்படுத்தும் தகவல்கள் போன்றவற்றை தொடர்ந்து வெளியிட்டு உதவுமாறு வேண்டுகிறேன்.. வாழ்க வளமுடன்..::)//

தங்கள் முதன்முதலாக பதிவிற்கு வந்துள்ளீர்கள்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்,
வேலன்

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள செய்தி நண்பரே..

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பயனுள்ள செய்தி நண்பரே..//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...உங்கள் இ-மெயில் முகவரி தரவும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...