இணையத்தில் நாம் சில முக்கியமான தளங்களை
பார்ப்போம். நமது வீடாகஇருந்தாலும் சரி அலுவலகமாக
இருந்தாலும் சரி...அடுத்தவர்கள் நாம் பார்த்த தளங்களை
பார்க்க வேண்டாம் என விரும்பினால் இந்த சாப்ட்
வேர் கொண்டு சுத்தமாக கிளின்செய்துவிடலாம். இது
நாம் பார்த்த தளங்களின் வரலாறை சுத்தமாக அழித்து
விடும். குக்கிகளை அழித்துவிடும்.ரீ-சைக்கிள்பின்னில்
உள்ளவற்றை அழித்துவிடும். விண்டோஸ் உருவாக்கும்
டெம்ப்ரவரி பைல்களை நீக்கிவிடும். நமது ஹார்ட்டிஸ்க்
கின் இடம் பெரிய அளவில் மிச்சபடுத்திதரும்.
மேலும் கம்யூட்டரில் உள்ள தேவையற்ற சாப்ட்வேர்களை -
ஃபைல்களை-அழித்து நமது கம்யூட்டரை சுத்தமாகவும்-
ஹார்ட்டிஸ்கின் இடத்தை அதிகப்படுத்தியும் இந்த
சாப்ட்வேர் செவ்வனே செய்கின்றது். இதை பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யவும்.
இது விண்டொவில் அழிப்பவைகீழே:-
அப்ளிகேஷனில் அழிப்பவை விவரம் கீழே:-
மேலே உள்ள ஃபைல்களை அழிப்பதுடன் இது
விண்டோஸின் ரெஜிஸ்டரிலும் தேவையற்ற
விவரங்களை அழிக்கின்றது. கம்யூட்டர் வேலையை
ஆரம்பிக்கும் சமயம் தானாகவே இயங்கும் சாப்ட்வேர்
பட்டியலையும் இது ஆராய்ந்து நாம் விருப்பப்பட்டால்
அவை இயங்காதவாறு நமக்கு உதவுகின்றது.
இதை பதிவிறக்கம்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள விண்டோ டேபை கிளிக் செய்யுங்கள்.
அடுத்துள்ள Application டேபை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
தேவையான விவரங்களை -நீக்க வேண்டிய வைகளின்
எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
படத்தை பாருங்கள்.
உங்களுக்கு எவ்வளவு எம்.பி. பைல்களை நீங்கப்பட்டு
உள்ளன என்கின்ற விவரம் கிடைக்கும். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
இதில் இடப்பக்கம் Registry இருக்கும். அதை கிளிக்செய்ய
வேண்டாம்.நாம் ஒன்று செய்ய அதுஒன்று ஆகிவிடும்.
அதற்கு அடுத்துள்ளTools கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் நீங்கள் Uninstall செய்ய வேண்டிய பைல்களை சுலபமாகஇதிலிருந்தே நீக்கலாம். அடுத்துள்ள Options கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் தேவையான விவரங்களை செட்டிங் செய்துகொள்ளுங்கள்.
இநத சாப்ட்வேரின் மேல்புறம் பார்த்தீர்களேயானல் உங்கள்
கணிணியின் ஜாதகவிவரங்கள் (அதாங்க நம்ம கணிணியில்
உள்ள சர்வீஸ்பேக் - ராம்-மதர்போர்ட் போன்றவையின்
விவரங்கள்) அனைத்தும் தெரியும்.
பதிவிறக்கம் செய்து பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய PSD டிசைன்-39 க்கான படம் கீழே:-
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
யப்பா ....குளிர் தாங்கமுடியலையப்பா சாமி.....
இன்றைய PSD டிசைன்-39 க்கான படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதுவரை சி-கிளினரை தெரிந்துகொண்டவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
10 comments:
அருமையான பதிவு நண்பரே
நீங்கள் பதியும் பெருவாரியான பதிவுகள்எனக்கஏற்கனேவே தெரிந்தவையாகவே இருக்கின்றது.
ஆனால் தாங்கள் மற்ற நண்பர்களுடன் இதனை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற சிறப்பான எண்ணம் நமக்கு ஏற்படவில்லை.
தங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.
புதியவர்களுக்கு பயனுள்ள விளக்கமான பதிவு. நன்றி அய்யா.
உபயோகமான பதிவு பகிர்வுக்கு நன்றிங்க.
அன்புடன் மஜீத்.
ஆனந்தபாலன் கூறியது...
அருமையான பதிவு நண்பரே
நீங்கள் பதியும் பெருவாரியான பதிவுகள்எனக்கஏற்கனேவே தெரிந்தவையாகவே இருக்கின்றது.
ஆனால் தாங்கள் மற்ற நண்பர்களுடன் இதனை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற சிறப்பான எண்ணம் நமக்கு ஏற்படவில்லை.
தங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.//
எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கும் என எண்ணமுடியாது.எனக்கு தெரிந்ததை சொல்லித்தருகின்றேன்.தெரியாதவர்கள்தெரிந்துகொள்ளட்டும். அதனால்தான் இதன் தலைப்பில் புதியவர்களுக்காக என தெரிவிக்கின்றேன்.உங்களுக்கு தெரியுமா இந்த சாப்டவேரை இதுவரை 40 பேர் பதிவிறக்கம் செய்துஉள்ளார்கள்.எனக்கு தெரியாததை சொல்லித்தாருங்கள்.கற்றுக்கொள்கின்
றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
Thomas Ruban கூறியது...
புதியவர்களுக்கு பயனுள்ள விளக்கமான பதிவு. நன்றி அய்யா
நன்றி நண்பர் தாமஸ்ரூபன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பெயரில்லா கூறியது...
உபயோகமான பதிவு பகிர்வுக்கு நன்றிங்க.
அன்புடன் மஜீத்.ஃ
நன்றி நண்பரே.. மன்றத்தில் பதிவிட வேண்டும்.உங்கள் இ-மெயில் முகவரி தெரிவிக்கவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
.....உங்கள் இ-மெயில் முகவரி தெரிவிக்கவும்.
.....
மிக்க நன்றிங்க.
edmajeed@yahoo.co.in
அன்புடன் மஜீத்.
பெயரில்லா கூறியது...
.....உங்கள் இ-மெயில் முகவரி தெரிவிக்கவும்.
.....
மிக்க நன்றிங்க.
edmajeed@yahoo.co.in
அன்புடன் மஜீத்//
நண்பருக்கு உங்களுக்கு மெயில் அனுப்பிஉள்ளேன்.
பார்க்கவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
மிகவும் பயனுள்ள பதிப்பு. மிக்க நன்றி ,
இப்படிக்கு
நட்புடன்
சி.அறிவழகன்
Singaravelu கூறியது...
மிகவும் பயனுள்ள பதிப்பு. மிக்க நன்றி ,
இப்படிக்கு
நட்புடன்
சி.அறிவழகன்//
நன்றி அறிவழகன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment