வேலன்:-Excel -ல் ஓரே ஓரு செல்லை மறைக்க

<span title=

எக்ஸெல்லில் ஏற்கனவே ரோ - காலம் -ஷீட்
 மறைப்பதைபற்றி பதிவிட்டுள்ளேன். அந்த
பதிவை படிக்காமல் தவறவிட்டவர்கள் இங்கு 
சென்று படித்துக்கொள்ளவும்.இன்றைய பதிவில்
 நாம் ஒரே ஓரு செல்லை மறைப்பதைபற்றி பார்க்கலாம்.
முக்கியமான ஓரு தொலைபேசி எண்ணோ - பாஸ்வேர்ட்
டோ - அல்லது முக்கியமான ஒரு தகவலையோ இதில்
பதித்துவைத்து மறைத்து விடலாம். மற்றவர்கள்
பார்வைக்கு இது தெரியாது. மீண்டும் வேண்டுமானல்
அதை நீங்கள் மற்றவர்களுக்கு தெரியும் படி வர
வழைக்க முடியும். அதை எவ்வாறு செய்வது என
இப்போது காணலாம்.
முதலில் நீங்கள் மறைத்துவைக்க விரும்பும் செல்லை
தேர்ந்தெடுங்கள்.உங்கள் பெயரின் - இனிஷியலின் -
மனைவி - மகன் -  மகள் - காதலி - என நீங்கள்
விரும்பும் பெயரின் முதல் எழுத்தை தேர்வு செய்து
கொள்ளுங்கள். அவரின் பிறந்த நாளை தேர்வு
செய்து கொள்ளுங்கள். பெயரின் எழுத்தை காலமாக
வும் - பிறந்த தேதியை ரோ வாகவும் கணக்கெடுத்து
செல்லை தேர்வு செய்யுங்கள். நான் G2 தேர்வு
செய்துள்ளேன்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது அதில் தேவையான தகவலை தட்டச்சு செய்யுங்கள்.
அடுத்து அந்த செல்லை தேர்வு செய்யுங்கள். பின்னர் Format Cells
விண்டோ விற்கு செல்லுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் முதலில் உள்ள Number என்கிற
டேபை கிளிக் செய்யுங்கள்.
அதில் உள்ள Custom கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Type என்பதின் கீழே உள்ள
கட்டத்தில் மூன்று ; ; ; (செமிகோலன்கள்) தட்டச்சு செய்
யுங்கள். ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.
இப்போது பாருங்கள். நீங்கள் தட்டச்சு செய்த செல்லில் உள்ள
தகவல் காணமல் போயிருக்கும். ஆனால் பார்முலா பாரில்
உங்கள் ரகசிய எண் தெரிவதை காணலாம்.
இந்த செல்லை நடைமுறைக்கு மீண்டும் கொண்டு வர
முன்பு சென்ற வழியிலேயே சென்று செமிகோலனை
எடுத்துவிட்டு வாருங்கள்.செல் பார்வைக்கு தெரியும்.
இதையே இன்னும் ஒருவழி முறையில் மறைக்கலாம்.
செல்லை தேர்வு செய்து அதில் உள்ள நிறத்தை
வெள்ளை நிறமாக மாற்றி விடுங்கள். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
அவ்வளவுதான். செல்லில் உள்ள தகவல் காணாமல் போய்
இருக்கும்.இந்த வசதியை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.
எப்போதாவது அவசரத்திற்கு இது நிச்சயம் உதவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
நான் ரொம்ப அழுக்காக இருக்கேனாம். அதனால் என்னை
வாஷிங் மெஷினில் போட்டுள்ளார்கள்.
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதுவரை எக்செல்லில் செல்லை மறைக்க தெரிந்து
கொண்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அருமை..புதிய தகவல்

வேலன். said...

பட்டாபட்டி.. கூறியது...
அருமை..புதிய தகவல்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Jaleela Kamal said...

வேலன் சார் எக்சல் பயன் படுத்துபவர்களுக்கு ரொம்ப பயனுள்ள பதிவு

வேலன். said...

Jaleela கூறியது...
வேலன் சார் எக்சல் பயன் படுத்துபவர்களுக்கு ரொம்ப பயனுள்ள பதிவு//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...