வேலன்:-போட்டோகளில் கல்யாண ஆல்பம் டிசைன் செய்ய



நான் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை உபயோகிக்கும் போதே இதன் அருமை தெரிகின்றது.போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்கள் ஒருதிருமண ஆல்பம் டிசைன் செய்ய எவ்வளவு நேரம் செலவிடுகின்றார்கள் தெரியுமா...? ஆனால் இந்த சாப்ட்வேர் நேரத்தை பெருமளவு குறைத்து நமக்கு வேலையை சுலபமாக்கி விடுகின்றது.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யூட்டரில் இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேல்புறம் கீழ்கண்ட வாறு இருக்கும்.
இதில் முதலில் உள்ள New (பச்சை நிற பெட்டி)கிளிக் செய்து உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படத்தை தேர்ந்தேடுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ வரும்.
இதில் வலதுபுறம் உங்களுக்கு Girl.Baby.Love,Simulation,Dream,Magazine,Cloth,Frame & Other என கீழ்கண் டபெட்டிகள் இருக்கும் .இதில் தேவையானதை கிளிக் செய்யுங்கள்.
ஒவ்வொரு வகையிலும் குறைந்தது 30 டிசைன்கள் உள்ளது. உங்களுக்கு தேவையான டிசைன் மீது கர்சரால் கிளிக் செய்து டிசைனை தேர்வு செய்யுங்கள்.,இப்போழுது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ தோன்றும்.
இத்துடன் ஒரு சிறிய விண்டோவும் தோன்றும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
ஒரு ஆல்பத்தில் மூன்று விண்டோகள்  இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம்.நாம் ஒவ்வோரு விண்டோவிற்கும் வெவ்வேறு படங்களை வைததுக்கொள்ளலாம்.மீண்டும் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் வெவ்வேறு படங்களான குருவி,பாலம்,அல்லி மலர் இணைத்துள்ளேன்.அதுபோல நீங்கள் எந்த விண்டோவில் படத்தை வைக்க விரும்புகின்றீர்களோ அந்த விண்டோவினை கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் சின்ன விண்டோவினை பாருங்கள்.அதிலும் உள்ள பச்சை பெட்டி(New)கிளிக் செய்து உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.படத்தின் ப்ரிவியு பாருங்கள். விண்டோவில் படம் நடுவில் இல்லாமல் சற்று முன்னும் பின்னுமாக உள்ளதா..? இப்போது மீண்டும் சின்ன விண்டோவில் உள்ள சிகப்பு கட்டத்தை நகர்ததுங்கள். இப்போது விண்டோவில் படம் நடுவில் வந்துவிடும்.இப்போது நியு (பச்சை பெட்டிக்கு)க்கு அடுத்து மூன்று பொம்மை படங்கள். இருக்கும். இது எதற்கு பயன் படுகின்றது என்றால் நாம் புகைப்படத்தை கருப்பு வெள்ளையாகவோ - பழைய காலத்து போட்டோவாகவோ - பென் சில புகைப்படமாகவோ மாற்றிக் கொள்ளலாம்.ஒவ்வொரு பொம்மைபடத்திற்கும் ஒவ்வோரு டிசைன் உருவாகும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
வெவ்வேறு டிசைனில்செய்த புகைப்படங்கள் கீழே:-






சரி ...ஆல்பம் தயார் செய்துவிட்டோம். இப்போது இதில் மொத்தமாக மாற்றவேண்டும்.மாறுதல்கள் செய்யவேண்டும்.மீண்டும் மேலே வாருங்கள்.கீழ்கண்ட விண்டோவினில் தேவையான மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள்.
படத்தை சேமிப்பதோ - கலர் மாற்றுவதோ - அ ளவுகளை மாற்றம் செய்வதோ - எதுவேண்டுமானாலும் செய்து இறுதியில் சேமித்துக்கொள்ளுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.ஒருமுறை பதிவினை படித்துப்பாருங்கள். பின்னர் இந்த சாப்ட்வேரை உபயோகித்துப்பாருங்கள். சந்தேகம் வரும் பட்சத்தில் மீண்டும் இந்த பதிவினை படியுங்கள்.அப்படியும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் கருத்துரையில் கேளுங்கள்.பதில் அளிக்கி்ன்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
வா...இரண்டுபேரும் ஐஸ்பாய் விளையாட்டு விளையாடலாம்..
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

53 comments:

ஹாய் அரும்பாவூர் said...

வேலன் எப்படி உங்களால் இப்படி முடியுது
மிகவும் நல்ல விசயங்கள் எளிமையாக
போடோஷாப் என்றால் கஷ்டம என்று நினைத்தேன்
எளிமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் சேவை
அன்புடன்
ஹாய் அரும்பாவூர் முபாரக்

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
வேலன் எப்படி உங்களால் இப்படி முடியுது
மிகவும் நல்ல விசயங்கள் எளிமையாக
போடோஷாப் என்றால் கஷ்டம என்று நினைத்தேன்
எளிமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் சேவை
அன்புடன்
ஹாய் அரும்பாவூர் முபாரக்//

நன்றி அரும்பாவூர்...வருகைக்கு நன்றி மறக்காமல் ஒட்டுபோட்டு செல்லவும். அதனால் மேலும் பலருக்கு இந்த சாப்ட்வேர் பற்றி தெரிய வரும். வாழ்க வளமுடன்.வேலன்.

Chitra said...

நீங்கள் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை உபயோகிக்கும் (?!) போதே இதன் அருமை தெரிகின்றது.

:-)

Chitra said...

நான் வாழ்த்துரை சொல்லி, மொய் எழுதிட்டேன் - ரெண்டு இடத்துல. :-)

வேலன். said...

Chitra கூறியது...
நீங்கள் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை உபயோகிக்கும் (?!) போதே இதன் அருமை தெரிகின்றது.

:-)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
நான் வாழ்த்துரை சொல்லி, மொய் எழுதிட்டேன் - ரெண்டு இடத்துல. :-)//
வாழ்த்துக்கும மொய் எழுதியமைக்கும் நன்றி சகோதரி...(உங்கள் பதிவில் நேற்று வாழ்த்து சொல்ல முடியவில்லை.அதனால் தமிலிஷ்ஷில் வாழ்த்து சொன்னேன். இன்று சரியாகிவிட்டது...எதிர்கட்சிகள் சதியாக இருக்குமோ..?)வாழ்க வளமுடன்்்.வேலன்.

ஜெய்லானி said...

நானும் வாழ்த்துரை சொல்லி, மொய் எழுதிட்டேன் - ரெண்டு இடத்துல. :-)))

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு வேலன் நன்றி

சசிகுமார் said...

நண்பரே அனைத்து பதிவுகளும் சூப்பர், இந்த பதிவு ஸ்டுடியோ வைத்து இருப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said...

ஆஹா ......நம்ம மாப்ள படம் கல்யாண ஆல்பதிலேயா?! உள்ளே வந்து பார்த்தல் தானே புரியிது.கூடவே "அடங்காதவனும் " இருப்பது.
அது சரி, மாப்ளைக்கு பக்கத்ல பொண்ணு எதையும் காணோமே இன்னா ??
சீக்கிரம் நம்ம மாப்ஸ் கல்யாண ஆல்பம் தயார் பண்ணவேணும்.
உபயோகமான பதிவு தான் வழக்கம் போல.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

குருவே அசத்தரிங்க உங்களால என் கம்ப்யூட்டர் ல போட்டோ ஷாப் க்கு உயிர வந்திடுச்சு.

பொன் மாலை பொழுது said...

மாப்ஸ் அங்கே ஐஸ் விளையாட்டு விளையாடும் அந்த ரெண்டு
பேர் யாராம் ?

S Maharajan said...

நல்ல இருக்கு velan சார்
இதுலேயே எதாவது வார்த்தைகள் சேர்க்க முடியுமா?
(உதா: நாள்,இடம் போன்றவை)

Thomas Ruban said...

//நான் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன்//

நீங்கள் பதிவிட்ட எல்லாமே சிறந்த சூப்பர் சாப்ட்வேர்ஸ் தான் சார்(உபோயோகித்து பார்த்து சிறந்ததை தறுகிர்கள்) உங்களை தவிர வேறு யாராலும் போடோஷாப்பை இவ்வளவு எளிமையகவும், சுலுபகமாகவும் தமிழில் பதிவிட முடியாது என்பது என்கருத்து வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி சார்.

karthik said...

மிகவும் பயனுள்ள மென்பொருள்
பகிர்வுக்கு நன்றி

Priya said...

மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி!

Menaga Sathia said...

இந்த பதிவு மட்டுமில்லை உங்கள் அனைத்து பதிவுகளுமே சூப்பர்ர் சகோ!!

Sumathi. said...

ஹாய்,
//போடோஷாப் என்றால் கஷ்டம என்று நினைத்தேன்..// நானும்
நண்பா வாவ்.... எங்கயோ போயிட்டீங்க ..... simply superb.
வாழ்த்தவே வார்த்தைகளே வரமாட்டேங்குது நண்பா. இந்த மாதிரி தான் நான் நிறைய்ய ட்ரை பண்ண விரும்பறேன். நன்றி...நன்றி...நன்றி.

afrine said...

வேலன் அண்ணா,

அருமையான பங்களிப்பு. உங்களூக்கு என் நன்றியும், வாழ்த்துக்களும்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
நானும் வாழ்த்துரை சொல்லி, மொய் எழுதிட்டேன் - ரெண்டு இடத்துல. :-)))//

நன்றி ஜெய்லானி சார்.தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி வாழ்க வளமுடன்்வேலன்.

வேலன். said...

thenammailakshmanan கூறியது...
நல்ல பகிர்வு வேலன் நன்றி//

நன்றி சகோதரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நண்பரே அனைத்து பதிவுகளும் சூப்பர், இந்த பதிவு ஸ்டுடியோ வைத்து இருப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

நன்றி சசிகுமார்்...வருகைக்கும கருத்துக்கும நன்றி வாழ்க வளமுடன். வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
ஆஹா ......நம்ம மாப்ள படம் கல்யாண ஆல்பதிலேயா?! உள்ளே வந்து பார்த்தல் தானே புரியிது.கூடவே "அடங்காதவனும் " இருப்பது.
அது சரி, மாப்ளைக்கு பக்கத்ல பொண்ணு எதையும் காணோமே இன்னா ??
சீக்கிரம் நம்ம மாப்ஸ் கல்யாண ஆல்பம் தயார் பண்ணவேணும்.
உபயோகமான பதிவு தான் வழக்கம் போல.//

கல்யாண பெண்ணு போட்டோ அனுப்புங்கள்.சூப்பர் டிசைன செய்துவிடலாம்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
குருவே அசத்தரிங்க உங்களால என் கம்ப்யூட்டர் ல போட்டோ ஷாப் க்கு உயிர வந்திடுச்சு//

நன்றி மணி அவர்களே..வருகைக்கும கருத்துக்கும நன்றி மணி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ் அங்கே ஐஸ் விளையாட்டு விளையாடும் அந்த ரெண்டு
பேர் யாராம் ?//

அடடே..உங்களுக்கும அவர்களை தெரியலையா..?வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
நல்ல இருக்கு velan சார்
இதுலேயே எதாவது வார்த்தைகள் சேர்க்க முடியுமா?
(உதா: நாள்,இடம் போன்றவை)//

நன்றி மகாராஜன் சார்..போட்டோஷாப்பில் தாராளமாக வேண்டிய வார்த்தைகளை சேர்க்கலாம்.எனது முந்தைய பதிவை பார்க்கவும். வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
//நான் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன்//

நீங்கள் பதிவிட்ட எல்லாமே சிறந்த சூப்பர் சாப்ட்வேர்ஸ் தான் சார்(உபோயோகித்து பார்த்து சிறந்ததை தறுகிர்கள்) உங்களை தவிர வேறு யாராலும் போடோஷாப்பை இவ்வளவு எளிமையகவும், சுலுபகமாகவும் தமிழில் பதிவிட முடியாது என்பது என்கருத்து வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி சார்.//

நன்றி தாமஸ் ரூபன் சார்..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

karthik கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருள்
பகிர்வுக்கு நன்றி//

நன்றி கார்த்திக் அவர்களே..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Priya கூறியது...
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி!//

எனது பதிவிற்கு முதன் முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் வருகைக்கும கரு்ததுக்கும நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
இந்த பதிவு மட்டுமில்லை உங்கள் அனைத்து பதிவுகளுமே சூப்பர்ர் சகோ!//

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கு மிக் க நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Sumathi. கூறியது...
ஹாய்,
//போடோஷாப் என்றால் கஷ்டம என்று நினைத்தேன்..// நானும்
நண்பா வாவ்.... எங்கயோ போயிட்டீங்க ..... simply superb.
வாழ்த்தவே வார்த்தைகளே வரமாட்டேங்குது நண்பா. இந்த மாதிரி தான் நான் நிறைய்ய ட்ரை பண்ண விரும்பறேன். நன்றி...நன்றி...நன்றி.//

தங்கள் வருகைக்கும கருத்துக்கும ்நன்றி..(தாங்கள் சகோதரரா - சகோதரியா..?) வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

afrine கூறியது...
வேலன் அண்ணா,

அருமையான பங்களிப்பு. உங்களூக்கு என் நன்றியும், வாழ்த்துக்களும்.//

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்.வேலன்.

prince said...

நானும் வாழ்த்துரை சொல்லி, மொய் எழுதிட்டேன்----பொதுவாக போடோஷாப் தமிழில் டுடோரியல் பண்ணுவது கொஞ்சம் சிரமமான விஷயம் மட்டுமல்ல புரிய வைப்பது கஷ்டம். சிரமத்திற்கும் மத்தியில் அழகிய தமிழில் எளிய முறையில் சிறப்பாக செய்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் உளமார்ந்த தொண்டு. நன்றிகள் பல!!!

KANNAA NALAMAA said...

Dear Velan
"thangaladhu photokkalil kalyana Album design seyya"
endra thalaippil kodukkappattulla elimaiyana vilakkangal ukku nandri.

idhey pondru Veettu kannakku ie.Domestic daily expenses padhivu seivadharkkum edhenum software theriyappaduthinaal migavum ubayogamayirukkum.

nandri.
thangal pani dhodara Vazthukkal

Er.T.K.Ganesan/Coimbatore

PalaniWorld said...

வேலன் சார் இது மாதிரி சேவை செய்ய உங்களால் மட்டும் தான் முடியும் .சூப்பர் ....போட்டோஷாப் மென்பொருள்களை தேடி தேடி ....சாரி... வாரி வாரி வழங்குகிறேர்கள்,மிக்க நன்றி .தொடரட்டும் உங்கள் சேவை .

Engineering said...

அருமையான தகவல்... நன்றி....நண்பரே...

தங்களின் ஆசிர்வாதம், நம்ப நம்பர் JK ...க்கு சீக்கரம் திருமணம் நடக்கட்டும்.....

ஆ.ஞானசேகரன் said...

நன்றிங்க வேலன்

ஆ.ஞானசேகரன் said...

எல்லா டிசைன்களும் போட்டோ பிரிண்டிங்க அளவுகளுக்கு எப்படி கொண்டு வருவது வேலன் சார்?

சசிகுமார் said...

அடப்பாவிங்களா அதுக்குள்ள சுட்டுடாங்களே. காலையில் ஆரம்பித்து இந்த பதிவை எழுதி முடிக்கவே சுமார் நான்கு மணிநேரம் ஆனது. என்னுடைய அலுவலக வேலைகளை ஒதுக்கி கஷ்ட்டப்பட்டு எழுதிய பதிவை நான் வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் திருடி விட்டார்கள் மிகுந்த கவலையாக உள்ளது நண்பர்களே என்னோட லிங்க்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post.html
திருடப்பட்ட லிங்க்
http://idimulhakkam.blogspot.com/2010/04/blogger.html

'பரிவை' சே.குமார் said...

உங்கள் தளத்தில் அனைத்து இடுகைகளும் அருமை நண்பரே..!
இது இன்னும் அருமை.

வேலன். said...

princerajan C.T கூறியது...
நானும் வாழ்த்துரை சொல்லி, மொய் எழுதிட்டேன்----பொதுவாக போடோஷாப் தமிழில் டுடோரியல் பண்ணுவது கொஞ்சம் சிரமமான விஷயம் மட்டுமல்ல புரிய வைப்பது கஷ்டம். சிரமத்திற்கும் மத்தியில் அழகிய தமிழில் எளிய முறையில் சிறப்பாக செய்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் உளமார்ந்த தொண்டு. நன்றிகள் பல!//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ்நண்பரே்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

TKG கூறியது...
Dear Velan
"thangaladhu photokkalil kalyana Album design seyya"
endra thalaippil kodukkappattulla elimaiyana vilakkangal ukku nandri.

idhey pondru Veettu kannakku ie.Domestic daily expenses padhivu seivadharkkum edhenum software theriyappaduthinaal migavum ubayogamayirukkum.

nandri.
thangal pani dhodara Vazthukkal

Er.T.K.Ganesan/Coimbatore//

நன்றி கணேசன் சார்..போட்டோக்கள் பற்றிய பதிவு முடிந்ததும் நீங்கள் கேட்ட சாபட்வேரை பதிவிடுகி்ன்றேன். தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..்வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

PalaniWorld கூறியது...
வேலன் சார் இது மாதிரி சேவை செய்ய உங்களால் மட்டும் தான் முடியும் .சூப்பர் ....போட்டோஷாப் மென்பொருள்களை தேடி தேடி ....சாரி... வாரி வாரி வழங்குகிறேர்கள்,மிக்க நன்றி .தொடரட்டும் உங்கள் சேவை //

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பழனி சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Engineering கூறியது...
அருமையான தகவல்... நன்றி....நண்பரே...

தங்களின் ஆசிர்வாதம், நம்ப நம்பர் JK ...க்கு சீக்கரம் திருமணம் நடக்கட்டும்.....//
பொண்ணு பாருங்கள் இந்த வருடமே ஆல்பம் போட்டுவிடலாம்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி..வாழ்கவளமுடன்.வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நன்றிங்க வேலன்ஃ//

நன்றி ஞான சேகரன் சார்...வாழ்கவளமுடன்.வேலன்.

வேலன். said...

thalaivan கூறியது...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.comஃஃ//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
அடப்பாவிங்களா அதுக்குள்ள சுட்டுடாங்களே. காலையில் ஆரம்பித்து இந்த பதிவை எழுதி முடிக்கவே சுமார் நான்கு மணிநேரம் ஆனது. என்னுடைய அலுவலக வேலைகளை ஒதுக்கி கஷ்ட்டப்பட்டு எழுதிய பதிவை நான் வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் திருடி விட்டார்கள் மிகுந்த கவலையாக உள்ளது நண்பர்களே என்னோட லிங்க்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post.html
திருடப்பட்ட லிங்க்
http://idimulhakkam.blogspot.com/2010/04/blogger.html//

கவலைப்படாதீர்கள் சசி..என்றுமே உண்மைகள் தோற்பதில்லை...பதிவர்களுக்கு தெரியும் எது உண்மையான பதிவு என்று..வாழ்க வளமுடன்.வேலன்.

மாணவன் said...

நன்றி சார்....

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
நன்றி சார்....//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். வாழ்க வளமுடன்,வேலன்.

சித்து said...

ஸார்,
கல்யாண ஆல்பம் டிசைன் 10 போட்டோ செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. ஆனால் இந்த 10 போட்டோ முடிந்தவுடன் 30days trial ----exa என்று வருகிறது. please எப்படி எடுக்க வேண்டும் சொல்லி கொடுங்கள்.

Anonymous said...

போட்டோவுக்கு வித விதமான சட்டம் (frame) போடுவது எப்படி? அதற்கு உதவும் வகையில் ஏதாவது சாப்ட்வேர் இருந்தால் அறியத்தரவும். நன்றி

- ரிஷி

shiva said...

hi i am sivakumar Ur blog is very useful to me so many thanks to you
but this software downloading problem pls give any solution thanks

krish (tamil eelam) said...

hi velan anna naan ungalathu valaithalathu puthithaga vanthulen ungalathu anaithu pathivukalum mikavum arumaiyaaga ullana..intha pathivin link thadaipatu ullathu athanudaiya download link ai sari seithu thara ketu kollkiren anna....nantri anna

Related Posts Plugin for WordPress, Blogger...