வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம்

டெக்ஸ்டாப்பில் நாம் நமது புகைப்படங்களை வைத்திருப்போம். ஆனால் விதவிதமான ப்ரேம் செய்த புகைப்படங்கள் வைத்திருப்போமா? கிடையாது.டெக்ஸ்டாப்பில் நமது புகைப்படங்களை விதவிதமான ப்ரேம் செய்து வேண்டிய இடங்களில் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். 13 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ப்ரேம் கிளிக்செய்ய உங்களுக்கு விதவிதமான ப்ரேம்கள் கிடைக்கும். தேவையானதை கிளிக் செய்யவும்.
அதைப்போல் வலதுகை பக்கத்தில் உள்ள Photo - Open-கிளிக் செய்து உங்களது புகைப்படத்தை தேர்வு செய்யவும்.புகைப்படத்திலேயே கலர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.மேலும் புகைபடத்தை பழைய படமாக மாற்றவோ - நிழல்படமாக மாற்றவோ செய்துகொள்ளலாம்.தேவையான வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதற்கான வசதி இதன் கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது நடுவில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் வந்துவிட்டிருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் படத்தை நேராகவோ சாய்ந்தோ வைக்கலாம்.
இறுதியாக கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். இப்போது டெக்ஸ்ட்டாப்பில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களது புகைப்படம் நீங்கள் தேர்வு செய்த புகைபடத்துடன் வந்திருக்கும்.
படத்தை தேவையான இடத்திற்கு நகர்த்தி வைத்துக்கொள்ளவும் தேவையானால் மறைத்தும் வைத்துக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

அஸ்மா said...

வழக்கம்போல் அருமையான தகவல்கள் சகோ. நீங்கள் சொன்னதுபோல் உங்க தளத்தில் தேடியதில் ஃபோட்டோஸ் சேர்க்கும் சாஃப்ட்வேர் கிடைத்தது. மிக்க நன்றி. ஆனால் தமிழ் எழுத்துக்களை சேர்த்தால் எழுத்துக்கள் கொஸ்டின் மார்க் மாதிரி வருகிறது. அதனால் தமிழ் எழுத்துக்கள் சேர்க்க முடியவில்லை. அது எதனால்? அதற்கு செய்யவேண்டும் சகோ?

Unknown said...

சூப்பர்...

காங்கேயம் P.நந்தகுமார் said...

டெக்ஸ்டாப் டில் போட்டோ மென்பொருளை பயன்படுத்தினேன் மிகவும் நன்றாக இருந்தது.

பொன் மாலை பொழுது said...

///சூப்பர், தூள் , பிரமாதம், ஆஹா.......இதெல்லாம் எப்பிடி ஒங்களுக்கு மட்டும் தெரியுது சார்? மிக அருமை, நீங்க ஒரு போட்டோ ஷாப்பு ஜீனியஸ், மிகவும் பயனுள்ள பதிவு வேலன் சார். பகிர்வுக்கு நன்றி வேலன் அண்ணா,///

அதுக்குமேல தெரியில ஆளவுடுங்க.

jasmin said...

வழக்கம் போல உங்களின் இடுகைகள் மிகவும் அருமை ஆனால் முன்னர் போல அல்லாது இப்போது நிங்கள் அதிகமா எதுவும் இடுவது இல்லையே என்ன காரணம் என்போன்றவர்கள் உகளிடம் தானே பாடம் கத்து கொள்ள முடியும்

மச்சவல்லவன் said...

நீண்ட நாளுக்கு பிறகு நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

வேலன். said...

அஸ்மா said...
வழக்கம்போல் அருமையான தகவல்கள் சகோ. நீங்கள் சொன்னதுபோல் உங்க தளத்தில் தேடியதில் ஃபோட்டோஸ் சேர்க்கும் சாஃப்ட்வேர் கிடைத்தது. மிக்க நன்றி. ஆனால் தமிழ் எழுத்துக்களை சேர்த்தால் எழுத்துக்கள் கொஸ்டின் மார்க் மாதிரி வருகிறது. அதனால் தமிழ் எழுத்துக்கள் சேர்க்க முடியவில்லை. அது எதனால்? அதற்கு செய்யவேண்டும் சகோ?
//

கணிணியில் தமிழ் எழுத்துக்களை சேர்க்க என்று ஒரு பதிவினை பதிவிட்டுள்ளேன் சகோ...முந்தைய பதிவினை பாருங்கள். இனி கொஸ்டின்மார்க் மாதிரி தமிழ்எழுத்துக்கள் வராது. தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
Super!ஃஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சிநேகிதி said...
சூப்பர்...

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் ்நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

tamil444news.blogspot.com said...
டெக்ஸ்டாப் டில் போட்டோ மென்பொருளை பயன்படுத்தினேன் மிகவும் நன்றாக இருந்தது.
ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
///சூப்பர், தூள் , பிரமாதம், ஆஹா.......இதெல்லாம் எப்பிடி ஒங்களுக்கு மட்டும் தெரியுது சார்? மிக அருமை, நீங்க ஒரு போட்டோ ஷாப்பு ஜீனியஸ், மிகவும் பயனுள்ள பதிவு வேலன் சார். பகிர்வுக்கு நன்றி வேலன் அண்ணா,///

அதுக்குமேல தெரியில ஆளவுடுங்க.ஃஃ

ஆஹா...வெயில் அங்கு அதிகமாக உள்ளதோ..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

jasmin said...
வழக்கம் போல உங்களின் இடுகைகள் மிகவும் அருமை ஆனால் முன்னர் போல அல்லாது இப்போது நிங்கள் அதிகமா எதுவும் இடுவது இல்லையே என்ன காரணம் என்போன்றவர்கள் உகளிடம் தானே பாடம் கத்து கொள்ள முடியும்
ஃஃ

மின்தடை முக்கிய காரணம்..தினம் 5 மணி நேரம் மின்தடை உள்ளது..என்ன செய்வது?தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நீண்ட நாளுக்கு பிறகு நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...