வேலன்:-டிவிடி கிரியேட்டர்.

டிவிடிக்களில் படங்களை பர்ன்(Burn)செய்ய டிவிடி ப்ளேயருடன் கொடுக்கப்படும் சாப்ட்வேரினையும் -நீரோ சாப்ட்வேரினையும் பெருபாலும் பயன்படுத்துவோம். ஆனால் தனியாக நமது விருப்பபடி காப்பி செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.45 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள Add File மூலம் நம்மிடம் உள்ள வீடியோக்களை தேர்வு செய்யவும்.இதில் வலதுபுறம் மெனு கொடுத்துள்ளார்கள். அதில் General.Holiday.Special Occation.Nature என விதவிதமான டெம்ப்ளேட் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில ்பாருங்கள்.
இதில் விருப்பமான ஒன்றினை தேர்வு செய்திட நமது புகைப்படத்துடன் கூடிய டெப்ளேட் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 நீங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்ததும் உங்களுக்கு மேற்புறம் 7 விதமான டேப்புகள் கிடைக்கும். இதில் Add,Delite.Clip.Effect.Subtitle.Audio.Menu Thumbnil என கொடுத:துள்ளார்கள். இதில படங்களை சேர்க்க.நீக்க நமக்கு தெரியும். அடுத:துள்ள Effect கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அவர்கள் கொடுத்துள்ள எபெக்ட்டில நமக்கு தேவையானதை தேர்வு செய்து அதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். அதுபோல வீடியோவினை வேண்டிய அளவிற்கு கிராப் செய்திடவும் வாட்டர்மார்க் செய்யவும் இதில் வசதிகொடுத்துள்ளார்கள். இதில் ஐந்தாவதாக உள்ள சப்டைட்டில் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
வேண்டியதை நாம்தட்டச்சு செய்துகொள்ளலாம். இறுதியாக இதில் கீழே உள்ள Burn பட்டனை கிளிக் செய்திட நமக்கான வீடியோ காப்பி ஆக ஆரம்பிக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
 வாழ்க வளமுடன்
 வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கத்திற்கும் நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...