வேலன்:-கணிணியின் ஹார்ட்வேர் பயன்பாட்டினை அறிந்துகொள்ள

நாம் இல்லாத சமயத்தில் நமது கணிணியை எப்போது பயன்படுத்தினார்கள்..எவ்வளவு வார்த்தைகள் தட்டச்சு செய்தார்கள். மவுஸ் கிளிக் எத்தனை முறை செய்தார்கள் எந்த எந்த இணைய தளம் பார்த்தார்கள் என முழு விவரமும் அறிந:துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நமது ஆப்ரேடிங் சிஸ்டம் எது கீபோர்ட்டில் எவ்வளவ கீ கள் தட்டச்சு செய்துள்ளோம்,இணையத்தில் எவ்வளவு அப்லோடு மற்றும்  டவுன்லோடு செய்துள்ளோம் ரேம் உபயோக அளவு கணிணியை எவவ்ளவு நேரம் பயன்படுத்தினோம் மவுஸ் எவ்வளவு கிளிக் செய்தோம் போன்ற விவரங்கள் நமக்கு தெரியவரும். இதில் இரண்டாவதாக உள்ள Input டேபினை கிளிக் செய்திட  கீபோர்டடில் எவ்வளவு கீகளை அழுத்தினோம் போன்ற விரங்கள் கடந்த ஆறு மாதம் வரை அறிந்துகொள்ளலாம்.

 இதே கீபேர்ட் உபயோகத்தினை டயக்ராம் மூலமும் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 எந்த எந்த அப்ளிகேஷனை எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம் அதற்கு கீபோர்டடில் கீகள் எவ்வளவு பயன்படுத்தினோம் மவுஸ்கிளிக் பயன்படுததபட்டது என அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 கணிணியின் பயன்பாட்டினை காலண்டர் மூலம் அறிந்துகொள்ளலாம்.கணிணி எந்த நேரம் ஆன்செய்தோம் என விவரம் கிடைக்கும்.

 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து நமக்கு தேவையான விவரங்களை செட் செய்துகொள்ளலாம்.;


சில் வீடுகளில் குழந்தைகள் நான் கம்யூட்டர் பக்கமே போகவில்லை என்று சொல்லுவார்கள். அவர்கள் உண்மையை சொல்லுகின்றார்களா பொய் சொலலுகின்றார்களா என இந்த சாப்ட்வேர் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...