வேலன்:-வேடிக்கையான கணக்கு புத்தகம்.

கணக்கு என்றாலே ஜாலிதான். அதிலும் புதிர் கணக்கு என்றால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். இந்த புத்த்கத்தில் வேடிக்கையாக கணக்குகளை கொடுத்துள்ளார்கள். 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 கணக்குகளை பலவிதங்களில் பிரித்து அதில் ஒவ்வொன்றும் விதவிதமான புதிர்கணக்குகள்கொடுத்துள்ளார்கள். மொத்த கணக்கிற்கும் விடை கொடுத்துள்ளார்கள். அதனால் நாம் தனியே நம் திறமையை பரிசோதித்துக்கொள்ளலாம். கீழேகொடுத்துள்ள மாதிரி கணக்கு ஒன்றைப்பாருங்கள். அதற்கான விடையையும் கொடுத்துள்ளார்கள்.


கணக்கில் பயன்படுத்தும் வார்த்தைகளான அல்ஜீப்ராகோணம்.பை.கியூப்.ஸ்கோயர் ரூட் என ஒவ்வொன்றிற்கும் தனியே விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள். மாணவர்களுக்கும் நேர்முக தேர்வு எழுதுபவர்களுக்கும் இந்த புத்தகம் மிகவும் பயன்படும். 
சிலர் என்னதான நாம் விடையை சரியாக சொன்னாலும் அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்று சொல்லுவார்கள். கீழே உள்ள வீடியோவினை பாருங்கள். அவ்ர் சொல்லுவது சரியேன்றே தோன்றும்.

பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அந்த விடியோ சரியான கோக்கு மாக்கால்ல இருக்கு!?

-'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள் அண்ணா...

Related Posts Plugin for WordPress, Blogger...