நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை பார்வையிடவும் அதில் இருந்து தேவையான ப்ரேமை புகைப்படம் எடுக்கவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 25 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான வீடியோ பைலினையோ - போல்டரையோ தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள பிளே பட்டனை அழுத்தவும் உங்களுக்கான வீடியோவானது ஓட ஆரம்பிக்கும்.
உங்களுக்கு தேவையான ப்ரேம் வந்ததும் இதில் உள்ள கேமரா ஐகானை கிளிக் செய்திட உங்களுடைய புகைப்படம் சேமிப்பாகும். புகைப்படங்கள் தனியே போல்டரில் சேர்ந்துவிடும் தேவைப்படும் சமயம் நாம் அதனை எடுத்து பயன்படுத்தலாம். பயன்படுத்த சுலபமான இந்த ப்ளேயரை பயன்படுத்திப்பாருங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment