வேலன்:-வீடியோக்களை தேவையான இடத்தில் வெட்டிஎடுக்க -Vid Cutter.

சில வீடியோக்கள் பார்க்கும் சமயம் நமக்கு பிடித்த பாடல்கள்.பிடித்த வரிகள்.பிடித்த சண்டைக்காட்சிகள்.பிடித்த இடங்கள் என காட்சிகள் இடம்பெறும். அவ்வாறு இடம் பெறும் வீடியோ காட்சிகளை ஆடியோவுடன் சேர்த்து வெட்டி எடுத்து தனி வீடியோவாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு பிடித்தமான வீடியோ பைலினை தேர்வு செய்திடவும்.
வீடியோவினை ஓடவிடவும். தேவையான காட்சி வீடியோவில்வந்ததும் இதில்உள்ள ஸ்டார்ட் கிளிப் என்பதனை கிளிக்செய்யவும். பிறகு தேவையான காட்சி நிறைவு பெற்றதும் இதில் உள்ள என்ட் கிளிப் என்பதனை கிளிக் செய்திடவும்.

 உங்களுக்கான வீடியோ வலதுமூலையில் சேமிப்பாவதை காண்பீர்கள். இதில் கீழே நீங்கள் ;பார்க்கும் வீடியோவின் தம்ப்நெயில வியூவினையும் நிங்கள் காணலாம். ஸ்லைடரை நகர்த்தியும் நீங்கள் காட்சிகளை பார்வையிடலாம்.
 தேவையான காட்சிகள் உங்கள் கிளிப் இன்டெக்ஸ்ஸில் இருப்பதை காணலாம்.
இறுதியாக நீங்கள் சேவ் மீடியா கிளிக் செய்து நீங்கள் சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்யவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான வீடியோவானது இருப்பதை காணலாம்.
வீடியோக்களை நீங்கள் ஒன்றாக சேமித்தும் தேவையில்லாததினை நீக்கியும் பயன்படுத்தலாம். மேலும் இதில் நாம் தேர்வு செய்யும் வீடியோவினை ஓடும் நேரமும் நாம் தேர்வு செய்ய்லாம். பயன்படுத்த சுலபமாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...