வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர் -Apowersoft PDF Converter

பிடிஎப் பைல்களை வேறு பார்மெட்டுக்கு மாற்றவும்,வேறு பார்மெட் பைல்களை பிடிஎப்பாக மாற்றவும்.பிடிஎப் பைல்களை ஒன்றிணைக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்க்ம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 தேவையான பிடிஎப் பைலினை தேர்வு செய்து உங்களுக்கு எந்த பார்மெட்டில் தேவையோ -வேர்ட்.எக்ஸெல்,பவர்பாயிண்ட்.ஜெபெக் என தேவையான பார்மெட்டினை தேர்வு செய்து பின்னர் சேமிக்கும் இடத்தினையும் தேர்வு செய்திடவும்.இறுதியாக ஸ்டார்ட் கன்வர்டிங் கிளிக் செய்திடவும். உங்களுக்கான பைலானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் இருப்பதனை காணலாம். அதுபோல டாக்குமெண்ட்.புகைப்படங்களை நீங்கள் பிடிஎப்ஆக மாற்றவிரும்பினால் மேற்கண்டவாறு தேர்வு செய்து கன்வர்டிங் கொடுத்தால் உங்கள் பைலானது பிடிஎப்பாக மாறிவிடும்.
 அதுபோல ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை ஒரே பைலாக மாற்றவும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவையான பிடிஎப் பைல்களை தேர்வு செய்திடவும.பின்னர் இதில் உள்ள ஸ்டார்ட கன்வர்டிங் கிளிக்செய்தால் உங்கள் பைலானது மாற ஆரம்பிக்கும்.

நீங்கள் கன்வர்டிங் கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் ஒகே கொடுத்து பின்னர் நீங்கள் சேமிக்க விரும்பிய இடததில் சென்று பார்த்தால் உங்களுக்கான பைலானது இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...