Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.

புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்கவும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். நீங்கள் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 மாற்றவேண்டிய புகைப்படங்களையோ -போல்டர்களையோ தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் அடுத்து கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 தேவையான பார்மெட்டினை தேர் வு செய்திடவும்.
நீங்கள் புகைப்படத்தினை எந்த அளவில் சதவீதத்தில் குறைக்கவேண்டுமோ அந்த சதவீதத்தினை தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள ரீசைஸ் கிளிக் செய்திடவும்.

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் ;உங்கள் புகைப்படங்கள் அ;னைத்தும் தரம் குறையாமல் அளவு குறைந்து காணப்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly

அனைத்து புகைப்படங்களிலும் நாம் வாட்டர் மார்க் கொண்டு வர போட்டோஷாப் தவிர்த்து இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நீங்கள் வாட்டர்மார்க் கொண்டு வேண்டிய புகைப்படங்கள் உள்ள போல்டரினை தேர்வு செய்திடவும்.உங்கள் போல்டரில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் உங்களுக்கு கீழ்கண்ட வாறு தெரியவரும்.

இதில் உள்ள Add Text என்பதனை கிளிக்செய்யவும் உங்களுக்கு வலதுபுறம் விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும் வாட்டர் மார்க் வார்த்தையை சேர்க்கவும்.பின்னர் விரும்பும் எழுத்துருவினை தேர்வு செய்யவும். மேலும் எழுத்துக்களின் நிறத்தினையும் நீங்கள் தேர்வு செய்திடலாம். வாட்டர்மார்க்கின் Transparency & Rotaion தேர்வு செய்திடலாம். மேலும் இதில் உள்ள Effect கிளிக் செய்தால் நிறைய மாடல்கள் கொடுத்துள்ளார்கள் தேவையானதை நீங்கள் தேர்வு செய்திடலாம்.

வண்ணங்கள் உங்கள் விரும்பமானதை நீங்கள் டிஸ்பிளே மூலம் தெரிந்துகொள்ளலாம்.
 உங்கள ;கர்சர் மூலம் நீங்கள் புகைப்படத்தில் விரும்பிய இடத்தில் எழுத்துருவினை அமைத்துக்கொள்ளலாம்.
 இதற்கு அடுத்த லெவல் செல்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.புகைக்படங்களை சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்திடவும்.
இறுதியாக ஓகே தரவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
நீங்கள் தேர்வு செய்திட்ட இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புகைப்படங்கள் வாட்டர் மார்க்குடன் இருப்பதனை நீங்கள் காணலாம். மேலும் வாட்டர் மார்க்காக நீங்கள் லோகோ மற்றும் நீங்கள் விரும்பும் புகைப்படத்தினையும் கொண்டுவரலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.

கணினி பயன்படுத்துகையில் நாம் முகநூல் எவ்வளவநேரம் பயன்படுத்தினோம்,கணினியில் எவ்வளவு நேரம் விளையாடினோம்,இணையம் எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம்,கணினி எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம் என அறிந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து ஒப்பன் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக்செய்திடவும். இப்போது இதில் உள்ள பேஸ்புக்,விளையாட்டு,இன்டர்நெட்மற்றும் கணினி பயன்பாடு அனைத்து ரீடிங்கும் ஒட ஆரம்பிக்கும்.
 இதில் உள்ள ரிப்போர்ட் கிளிக் செய்திட உங்களுக்கு விண்:டோ ஓப்பன் ஆகும். அதில் Internet Social Use.Games Use.Internet Use.Computer Use.Software Use.Website Use.Details என டேப்புகள்கொடுத்துள்ளார்கள். 
இதில் தேவையானதை நாம் தேர்வு செய்தால் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் நாம் எந்த மென்பொருளை எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம் என அறிந்துகொள்ளலாம்.மேலும் கணினியில் பயன்படுத்திய அனைத்துவிவரங்களும் நாம் அறிக்கையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நாம் அலுவலக பயன்பாட்டிலும் சரி.வீட்டு பயன்பாட்டிலும் சரி...கணினியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினார்கள் என எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர் -Apowersoft PDF Converter

பிடிஎப் பைல்களை வேறு பார்மெட்டுக்கு மாற்றவும்,வேறு பார்மெட் பைல்களை பிடிஎப்பாக மாற்றவும்.பிடிஎப் பைல்களை ஒன்றிணைக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்க்ம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 தேவையான பிடிஎப் பைலினை தேர்வு செய்து உங்களுக்கு எந்த பார்மெட்டில் தேவையோ -வேர்ட்.எக்ஸெல்,பவர்பாயிண்ட்.ஜெபெக் என தேவையான பார்மெட்டினை தேர்வு செய்து பின்னர் சேமிக்கும் இடத்தினையும் தேர்வு செய்திடவும்.இறுதியாக ஸ்டார்ட் கன்வர்டிங் கிளிக் செய்திடவும். உங்களுக்கான பைலானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் இருப்பதனை காணலாம். அதுபோல டாக்குமெண்ட்.புகைப்படங்களை நீங்கள் பிடிஎப்ஆக மாற்றவிரும்பினால் மேற்கண்டவாறு தேர்வு செய்து கன்வர்டிங் கொடுத்தால் உங்கள் பைலானது பிடிஎப்பாக மாறிவிடும்.
 அதுபோல ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை ஒரே பைலாக மாற்றவும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவையான பிடிஎப் பைல்களை தேர்வு செய்திடவும.பின்னர் இதில் உள்ள ஸ்டார்ட கன்வர்டிங் கிளிக்செய்தால் உங்கள் பைலானது மாற ஆரம்பிக்கும்.

நீங்கள் கன்வர்டிங் கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் ஒகே கொடுத்து பின்னர் நீங்கள் சேமிக்க விரும்பிய இடததில் சென்று பார்த்தால் உங்களுக்கான பைலானது இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.

தவறுதலாக டெலிட் செய்த பைல்களையும் பழைய பைல்களையும் ஹார்ட்டிஸ்கிலிருந்து மீட்டுஎடுக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நமக்கு தேவையான புகைப்படங்களையோ.வீடியோக்களையோ.ஜிப் பைல்களையோ.டாக்குமெண்ட்டுகளையோ.ஜிமெயில் பைல்களையோ,ஆடியோ பைல்களையோ என எதுவேண்டுமோ அதனை மீட்டுஎடுக்கலாம். அல்லது குறிப்பிடட பைல்மட்டும் வேண்டுமானாலும் அதனை தேர்வு செய்து  மீட்டுஎடுக்கலாம். தேவையானதை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள அடுத்து பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் கணினியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கப்படும். நீங்கள்பென்டிரைவிலிருந்து மீட்டுஎடுக்கவேண்டுமானால் பென்டிரைவினை கணினியில் இணைத்து அதன் டிரைவினை தேர்வு செய்திடவும்.

 தேவையானதை தேர்வு செய்தபின்னர் அடுத்துள்ளதை கிளிக் செய்யவும். உங்கள் டிரைவானது ஸ்கேன் செய்யப்பட்டு பைல்கள் டவுண்லோடு ஆகும்.
ஸ்கேன் செய்து முடித்ததும் உங்களுக்கு ஸ்கேன் கம்ளிட்டட் என்கின்ற தகவல் கிடைக்கும்.
 நீங்கள் மீட்டுஎடுக்கப்பட்ட பைல்களின் விவரம் உங்களுக்கு கிடைக்கும். அதன் ப்ரிவியூவினையும் நீங்கள் காணலாம்.
இறுதியாக தேவையானதை தேர்வு; செய்து பின்னர் இதில் உள்ள ரெக்கவர் பட்டனை கிளிக் ;செய்தால் உங்களுக்கான ரெக்கவர்பைல்கள் நீங்கள் விரும்பும் இடத்தில் சேமிப்பாகும். அங்கிருந்து எடுத்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இணைய யூஆர்எல் முகவரிகளை எளிதில் அறிந்துகொள்ள-Internal Link Analiyzer Tool

சில இணையதளங்களில் இணைய இணைப்பை லிங்க் ஆக இணைத்திருப்பார்கள். அந்த இணையதளம் செல்ல லிங்க்கை நாம் கிளிக் செய்து அந்த இணையதளம் செல்லவேண்டும்.அவ்வாறு லிங்க்காக இணைக்கப்பட்டிருக்கும் லிங்க்குகளை நாம் எளிதாக கண்டறியாலாம். அதற்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இதன் இணையதளம் செல்ல உங்களுக்கான இந்த பக்கம் திறக்கும். அதில் நீங்கள் காணவேண்டிய இணையதள லிங்கின் யூஆர்எல் முகவரியை இணைக்கவும்.




சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் அந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து யூஆர்எல முகவரிகளையும் நீங்கள் எளிதில் காணலாம்.

இதில தேவையானலிங்க் நேரடியாக கிளிக் செய்தோ காப்பி செய்தோ பயன்படுத்தலாம். இதனால் நமக்கு நேரம் மிச்சமாவதுடன் வேலை சுலபமாகும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப்பிற்கு மாற்றாக போட்டோலைன் -photoline

நீங்கள் போட்டோஷாப்பில் செய்யும் வேலைகள் அனைத்தையும் இந்த மென்பொருள் மூலம் செய்திடலாம். அளவு குறைவாகவும். குறைந்த இடத்தினையும் பிடிக்கும் இந்த ;மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://www.pl32.com/செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதன்வலதுபுறம் போட்டோஷாப்பில் வருவது போன்ற டூல்கள் கொடுத:துள்ளார்கள். தேவையானதை கிளிக் செய்து பயன்படுத்தலாம்.




லேயர்கள் கொண்டுவருதல்,வேண்டிய பார்மம் கொண்டுவருதல். அளவினை குறைத்தல்.பின்புலம் மாற்றுதல்,ப்ரைட்நஸ் கொண்டுவருதல் என அனைத்துபணிகளும் செய்திடலாம்.
இதனை பயன்படுத்துவதற்கான டுடொரியல் கொடுத்துள்ளார்கள்.


இதுதவிர ஆன்லைனிலும் நீங்கள் ;இதற்கான விளங்கங்கள் பெறலாம்.குறைந்த கொள்ளளவு,அதே தரம் கொண்ட இந்த மென்பொருளை போட்டோஷாப்பிற்கு பதிலாக நீங்கள் பயன்படுத்தி அதே பலன்களை பெறலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-நமது புகைப்படங்களில் அனிமேஷன் ஸ்கரீன்சேவரை உருவாக்க-Animated Screensevar Maker

நாம் நமது கணிணியில் விதவிதமான வால்பேப்பர்களை ஸ்கிரீன்சேவராக வைத்திருப்போம். அதுபோல விதவிதமான அனிமேஷன் ஸ்கிரீன்சேவரும் இணையத்தில் அதிகம் உள்ளது. ஆனால் நமது விருப்பமான புகைப்படத்தினை அனிமேஷன் ஸ்கிரீன்சேவராக வைத்திருக்க இந்த இணையதளம் உதவுகின்றது.22 எம்.பி.கொள்ளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்து  இந்த இணையதளம் செல்லவும். இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் அவர்களே சில ஸ்கிரின்சேவர் மாடல்கள் வைத்துள்ளார்கள். அதுதவிர நமக்கு விருப்பமான ஸ்கேரின் சேவரின் படத்தினை நாம் கணிணியில் இருந்து தேர்வு செய்திடவும்.
 நாம் விரும்பும் புகைப்படம் வந்துவிட்டது. இதில் பின்புறம் மமாற்றவேண்டுமானால் மாற்றலாம். இசைகளை சேர்க்கலாம்.
 இதன் மேல்புறம் உள்ள டேபில் ஆட்அனிமேஷன் என்கின்ற டேப் கொடுததுள்ளார்கள். அதனை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் விதவிதமான அனிமேஷன் படங்கள் கொடுத்துள்ளார்கள். ஒவ்வொன்றையும் நீங்கள் ப்ரிவியூ பார்தது பயன்படுத்தலாம்.
 அதுபோல இங்குள்ள டேபில் அனிமேஷன் எபெக்ட் கொடுத்துள்ளார்கள். நமது புகைப்படத்தில் தண்ணீர் அலைகள் வருவது போலவும் நெருப்பு பற்றிஎரிவது போலவும் உலக உருண்டையாக படங்கள் மாறுவதுபோலவும். நீர் குமிழிகள் வருவது போலவும் கொடுத்துள்ளார்கள்.


 இதில் எந்த எபெக்ட் உங்களுக்கு பிடித:துள்ளதோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.மேலும் விதவிதமான பிரஷ் டூல்கள்.எழுத்துருக்கள்.குறிப்பிட்ட இடத்தினை ஹைலைட் செய்து காண்பித்தல்:போன்ற எபெக்ட்களை கொண்டுவரலாம்.
உங்களுக்கு நிறைவான புகைப்படம் அனிமேஷன் மூலம் கிடைத்ததும் ப்ரிவியூ பார்தது மாற்றங்கள் செய்யவேண்டுமானால் செய்து பின்னர் சேமித்து பயன்படுத்தலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-3நிடி மீடியா ப்ளேயர்-3nity Media Player

வீடியோ பைல்களை நாம் சுலபமாக பார்வையிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு  கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு வரும் விண்டோவில் உங்களுக்கான வீடியொவினை தேர்வு செய்திடவும்.
 இதில் உள்ள பைல் டேபினை கிளிக் செய்வது மூலம் கணினியில் உள்ள பைல்கள்.இணையதள வீடியோ பைல்கள்.சிடி- டிவிடியில் உள்ள பைல்கள்.ரேடியோ.டிவி போன்ற நிகழ்ச்சிகளின் இணைப்பினை இதன்மூலம் காணலாம்.
 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக்செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஆடியோ.வீடியோ.டிவிடி.தேர்வு செய்யப்படும் பைல்கள் என நம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்திடலாம்.
 வீடியோவில் உள்ள பிரைட்நெஸ்.கான்ட்ரஸ்ட்.சாட்டர்ன்.ஹீ,காமா போன்றவற்றை நாம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
 அதுபோல ஆடியோ பைலின் இக்குவலைஸரினையும் மாற்றிக்கொள்ளலாம்.பிளே லிஸ்ட் தயாரித்து நமக்கு விருப்பமான வகையில் ப்ளே செய்திட செட்டிங்ஸ்அமைக்கலாம்.
குறைந்த அளவு.நிறைந்து வசதிகளுடன்இந்த வீடியோ ப்ளேயர் அமைந்துள்ளது.பயன்படுத்திப்பாருங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் பைல்களை உருவாக்க.திருத்தம் செய்ய மற்றும் ஒப்பீடு செய்ய -Apower PDF

பிடிஎப் பைல்களை உருவாக்க.எடிட் செய்திட.ஒப்பிட்டு பார்க்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
பிடிஎப் பைலினை திருத்தம் செய்ய.உருவாக்க.ஒப்பீடு செய்ய என மூன்று ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்யுங்கள்.எடிட் என்பதில் நீங்கள் பிடிஎப் பைலினுள் வார்த்தைகளை சேர்க்க,இமேஜ்களை சேர்க்க.எழுத்துருக்கள் ;நிறம் மாற்ற என எதுவேண்டுமானாலும் செய்திடலாம்.
இதன் மேல்புறத்தில் Create.Convewrt.Edit.Pages.Productions.Sign.Comment என ஆறுவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
கன்வர்ட் என்பதனை கிளிக் செய்து பிடிஎப்பைலானது உங்களுக்கு எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்து மாற்றிக்கொள்ளலாம்.இதில் உள்ள பேஜஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் பைலினை  சேர்க்க.டெலிட் செய்திட எடிட் செய்திட கிராப் செய்திட என நிறைய வசதிகள்கொடுத்துள்ளார்கள். தேவையானதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதுபோல நீங்கள் பிடிஎப்பைலினை பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்கலாம்.இதனை பயன்படுத்துவதால் மற்றவ்ர்கள் உங்கள் பிடிஎப் பைலினை பார்க்க முடியாது. அதுபோல பிடிஎப் பைலினுள் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட். அல்லது இமெஜினை வாட்டர் மார்க்காக கொண்டவரலாம். 
நீங்கள் கொண்டுவரும் வாட்டர்மார்க்கினை பைலின் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில் வைக்கலாம்வாட்டர்மார்க்கினை நாம் சுலபமாக நீக்கிவிடலாம். அதுபோல் எந்த எழுத்துரு .வேண்டிய அளவு,வேண்டிய நிறம் என கொண்டுவரலாம். மேலும் நீங்கள் கொடுக்கும் வார்ட்டர் மார்க்கினை பார்வைக்கு மட்டும் .பிரண்ட் செய்கையில் மட்டும் என கொண்டுவர இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...