அனைத்து புகைப்படங்களிலும் நாம் வாட்டர் மார்க் கொண்டு வர போட்டோஷாப் தவிர்த்து இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் வாட்டர்மார்க் கொண்டு வேண்டிய புகைப்படங்கள் உள்ள போல்டரினை தேர்வு செய்திடவும்.உங்கள் போல்டரில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் உங்களுக்கு கீழ்கண்ட வாறு தெரியவரும்.
இதில் உள்ள Add Text என்பதனை கிளிக்செய்யவும் உங்களுக்கு வலதுபுறம் விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும் வாட்டர் மார்க் வார்த்தையை சேர்க்கவும்.பின்னர் விரும்பும் எழுத்துருவினை தேர்வு செய்யவும். மேலும் எழுத்துக்களின் நிறத்தினையும் நீங்கள் தேர்வு செய்திடலாம். வாட்டர்மார்க்கின் Transparency & Rotaion தேர்வு செய்திடலாம். மேலும் இதில் உள்ள Effect கிளிக் செய்தால் நிறைய மாடல்கள் கொடுத்துள்ளார்கள் தேவையானதை நீங்கள் தேர்வு செய்திடலாம்.
வண்ணங்கள் உங்கள் விரும்பமானதை நீங்கள் டிஸ்பிளே மூலம் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள ;கர்சர் மூலம் நீங்கள் புகைப்படத்தில் விரும்பிய இடத்தில் எழுத்துருவினை அமைத்துக்கொள்ளலாம்.இதற்கு அடுத்த லெவல் செல்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.புகைக்படங்களை சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்திடவும்.
இறுதியாக ஓகே தரவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் தேர்வு செய்திட்ட இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புகைப்படங்கள் வாட்டர் மார்க்குடன் இருப்பதனை நீங்கள் காணலாம். மேலும் வாட்டர் மார்க்காக நீங்கள் லோகோ மற்றும் நீங்கள் விரும்பும் புகைப்படத்தினையும் கொண்டுவரலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment