எனது இந்த பதிவு 100 ஆவது பதிவாகும்.
சினிமாவில் - விளம்பரங்களில் நாம்
போட்டோக்கள் மாறுவதை பார்த்திருப்போம்.
உதாரணத்திற்கு படையப்பா படத்தில்
ரஜினி பாடும் சிங்க நடை போட்டு
சிகரத்தில் ஏறு என்கின்ற பாடலில்
ரஜினி முகம் குழந்தை முகமாகவும் -
புலி முகமாகவும் மாறுவதை பார்த்திருப்
பீர்கள் . அது போல் நாமும் நமது போட்டோ
வில் எப்படி செய்வது என பார்க்கலாம்.
முதலில் ஒரே அளவிளான இரண்டு புகைப்
படத்தை எடுத்து உங்கள் கணிணியின்
ஏதாவது போல்டரில் சேமித்து வைத்துக்
கொள்ளுங்கள்.
இந்த சாப்ட்வேரை முதலில் பதிவிறக்கம்
செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்
கொள்ளுங்கள்.
(குறைந்த அளவு இடம்தான்
இந்த சாப்ட்வேர் பிடிக்கும்). பின்னர்
நீங்கள் இதை திறக்கையில் அதில் உள்ள
மாதிரி படம் உங்களுக்கு கிடைக்கும்.
இதன் கீழ்புறம் பார்த்தால் உங்களுக்கு
Play பட்டன் இருக்கும். அதை Play
செய்யுங்கள். உங்களுக்கு ஒரு ஐடியா
கிடைக்கும். இனி இதுபோல் நமது
புகைப்படத்தை எப்படி கொண்டு வருவது
என பார்க்கலாம்.
இதன் வலப்புறம்பார்ததால் உங்களுக்கு இந்த
காலம் தெரியும். அதில் உள்ள New Project
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு மூன்று வித
மான Sequence கள் கிடைக்கும்.
முதலில் உள்ள Morph Sequence ஆனது
உங்கள் படத்திலிருந்து மற்ற ஒரு
படத்திற்கு மாற பயன்படுவது. அல்லது மற்ற
ஒரு படத்திலிருந்து உங்கள் படம் மாற பயன்
படுவது.
அடுத்து உள்ள Warp Sequence ஆனது
உங்கள் படத்திலேயே நீங்கள் சிரிக்க
கண்ணடிக்க பயன் படுவது.
அடுத்து உள்ள Zoom Pan Sequence ஆனது
உங்கள் படத்தை Zoom செய்ய பயன் படுகிறது.
இப்போது நான் New Project கிளிக் செய்து
அதில் Zoom Pan Sequence தேர்வு செய்துள்ளேன்.
உங்களுக்கு கீழ்கண்ட வாறு படம் வரும்.
இப்போது மேல்புறம் பார்த்தீர்களே யானல்
உங்களுக்கு இந்த மாதிரியான காலம்
தென்படும்.அதில் Projects,Immages,Controls,
Play என நான்கு காலங்கள் தென்படும்.
இதில் உள்ள Immages கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இந்த மாதிரி சாரளம் வரும்.
இப்போது மீண்டும் வலப்புறம் பார்த்தால்
உங்களுக்கு கீழ்கண்ட காலம் தெரியும்.
அதில் உள்ள Import Image - ஐ நீங்கள்
கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே கணிணியில்
சேமித்துவைத்துள்ள படத்தை தேர்வு செய்யவும்.
இப்போது நீங்கள்தேர்வு செய்த படமானது
இரண்டு பக்கத்திலும் வருவதைக்காணலாம்.
இப்போது இந்தப்படங்களை பாருங்கள். அதை
சுற்றி சிவப்பு நிறக்கட்டம் உள்ளதை காண்பீர்கள்.
இது தான் நமது படத்தை எடிட் செய்ய பயன்
படுவது. இதில் முதல் படத்தில் உள்ள
சிவப்பு கட்டத்தை விட்டுவிடுங்கள். அடுத்துள்ள
படத்தின் சிகப்பு நிற கோட்டில் நடுவில் உள்ள
நீல நிறத்தின் மீது கர்சர் வைத்து தள்ளி
வாருங்கள். இப்போது உங்களுக்கு சிவப்பு
கட்டம் சுருங்கி வருவதை பார்ப்பீர்கள்.
இப்போது நான் முகத்தை மட்டும் க்ளோசப்பில்
கொண்டு வந்துள்ளேன்.இனி மேல்புறம் உள்ள
Immages அடுத்துள்ள Control -ஐ கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் கிடைக்கும்.
இப்போது நீங்கள் வலப்புறம் பார்த்தால் உங்களுக்க
கீழ்கண்ட வாறு காலம் கிடைக்கும்.
அதில் Start Delay,Middle Delay,End Delay,Play Time
மற்றும் Play Speed கிடைக்கும். இதில் ஓவ்வொரு
ஆப்ஷன் கீழ் உள்ள சிலைடரை நகர்த்தி
படத்தின் வேகத்தை நீங்களாகவே நிர்ணயித்துக்
கொள்ளலாம். இதன் கீழ் உள்ள பிளே பட்டனை
அழுத்தி நீங்கள் உங்கள் படத்தின் ப்ரிவியூ
பார்த்துக்கொள்ளலாம்.
இப்போது மீண்டும் மேல்புறம் உள்ள
Project கிளிக் செய்யவும்.உங்களுக்கு
பழைய விண்டோ கிடைக்கும். இதில்
உள்ள Add Sequence கிளிக் செய்யவும்.
உங்களுக்கு Sequence பட்டியல் கிடைக்கும்.
அதில் முதலில் உள்ள Morph Sequence
கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஒன்று ஓப்பன் ஆகும்.
மீண்டும் Immage கிளிக் செய்யவும். உங்களுக்கு இந்த
மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது வலப்புறம் உள்ள End Immage -ஐ
கிளிக் செய்யவும். நீங்கள் தேர்வு செய்துள்ள
படத்தை கிளிக் செய்யவும்.
உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும்.
இதில் முதல் இரண்டு படங்கள் கிளியராகவும்
கீழ் உள்ள படம் குழம்பியுள்ளதையும் பார்க்கலாம்.
அடுத்து இப்போது Control -ஐ கிளிக் செய்யவும்.
இப்போது மீண்டும் உங்களுக்கு மேற்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். இப்போது உங்கள்
மவுஸை முதல் படத்தின் அருகே கொண்டு
சென்றால் உங்கள் மவுஸானது பென்சில்
போல் மாறும். இப்போது நீங்கள் முதல் படத்தில்
முகம் முழுவதையும், அடுத்து புருவங்கள்,
மூக்கின் நுனி, வாய், நெற்றிப்போட்டு என
புள்ளிகள் வையுங்கள். இப்போது இரண்டாவது
படத்தை பார்த்தீர்களே யானல் உங்களுக்கு
அதுபோல் புள்ளிகளும் காணப்படும்.
இப்போது இரண்டாவது படத்தின் அருகே
கர்சரை கொண்டு செல்லுங்கள். ஏதாவது
ஒரு புள்ளியை தேர்ந்தேடுங்கள். இப்போது
உங்கள் கர்சரானது ஒரு கையாக மாறும்.
முதல் படத்தை பாருங்கள். நீங்கள் தேர்வு
செய்த புள்ளி மட்டும் பிரகாசிப்பதை பார்ப்பீர்கள்.
இப்போது இரண்டாவது படத்தில் உள்ள
புள்ளியை முதல் படத்தில் உள்ள உருவத்திற்கு
எற்ற இடத்தில் நகர்த்துங்கள்.(உதாரண்த்திற்கு
நீங்கள் முதல் படத்தில் நெற்றிப்பொட்டை
தேர்ந்தெடுத்தால் அடுத்த படத்தில் உள்ள
புள்ளியை நெற்றிப்பொட்டுக்கு நகர்த்துங்கள்.
முதல் படத்தில் மூக்கின் நுனியில் புள்ளி
வைத்தால் இரண்டாவது படத்திலும் உள்ள
புள்ளியையும் மூக்கின் நுனிக்கு நகர்த்தவும்)
இதில் உள்ள பிளே பட்டனை அழுத்தி ப்ரிவியூ
பார்த்துக்கொள்ளுங்கள். இதில் உள்ள
வேகங்களை முன்பு சொன்னவாறு நீங்கள்
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வாறு
நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும் Projects தேர்வு
செய்யுங்கள். மீண்டும் Add Sequence
தேர்வு செய்யுங்கள். வரும் காலத்தில்
இப்போது Wrap Sequence தேர்வு செய்யுங்
கள். இப்போது உங்களுக்கு இந்த மாதிரி
படம் கிடைக்கும். இதிலும் மீண்டும்
Controls கிளிக் செய்து புள்ளிகள் வைக்கவும்.
இதில் கண்களுக்கு மேல்புறம் நெருக்கமான
புள்ளிகளும் கண்ணின் கீழ்புறம் இடைவெளி
விட்டும் புள்ளிகள் வைக்கவும். இனி இடப்புறம்
உள்ள படத்திற்கு வரவும். இதில் கண்ணில்உள்ள
ஒன்று விட்ட புள்ளிகளை கீழ்புறம் உள்ள
புள்ளிகளின் இடை இடையே நகர்த்தவும்.
அதுபோல் வாயின் ஓரம் புள்ளிகள் வைத்து
அடுத்த படத்தில் அந்த புள்ளிகளை மேல்புறம்
நகர்த்துங்கள். இது பழக பழக தான் ந்னறாக
வரும். இப்போது பார்ததீர்களேயானல்
உங்கள் படம் கண் சிமிட்டி லேசாக புன்னகை
செய்வதை காணலாம்.வேக கட்டுப்பாடடை
நிங்கள் நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.
கடைசியாக மேல்புறம் உள்ள Play பட்டனை
அழுத்துங்கள். உங்களுக்கு இதுவரை செய்த
படங்கள் Preview வாக தெரியும்.
நீங்கள் மீண்டும் Project கிளிக் செய்ய
உங்களுக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும்.
இதுவரை நீங்கள் செய்த படங்களின்
தொகுப்பை கீழே காணலாம்.
இதில் நீங்கள் எந்த பாகத்தின் பட பிரிவியூ
வேண்டுமோ அதை கிளிக் செய்து
பிளே செய்து பார்க்கலாம்.
இதன் வலப்புறம் பார்த்தால் உங்களுக்கு
இதைசேமிக்கும் வசதி இருக்கும்.
இதில் உள்ள Return கிளிக் செய்தால் நீங்கள்
உருவாக்கிய படம் மீண்டும் மீண்டும் வரும்.
அடுத்து Set Size . இதை கிளிக் செய்து
படத்தின் நீள அகலத்தை நீங்கள் தேர்வு
செய்து கொள்ளலாம். அதே போல்
நீங்கள் விரும்பிய வார்த்தைகளையும்
பின்புற படங்களையும் மாற்றிக்கொள்ளலாம்.
இதில் உள்ள Print Frame - Save Frame
உபயோகம் நமக்கு Adope Photo Premiere
Software -ல் உபயோகப்படும். அதை
பின்னர் பார்க்கலாம். இறுதியாக Save
Animation. இதை கிளிக் செய்தால் உங்களுக்கு
ஏழு வகையான பார்மெட்டுக்கள் கிடைக்கும்.
நாம் இதில் உள்ள AVI Formet தேர்வுசெய்து
ஓகே கொடுத்துள்ளேன். இந்த படம் கணிணியில்
ஏதாவது ஒரு டிரைவில் சேமிக்கவும்.
சில் நிமிடங்கள் காத்திருக்கவும். இப்போது
உங்கள் படம் ரெடி.
நான் தயாரித்த படத்தை நீங்கள் மேற்புறம்
உள்ள வீடியோ பார்மட்டில் பார்க்கலாம்.
இது வரை எனது புகைப்படத்தை பதிவில்
போட்டதில்லை. இந்த 100 வது பதிவில்
எனது மகன் உருவில் இருந்து மாறும்
புகைப்படம் அடியேன் தான்.
(பார்க்க சுமாராக இருக்கின்றேனா?)
பாடலுடன் சேர்த்த வீடியோபடம் கீழ் புறம்
இணைத்துள்ளேன்.
பின் குறிப்பு:- இதில் உள்ள ஒவ்வொரு
Sequence -ஐ யும் தனி தனியேவும்
நீங்கள் பயன்படுத்தி வீடியோவாகவும்
சேமிக்கலாம். இது எனது 100 வது
பதிவாக இருப்பதால் அனைத்து
Sequence -ம் மொத்தமாக பதிவிட்டுள்ளேன்.
பொறுமையாக முயற்சி செய்து பாருங்கள்.
வீடியோ படம் அழகாக வரும்.
ALL THE BEST.
பதிவை பாருங்கள். பிடித்திருந்தால்
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
100 வது பதிவை இதுவரை பார்த்தவர்கள்
28 comments:
excellent.thank you.
வாழ்த்துக்கள்..100 வது பதிவிற்கு..
நான் உங்கள் தளத்தை பார்த்துதான் ப்ளாக்கையே அறிந்து கொண்டேன்..
உங்கள் போட்டோசாப் பாடம் நான் விரும்பி படிக்கும் பதிவு...
வாழ்த்துக்கள்...100 வது சிறந்த பதிவிற்கு...
100-வது பதிவிற்கு வாழ்த்துகள்!
பதிவுக்கும் வாழ்த்துகள்!
மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
மிக மிக சந்தோசமாக உள்ளது.
வளர்ச்சிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்..100 வது பதிவிற்கு.
///பொறுமையாக முயற்சி செய்து பாருங்கள்.
வீடியோ படம் அழகாக வரும். ///
excellent.thank you.
அருமையான மென்பொருளை 100 பதிவாக ஏற்றியதற்கு வாழ்த்துகள்.
வாழ்த்துகள் நண்பா 100க்கு உங்க பதிவு அனைத்தும் ரொம்ப உபயோகமான பதிவுகள்
உங்களுக்கு தெரிந்தை படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ரொம்ப சிறப்பான பன்பு
sam கூறியது...
excellent.thank you.//
எனது பதிவை முதன் முதலாக பின்தொடர்ந்தவர்கள் தாங்கள். இப்போது 100 வது பதிவிலும் வந்துள்ளீர்கள். நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Kanna கூறியது...
வாழ்த்துக்கள்..100 வது பதிவிற்கு..
நான் உங்கள் தளத்தை பார்த்துதான் ப்ளாக்கையே அறிந்து கொண்டேன்..
உங்கள் போட்டோசாப் பாடம் நான் விரும்பி படிக்கும் பதிவு...
வாழ்த்துக்கள்...100 வது சிறந்த பதிவிற்கு...//
நன்றி கண்ணா அவர்களே...போட்டோஷாப் பாடம் கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி.
வாழ்த்தியமைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
குடந்தை அன்புமணி கூறியது...
100-வது பதிவிற்கு வாழ்த்துகள்!
பதிவுக்கும் வாழ்த்துகள்!//
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பர் குடந்தை அன்புமணி
அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஜுர்கேன் க்ருகேர்..... கூறியது...
மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
மிக மிக சந்தோசமாக உள்ளது.
வளர்ச்சிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பர் ஜுர்கேன் க்ருகேர் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
த.ஜீவராஜ் கூறியது...
வாழ்த்துக்கள்..100 வது பதிவிற்கு.
///பொறுமையாக முயற்சி செய்து பாருங்கள்.
வீடியோ படம் அழகாக வரும். ///
excellent.thank you.//
நன்றி நண்பர் த.ஜீவராஜ் அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
வடுவூர் குமார் கூறியது...
அருமையான மென்பொருளை 100 பதிவாக ஏற்றியதற்கு வாழ்த்துகள்.//
நன்றி வடுவூர் குமார் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Suresh கூறியது...
வாழ்த்துகள் நண்பா 100க்கு உங்க பதிவு அனைத்தும் ரொம்ப உபயோகமான பதிவுகள்
உங்களுக்கு தெரிந்தை படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ரொம்ப சிறப்பான பன்பு//
வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்
நன்றி நண்பர் சுரேஷ் அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
வெடி சத்தம் கேக்குதா ? தலீவா !! அல்லாம் உங்க 100-வது,பதிவுக்கு
தான் வாஜாரே,
சும்மா, தூளு கேலப்பிட்ட போ , இன்னா இன்னா மேரி உஸ்தாது வேல அல்லாம் சும்மா.ஜிலேப்பி கணக்கா, சொல்லி தர்றே,
அதுக்கோசரம் உனுக்கு ஒரு சலாம் வாஜாரே,
எனுக்குஉன்கிட்ட புட்ச விசயமே, உனக்கு தெர்ஞ்ச மேட்டர, ரொம்பசுளுவா,
அப்பிடியே,அசால்டா, கத்து
குடுக்குற பாணி,
சோக்கு தான்,
இல்லன்னா ,
சும்மா ஒன்னிமே தெரியாத என்ன கூட இந்த பொட்டிய(commputer) பத்தி பிரியற மேரி பண்ணிட்டியே ?
தலீவா !!
இந்த 100- வது பதிவுக்கு எங்க பேட்ட சார்பா உனுக்கு வாழ்த்துக்கள்.
கலக்கு தலீவா !!!
டவுசர் பாண்டி. கூறியது...
வெடி சத்தம் கேக்குதா ? தலீவா !! அல்லாம் உங்க 100-வது,பதிவுக்கு
தான் வாஜாரே,
சும்மா, தூளு கேலப்பிட்ட போ , இன்னா இன்னா மேரி உஸ்தாது வேல அல்லாம் சும்மா.ஜிலேப்பி கணக்கா, சொல்லி தர்றே,
அதுக்கோசரம் உனுக்கு ஒரு சலாம் வாஜாரே,
எனுக்குஉன்கிட்ட புட்ச விசயமே, உனக்கு தெர்ஞ்ச மேட்டர, ரொம்பசுளுவா,
அப்பிடியே,அசால்டா, கத்து
குடுக்குற பாணி,
சோக்கு தான்,
இல்லன்னா ,
சும்மா ஒன்னிமே தெரியாத என்ன கூட இந்த பொட்டிய(commputer) பத்தி பிரியற மேரி பண்ணிட்டியே ?
தலீவா !!
இந்த 100- வது பதிவுக்கு எங்க பேட்ட சார்பா உனுக்கு வாழ்த்துக்கள்.
கலக்கு தலீவா !!!//
நீண்ட வாழ்த்துக்கு நன்றி டவுசர் பாண்டி அவர்களே...
உங்கள் பாணியில் எனக்கு எழுத தெரியவில்லை...கருத்துக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
நண்பர் வேலன் அவர்களே! ஒரு சிறந்த ஆசிரியர் போல சொல்லிகொடுக்கிறீர்கள். மிக்க நன்றி. உங்கள் பணி இதுபோல் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.
Please Add e-mail subscription.
நீங்கள் சுமாராக இல்லை, சூப்பராக இருக்கின்றீர்கள்.
அன்புடன்
ச. அன்வர்.
100வது இடுகைக்கு வாழ்த்துகள் வேலன் அவர்களே!.பதினைந்து நாட்களுக்குப் பிறகு தமிழ் மணத்திற்க்கு வருகிறேன்.(என்னுடைய கணினியில் கொஞ்சம் பிரச்சனை அவ்வளவுதான்).வந்தவுடன் கண்டது தங்களின் 100வது இடுகையைத்தான். உபயோகமில்லாத, வீணான விஷயங்களே மிகவும் அதிகம் இருக்கும் தமிழ் வலைப்பூக்களில் தாங்களும், தமிழ்நெஞ்சம் போன்ற சில நண்பர்கள் மட்டுமே பல நல்ல விஷயங்களைத் தருகிறீர்கள்.எனவே தாங்கள் 100வது இடுகை மட்டுமல்ல ஆயிரம் ஆயிரம் உபயோகமான இடுகைகளை பதிவிட வேண்டும் என்று என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
Kripa கூறியது...
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.
நன்றிகள் பல...
- நம் குரல்//
தாங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன் நண்பரே...வருகைககும் கரு்ததுரைக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
Anwar கூறியது...
நண்பர் வேலன் அவர்களே! ஒரு சிறந்த ஆசிரியர் போல சொல்லிகொடுக்கிறீர்கள். மிக்க நன்றி. உங்கள் பணி இதுபோல் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.
Please Add e-mail subscription.
நீங்கள் சுமாராக இல்லை, சூப்பராக இருக்கின்றீர்கள்.
அன்புடன்
ச. அன்வர்.//
நன்றி நண்பர் அன்வர் அவர்களே...
இ-மெயில் சேர்த்துவிடுகின்றேன்.
வாழ்க வளமு்டன்,
வேலன்.
நல்லதந்தி கூறியது...
100வது இடுகைக்கு வாழ்த்துகள் வேலன் அவர்களே!.பதினைந்து நாட்களுக்குப் பிறகு தமிழ் மணத்திற்க்கு வருகிறேன்.(என்னுடைய கணினியில் கொஞ்சம் பிரச்சனை அவ்வளவுதான்).வந்தவுடன் கண்டது தங்களின் 100வது இடுகையைத்தான். உபயோகமில்லாத, வீணான விஷயங்களே மிகவும் அதிகம் இருக்கும் தமிழ் வலைப்பூக்களில் தாங்களும், தமிழ்நெஞ்சம் போன்ற சில நண்பர்கள் மட்டுமே பல நல்ல விஷயங்களைத் தருகிறீர்கள்.எனவே தாங்கள் 100வது இடுகை மட்டுமல்ல ஆயிரம் ஆயிரம் உபயோகமான இடுகைகளை பதிவிட வேண்டும் என்று என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!//
கணிணியில் நான் அறிந்துகொண்டதை பிறரும் அறிந்துகொள்ளட்டும் என தெரிவிக்கின்றேன். அவ்வளவுதான்..
உங்களைபோல் நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதம் இருந்தால் ஆயிரமாவது பதிவையும் வெளியிடுவதில் பெறுமையடைவேண் என பணிவுடன் கூறிக்கொள்கின்றேன்.
தாங்கள் கருத்துக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வாழ்த்துகள் வேலன்,
உங்களின் 100வது பதிவிற்கு நேரம் கடந்த வாழ்த்திற்கு மன்னிக்கவும்.
நான் வீடு மாறியதால் சில வாரங்கள் இணையத்தைப் பயன்படுத்த முடியாமல் போனது.
போட்டோ மார்பிங் அருமையாக சுலபமாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் நன்றாக உள்ளது.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
வாழ்த்துக்கள் வேலன்
100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
உங்கள் உழைப்புக்கு நன்றிகள்.
என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்,
த.நெ.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வாழ்த்துகள் வேலன்,
உங்களின் 100வது பதிவிற்கு நேரம் கடந்த வாழ்த்திற்கு மன்னிக்கவும்.
நான் வீடு மாறியதால் சில வாரங்கள் இணையத்தைப் பயன்படுத்த முடியாமல் போனது.
போட்டோ மார்பிங் அருமையாக சுலபமாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் நன்றாக உள்ளது.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..பதிவுகளில் தாங்களை காணவில்லையே என குழம்பிகொண்டிருந்தேன். தாங்களின் மேலான கருத்துக்களுக்கு காத்துக்கொண்டிருக்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
கிரி கூறியது...
வாழ்த்துக்கள் வேலன்
நன்றி கிரி அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
தமிழ்நெஞ்சம் கூறியது...
100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
உங்கள் உழைப்புக்கு நன்றிகள்.
என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்,
த.நெ.//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நான் இந்த மென்பொருளை பாவித்துள்ளேன் ஆனால் இப்போது என்னிடம் இல்லை. இப்போது இந்த மென்பொருள் எனக்கு தேவைப்படுகிறது எனக்கு உதவ முடியுமா????
உங்களாது link வேலைசெய்ய மறுக்கிறது தயவுசெய்து வெறு ஒரு link தர முடியுமா???
email: justisam2009@gmail.com
நன்றி
Post a Comment