சுற்றி அழகான கலரில் பார்டர் இதில் செய்யலாம். அதைப்பற்றி இன்றைய
பாடத்தில் காணலாம்.முதலில் இந்த ரோஜாப் பூவினை எடுத்து உள்ளேன்.
இப்போது இந்த பூவினை சுற்றி மார்க்யு டூலால் செவ்வகம்
வரைந்துள்ளேன். படத்தினை பாருங்கள்.
இப்போது நீங்கள் மவுஸில் ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள
Feather உங்களுக்கு தேவையான Radius வைத்துக்கொள்ளுங்கள்.
ஓ.கே. கொடுங்கள்.
வழக்கப்படி Ctrl+C - Ctrl+N-Enter -Ctrl+V செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது பூவினை சுற்றி மார்க்யு டூலால் ஓரத்தில் செவ்வகம்
வரையுங்கள். அடுத்து Edit -கிளிக் செய்து அதில் உள்ள Stroke
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.
இதில் Width உங்களுக்கு எந்த பிக்ஸல் அளவிற்கு வேண்டுமோ
அதை தட்டச்சு செய்யுங்கள்.அதன் கீழே உள்ள கலர் பாக்ஸில்
நீங்கள் கிளிக் செய்ய உங்களுக்கு கலர் பிக்கர் -Color Picker -வரும்.
உங்களுக்கு தேவையான நிறத்தினை தேர்ந்தெடுங்கள். நான் சிகப்பு
கலரினை தேர்வு செய்துள்ளேன்.
அடுத்துள்ளது நீங்கள் தேர்வு செய்த கட்டத்திற்கு உள்புறம் - நடுவில்-
வெளிப்புறம் - இதில் எங்கு கலர் கோடு வரவேண்டுமோ -inside-
center-out side -இதில் எது வேண்டுமோ அதை
தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள படத்தினை பாருஙகள்.
இப்போது சிகப்பு கலரின் முன் அதைப்போல் மார்க்யு டூலால்
செவ்வகம் வரையுங்கள். முன்பு போல் செய்யுங்கள்.
நான் பச்சை கலரை கொடுத்துள்ளேன். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
தனியே பார்டர் போடுவது பார்த்தோம். ஆனால் படத்தை சுற்றியே
கோடு வருவது பற்றி பார்க்கலாம். நான் திரிஷா அவர்களின் படத்தை
எடுத்துக்கொண்டுள்ளேன்.
பென்டூல் மூலம் அவரை சுற்றி கட் செய்தேன். படத்தை தனியே
காப்பி செய்தேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது முன்பு சொல்லிகொடுத்தது மாதிரியே செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள.
இப்போது அடுத்துள்ள படத்தினை பாருங்கள். பச்சை நிறத்தினை
அடுத்து மஞ்சள் நிறம் தேர்வு செய்துள்ளேன்.
அடுத்துள்ள படத்தினை பாருங்கள். சிகப்பு நிறம் தேர்வு செய்து
உள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
இவ்வாறு தேர்வு செய்த படத்தினை சுற்றிலும் கூட நாம்
மார்க்யு டூலில் உள்ள நீள்வட்டமும் தேர்வு செய்யலாம். டிசைன்
செய்துள்ள படத்தினை பாருங்கள்.
அதைப்போல் கூட்டத்தில் உள்ள ஒருவரை தனியே அடையாளம்
காண்பிக்கலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
நண்பர் ஒருவரின் திருமண படம். இதில் எனது மகனை அடையாளம்
காண்பதற்காக அவரை சுற்றி பச்சை நிற கோடு போட்டுள்ளேன்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
இன்ப அதிர்ச்சி காத்திருக்கின்றது... ...அதுவரை இன்றைய பதிவினை
பாருங்கள். பிடித்திருந்தால் மறக்கமால் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
போட்டோஷாப்பில் Stroke பற்றி இதுவரை படித்தவர்கள்:-
JUST FOR JOLLY PHOTOES:-
இந்த படத்தை ஜாலியாக எடுக்க வேண்டாம். சீரிஸாகவே பாருங்கள்.
புகைப்பழக்கத்தை விட்டால் மகிழ்ச்சியே...
17 comments:
அன்பின் வேலன்
அருமையான முறையில் பொறுமையாக கற்றுக் கொடுக்கிறீர்கள்
கற்கிறேன்
நன்றி - நல்வாழ்த்துகள்
மறு மொழி பின் தொடர இம்மறுமொழி
வேலன் சார்,
எங்கே இருக்கிறது உங்கள் பள்ளி நானும் சேர்ந்து படிக்கப்போகிறேன், உங்கள் பள்ளியில் அழகாக மற்றும் எளிதில் புரியும் வண்ணம் வண்ணப் படங்களோடு ஐஸ்வர்யா மற்றும் திரிஷா எல்லோரும் இருக்ககின்றார்கள் போலிருக்கிறதே
அதற்காகவே சேர்ந்து படிக்க வேண்டும் போலிருக்கிறது.....
வாழ்த்துகள் சார் பதிவு அருமையாக உள்ளது. ஆனால் பதிவைவிட
பதிவில் உள்ள பு்கைப்படத்தில் நம் மக்கள் கவனம் சென்று விடுமோ
என்று நினைக்கத் தோன்றுகிறது.
அடுத்த முறை ஏதாவது குழந்தைகள் படத்தை போட்டு பாருங்கள்
அந்தப் பதிவிற்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம.
வளர்க உங்கள் பணி
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
cheena (சீனா) கூறியது...
அன்பின் வேலன்
அருமையான முறையில் பொறுமையாக கற்றுக் கொடுக்கிறீர்கள்
கற்கிறேன்
நன்றி - நல்வாழ்த்துகள்//
முதல்முறையாக வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன்...
வாழ்த்தியமைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
cheena (சீனா) கூறியது...
மறு மொழி பின் தொடர இம்மறுமொழிஃ
நன்றி நண்பரே....
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,
எங்கே இருக்கிறது உங்கள் பள்ளி நானும் சேர்ந்து படிக்கப்போகிறேன், உங்கள் பள்ளியில் அழகாக மற்றும் எளிதில் புரியும் வண்ணம் வண்ணப் படங்களோடு ஐஸ்வர்யா மற்றும் திரிஷா எல்லோரும் இருக்ககின்றார்கள் போலிருக்கிறதே
அதற்காகவே சேர்ந்து படிக்க வேண்டும் போலிருக்கிறது.....
வாழ்த்துகள் சார் பதிவு அருமையாக உள்ளது. ஆனால் பதிவைவிட
பதிவில் உள்ள பு்கைப்படத்தில் நம் மக்கள் கவனம் சென்று விடுமோ
என்று நினைக்கத் தோன்றுகிறது.
அடுத்த முறை ஏதாவது குழந்தைகள் படத்தை போட்டு பாருங்கள்
அந்தப் பதிவிற்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம.
வளர்க உங்கள் பணி
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
குழந்தைகளின் படங்கள்-கோயில் படங்கள் போட்டோஷாப்பில் எடுபட வில்லை...மாணவர்கள் நடிகையைதான் விரும்புகின்றார்கள்...
தங்கள் கூறிய படி அடுத்த பதிவில் குழந்தைகளின் படத்தை போடுகின்றேன். பார்க்கலாம்...வரவேற்பு எப்படி இருக்கின்றது என...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
இப்போது கருத்துக்கள் தெளிவாக படிக்கமுடியும் என எண்ணுகின்றேன்.கருத்துக்களின் நிறம் மாற்றி விட்டேன். பார்த்து சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
நன்றி வேலன். என்போன்றோர்க் கெல்லாம் உப்யோகமான தொடர் பதிவு.நன்றி. பேஜ் மேக்கர் தெரியுமா?
அதையும் பாடமாகப் பதிவிடுங்களேன்.
SP.VR. SUBBIAH கூறியது...
நன்றி வேலன். என்போன்றோர்க் கெல்லாம் உப்யோகமான தொடர் பதிவு.நன்றி. பேஜ் மேக்கர் தெரியுமா?
அதையும் பாடமாகப் பதிவிடுங்களேன்.//
ஆசிரியரிடமிருந்தே பாராட்டு... நன்றி அய்யா...போட்டோஷாப் பாடமே 200 பதிவிற்கு வரும்...இருப்பினும் தங்கள் ஆலோசனையை ஏற்கின்றேன் அய்யா...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆசிரியர் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வேலன் சார்.
படம் சாரி பாடம் அட்டகாசம் :)
தலைய சுத்தி ஒளி வட்டம் போடணும் எனில் இந்த உத்தி உபயோகமாக இருக்கும் :)
திரிசா படத்தில் இருந்து அப்படியே கொஞ்ச கொஞ்சமா மேல போய்.. நமீதா படம் வரை பாடங்கள் சக்கை போடு போட விரும்பி ,,, வேண்டி ,,இறைந்து, மன்றாடி ,,,,,கெஞ்சி ,,,,,பணிவன்புடன் ... கணம் ஆசிரியர் அவர்களை ,கேட்டு கொள்கிறேன்...
நன்றி !
இவ்வளவு எளிமையா கூட சொல்லி குடுக்க முடியுமா?
ரொம்ப நல்ல இருக்கு. மிக்க நன்றி.
யூர்கன் க்ருகியர் கூறியது...
வேலன் சார்.
படம் சாரி பாடம் அட்டகாசம் :)
தலைய சுத்தி ஒளி வட்டம் போடணும் எனில் இந்த உத்தி உபயோகமாக இருக்கும் :)
திரிசா படத்தில் இருந்து அப்படியே கொஞ்ச கொஞ்சமா மேல போய்.. நமீதா படம் வரை பாடங்கள் சக்கை போடு போட விரும்பி ,,, வேண்டி ,,இறைந்து, மன்றாடி ,,,,,கெஞ்சி ,,,,,பணிவன்புடன் ... கணம் ஆசிரியர் அவர்களை ,கேட்டு கொள்கிறேன்...
நன்றி !//
எல்லா நடிகைகளின் படங்களையும் போடலாம். ஆனால் முகத்திற்கு மாஸ்க் போட்டிருப்பார்கள் பரவாயில்லையா..
வாழ்க வளமுடன்,
வேலன்.
மகேஷ்வரன் ஜோதி கூறியது...
இவ்வளவு எளிமையா கூட சொல்லி குடுக்க முடியுமா?
ரொம்ப நல்ல இருக்கு. மிக்க நன்றி.//
பெங்களுரில் இருந்து நமது பதிவிற்கு முதன் முதலில் வந்துள்ளீர்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்,
வேலன்.
மிகவும் பயனுள்ள கட்டுரைகள் வேலன் போட்டோஷாப் வகுப்பில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்....நான் நித்தியானந்தம், தமிழ் கம்ப்யூட்டர் வாயிலாக உங்களை இணையத்தில் பிடித்துவிட்டேன்...தமிழ் கம்ப்யூட்டரில் உங்களுடைய கட்டுரைகளும் சிறப்பாக உள்ளது வேலன்..வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதவும்.... நன்றி!!
நித்தியானந்தம் கூறியது...
மிகவும் பயனுள்ள கட்டுரைகள் வேலன் போட்டோஷாப் வகுப்பில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்....நான் நித்தியானந்தம், தமிழ் கம்ப்யூட்டர் வாயிலாக உங்களை இணையத்தில் பிடித்துவிட்டேன்...தமிழ் கம்ப்யூட்டரில் உங்களுடைய கட்டுரைகளும் சிறப்பாக உள்ளது வேலன்..வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதவும்.... நன்றி!!//
வாருங்கள் நண்பரே...பாரிசிலிருந்து தமிழ்கம்யூட்டர் மூலம் வந்துள்ளீர்கள்.
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்:,
வேலன்.
Stroke lesson is good. Thank u sir. I also accept Mr. Muthukumar's suggession.
அருமையான முறையில் பொறுமையாக கற்றுக் கொடுக்கிறீர்கள்
வேலன் சார்
குட் மோர்னிங் சார் . நீங்க எங்க இருக்கிங்க ஒங்ககிட்ட எத்தனை கம்ப்யூட்டர்
பாடம் இருக்கிறது. பிளீஸ் ஹெல்ப் மீ சார் மி கண்டேக்ட் நம்பர் 9710050011 .
பிளீஸ் ஹெல்ப் ...................
Post a Comment