வேலன்:-பேசும் கால்குலேட்டர்



நமது குழந்தைகளுக்கு நாம் விளையாட வீடியோகேம்ஸ்
வாங்கித்தருவோம். ஆனால் அதை தவிர்த்து அவர்களுக்கு
அறிவு வளர இந்த கால்குலேட்டரை பதிவிறக்கி
அவர்களுக்கு கொடுத்தால் கணித அறிவு சிறிதாவது உயரும்
என்பது நிச்சயம் இது 3 முதல் 7 வயது வரை உள்ள குழந்தை
களுக்கான கால் குலேட்டர்.

இதில் நாம் எண்களை தட்டச்சுசெய்கையில் அது அந்தஎண் பற்றி
குறிப்பிடும். அதைப்போல்எண்குறியிடுகளை சொல்வதுமட்டும் அல்லாதுவிடையையும்சொல்லும். ஆங்கிலத்துடன் சேர்த்து
மேலும்இதர மொழிகள் அதில் நான்கு உள்ளன.

முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.

இப்போது இதை டவுண்லோடு செய்து இன்ஸ்டால்
செய்ததும் உங்கள் கால் குலேட்டரானது டாக்ஸ்க்பாரில்
அமர்ந்துகொள்ளும்.



இதில் நாம் கணக்கிணை செய்கையில் அதில் உள்ள
விண்டோவில் எண்கள் ஒலியுடன் வரும். = அழுத்த
விடை கீழே உள்ள விண்டோவில் வரும்.



இதில் Speak Question,Speak Answer,Copy Question,Paste Question,
Question History & Paste answer and question ஆகிய வசதிகள்
இதில் உளளது.


இதில் உள்ள Preferences கிளிக் செய்வதால் மேற்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும். அதில் குறிப்பிட்டுள்ள ரேடியோ பட்டனை
கிளிக் செய்து உங்களுக்கு தேவையான வசதிகளை பெறலாம்.
அதன் கீழே Conversions உள்ளது. அதில் உள்ள சிறிய அம்புக்
குறியை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.


இதில் எந்த அளவினை எந்த அளவிற்கு மாற்ற வேண்டுமோ
அந்த அளவினை மாற்றி காணலாம். இந்த சாப்ட்வேர்
3 எம்.பி. அளவிற்குதான் வரும். பயன்படுத்தி பாருங்கள்.
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்
.


இதுவரை பேசும் கால்குலேட்டரை பயன்படுத்தியவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

Muthu Kumar N said...

வேலன் சார்,

கால்குலேட்டர் நன்றாக பேசுகிறது.

நல்ல பதிவு சிறார்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

கால்குலேட்டர் நன்றாக பேசுகிறது.

நல்ல பதிவு சிறார்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

நன்றி நண்பரே...பதிவில் எழுத்துக்கள் சரியாக தெரிகின்றதா?

வாழ்கவளமுடன்.
என்றும் அன்புடன்,
வேலன்.

Malu said...

good posting. Still I didnt read the content. I blocked the content and then I read it. Can you please change the font color or background color?

வேலன். said...

Malu கூறியது...
good posting. Still I didnt read the content. I blocked the content and then I read it. Can you please change the font color or background color?//

நண்பருக்கு,

தங்கள் குறை நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இப்போது படிப்பதில் தங்களுக்கு சிரமம் இருக்காது என எண்ணுகின்றேன். சிரமம் இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

vilayaattu said...

குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்கள், மாணவர்கள் மற்றும் எல்லா துறையினருக்கும் வேண்டிய அணைத்து வகையான கால்குலடோர்கள் இங்கு http://easycalculation.com ஆன்லைனில் உள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும்.... நன்றி!

வேலன். said...

குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்கள், மாணவர்கள் மற்றும் எல்லா துறையினருக்கும் வேண்டிய அணைத்து வகையான கால்குலடோர்கள் இங்கு http://easycalculation.com ஆன்லைனில் உள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும்.... நன்றி

தகவலுக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...